search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முகமது சமி விலகல்?
    X

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முகமது சமி விலகல்?

    • 26-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.
    • டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாளை ஜோகன்னஸ்பர்க் புறப்பட்டு செல்கிறார்.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2-வது போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது. இதையடுத்து 26-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.

    டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் முகமது சமியும் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கணுக்கால் காயம் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியைத் தவிர்த்து டெஸ்ட் தொடருக்கு செல்லும் எஞ்சிய வீரர்களுக்கு முகமது சமி செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாளை ஜோகன்னஸ்பர்க் புறப்பட்டு செல்கிறார்.

    ரோகித் சர்மா தவிர்த்து மற்ற வீரர்களான விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், நவ்தீப் சைனி ஆகியோர் துபாய் வழியாக தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல இருக்கின்றனர்.

    டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி (உடல்தகுதியைப் பொறுத்து), முகேஷ் குமார், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

    Next Story
    ×