பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 346 ரன்கள் குவிப்பு

டேவிட் வார்னர் 164 ரன்களில் ஆட்டமிழந்தார்.பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 346 ரன்கள் குவிப்பு
Published on

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். வார்னர் 41 பந்தில் அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக கவாஜா நிதானமாக விளையாடினார். இதனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது.

முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. கவாஜா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 16 ரன்னிலும் ஸ்மித் 31 ரன்னிலும் வெளியேறினார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய திராவிஸ் ஹெட் 40 ரன்னிலும் டேவிட் வார்னர் 164 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஸ் 15 ரன்னிலும் அலெக்ஸ் கேரி 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com