search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முகமது சமியின் பெயர்
    X

    அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முகமது சமியின் பெயர்

    • உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்தது. உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தும் கோட்டைவிட்டது. உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஆனால், ஆஸ்திரேலியா 7 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது. இதில் இந்தியா 240 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியனானது.

    இந்த உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற விருதை சமி தட்டிச்சென்றார்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஷமியின் பெயரை இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் முகமது ஷமியின் பெயர் இல்லாத நிலையில், விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ ஒரு சிறப்பு கோரிக்கையாக ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2-வது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், மிதாலி ராஜ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×