என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • கடைசி 7 பந்தில் மட்டுமே 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி2 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. முதல் போட்டி மழையால் முழுவதுமாக தடைப்பட்டது.

    2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

    இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். அதோடு, தனது 29-வது பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் எந்த பந்து வீச்சாளரும் செய்யாத உலக சாதனை ஒன்றை அவர் நிகழ்த்தியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஒரே பவுலர் என்ற உலக சாதனையை இந்திய பவுலர் குல்தீப் யாதவ் நிகழ்த்தியுள்ளார்.

    குல்தீப் யாதவ் 2.5 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். கடைசி 7 பந்தில் மட்டுமே 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 17 ரன்கள் விட்டுக் கொடுத்த அவர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

    இதற்கு முன்னதாக இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் தனது பிறந்தநாளில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். இந்த சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார். இதே போன்று கடந்த 2018-ம் ஆண்டு மான்செஸ்டரில் இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

    • ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஐ.பி.எல். பாணியில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொடரை பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டு பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

    இந்நிலையில் டி10 கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபரில் இத்தொடர் நடத்தபடலாம் என கூறப்படுகிறது.

    பல நாடுகளில் டி10 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவிலும் இந்த தொடர் நடக்கவிருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.
    • இதனை தொடர்ந்து ஒருநாள் தொடர் 17-ந் தேதி தொடங்குகிறது.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. இதனை தொடர்ந்து ஒருநாள் தொடர் 17-ந் தேதி தொடங்குகிறது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 26-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

    இதற்கான இந்திய சீனியர் வீரர்களில் ஒருவரான விராட் கோலி இன்று தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் விமான நிலையத்தில் நடந்து சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதம் அடித்துள்ளார்.
    • மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர்.

    ஜோகன்ஸ்பர்க்:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.

    ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் சூர்யகுமார் யாதவ் தட்டிச் சென்றார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ( இருவரும் தலா 4 சதம் ) உடன் முதல் இடத்தை சூர்யகுமார் பகிர்ந்துள்ளார்.

    ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும், மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி 4 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டி, சென்னை லீலா பேலஸில் இன்று தொடங்கி வருகிற 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
    • இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டி, சென்னை லீலா பேலஸில் இன்று தொடங்கி வருகிற 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட்- ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடுவார்கள். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.

    இந்தியாவின் தலைசிறந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்களான டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி போன்ற வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பாக அமையும். மேலும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே, மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. உணவு இடைவேளைக்கு பிறகு சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பாகிஸ்தான் கைப்பற்றியது.

    ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசி அசத்தினார். அவர் டேவிட் வார்னர் 164 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்கள் எடுத்தது.மிட்செல் மார்ஸ் 15 ரன்னிலும் அலெக்ஸ் கேரி 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இந்தப் போட்டியில் பீல்டிங்கின் போது சூர்ய குமார் யாதவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
    • தற்போது நான் நலமாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது.

    கேப்டன் சூர்யகுமார் யாதவ் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 56 பந்தில் 100 ரன்னும் (7 பவுண்டரி, 8 சிக்சர்), ஜெய்ஷ்வால் 41 பந்தில் 60 ரன்னும் (6 பவுண்டரி,3 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகராஜ், லிசாட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் 95 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    டேவிட் மில்லர் அதிகபட்சமாக 25 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மார்க்ராம் 14 பந்தில் 25 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்தப் போட்டியில் பீல்டிங்கின் போது சூர்ய குமார் யாதவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பெவிலியன் சென்ற அவர் களத்துக்கு வரவில்லை. 

    வெற்றி குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    தற்போது நான் நலமாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது. காயத்தால் பயம் எதுவுமில்லை. எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. சதம் அடித்தது அற்புதமாக இருந்தது.

    இந்த சதம் வெற்றிக்காக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பயமில்லாத கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். வீரர்களின் திறமையை நினைத்துப் பெருமைபடுகிறேன்.

    குல்தீப் யாதவ் பிறந்தநாளில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சிறந்த பிறந்தநாள் இதுவாகும்.

    இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

    அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 17-ந் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகேந்திரசிங் தோனி இந்திய அணியில் இடம் பிடித்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
    • சச்சினை கவுரவிக்கும் வகையில் அவரது 10-ம் நம்பர் ஜெர்சிக்கு 2017-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 1998ஆம் ஆண்டுமுதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். முதல் முதலில் பீகார் அணிக்காகக் களமிறங்கிய அவர், அடுத்து இந்திய அணியில் இடம் பிடித்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

    இந்த நிலையில், மகேந்திரசிங் தோனி கிரிக்கெட்டுக்கு செய்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு பி.சி.சி.ஐ. ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    இதன்மூலம் ஜெர்சி '7' ஐ இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக சச்சினை கவுரவிக்கும் வகையில் அவரது 10-ம் நம்பர் ஜெர்சிக்கு 2017-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    தோனி தலைமையில் இந்திய அணி டி-20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • தென்ஆப்பிரிக்கா அணியால் 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

    இந்தியா- ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர் 56 பந்தில் 100 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.

    பின்னர் 202 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இதனால் 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 95 இடங்களில் சுருண்டது. குல்தீப் யாதவ் 2.5 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என சமன் செய்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது.

    சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • 26-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.
    • டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாளை ஜோகன்னஸ்பர்க் புறப்பட்டு செல்கிறார்.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2-வது போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது. இதையடுத்து 26-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.

    டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் முகமது சமியும் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கணுக்கால் காயம் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியைத் தவிர்த்து டெஸ்ட் தொடருக்கு செல்லும் எஞ்சிய வீரர்களுக்கு முகமது சமி செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாளை ஜோகன்னஸ்பர்க் புறப்பட்டு செல்கிறார்.

    ரோகித் சர்மா தவிர்த்து மற்ற வீரர்களான விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், நவ்தீப் சைனி ஆகியோர் துபாய் வழியாக தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல இருக்கின்றனர்.

    டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி (உடல்தகுதியைப் பொறுத்து), முகேஷ் குமார், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

    • உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்தது. உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தும் கோட்டைவிட்டது. உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஆனால், ஆஸ்திரேலியா 7 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது. இதில் இந்தியா 240 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியனானது.

    இந்த உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற விருதை சமி தட்டிச்சென்றார்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஷமியின் பெயரை இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் முகமது ஷமியின் பெயர் இல்லாத நிலையில், விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ ஒரு சிறப்பு கோரிக்கையாக ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2-வது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், மிதாலி ராஜ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26-வது சதத்தை அவர் பதிவு செய்தார்.

    ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 346 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 16 பவுண்டரி 4 சிக்சருடன் 164 ரன்கள் குவித்து அவுட்டானார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26-வது சதத்தை அவர் பதிவு செய்தார்.

    குறிப்பாக இத்தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர் தன்னுடைய கடைசி தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ்க்கு நிகராக 26 சதங்களை அடித்த வீரராக வார்னர் சாதனை படைத்துள்ளார். அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த 3-வது வீரர் என்ற பிரைன் லாரா சாதனையை அவர் முறியடித்துள்ளார். அந்த பட்டியலில், 12 சதங்களுடன் குமார் சங்ககாரா முதல் இடத்திலும் 11 சதங்களுடன் அரவிந்தா டீ சில்வா 2-வது இடத்திலும் 10 சதங்களுடன் டேவிட் வார்னர் 3-வது இடத்திலும் 9 சதங்களுடன் பிரையன் லாரா 4-வது இடத்திலும் உள்ளனர்.

    குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 8 இன்னிங்ஸில் 5 சதம் உட்பட வார்னர் 1009* ரன்களை 144.14 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேத்தியூ ஹெய்டன் (8643), மைக்கேல் க்ளார்க் (8625) ஆகிய ஜாம்பவான்களை முந்தி அதிக ரன்கள் அடித்த 5-வது ஆஸ்திரேலிய வீரராகவும் டேவிட் வார்னர் (8651*) சாதனை படைத்துள்ளார். 

    ×