என் மலர்
விளையாட்டு
- இந்திய கிரிக்கெட்டில் முன்னணி வீரராக விராட் கோலி உள்ளார்.
- விராட் - அனுஷ்கா ஜோடி திருமண நாளை கொண்டாடினர்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நேற்று தங்களின் ஆறாவது திருமண நாளை கொண்டாடினர். இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருமண நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்ற திருமண நாள் கொண்டாட்டத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். இது தொடர்பான பதிவில், " இன்றைய தினம் காதலன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் முழுமையாக கழிந்ததால், கிராமில் பதிவிட அதிக தாமதம் ஆகி விட்டது. 6+ இன்ஃபினிட்டி எமோஜி, காதல் சின்னம் எமோஜி, எனது நியுமெரோ யூனோவுடன்" என குறிப்பிட்டு கோலியுடன் கட்டியணைத்து நிற்கும் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா பகிர்ந்துள்ளார்.
அனுஷ்கா ஷர்மா மட்டுமின்றி விராட் கோலியும் தனது இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா ஷர்மாவுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
- இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை.
- ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது.
இணைய தளத்தில் மிகப்பெரிய தேடும் மையமாக கூகுள் அமைந்துள்ளது. கூகுள் பக்கத்தில் தேடினால், கிடைக்காதது ஏதும் கிடையாது எனலாம். இணைய தளம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சந்தேகம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவதாக கூகுள்தான்.
இவ்வளவு புகழ் வாய்ந்த கூகுள் நிறுவனம், தங்களது தேடும் பக்கத்தில் கடந்த 25 வருடத்தில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர், விளையாட்டு வீரர் யார் என்பதை தெரிவித்துள்ளத.
இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் தெண்டுல்கர், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களை பட்டியல் இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சர்வதேச சதங்கள் (50) அடித்த விராட் கோலிதான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.
விராட் கோலி இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார். கேப்டனாக இருந்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை. இருந்த போதிலும் கூகுளில் தேடும் நபர்களில் நம்பர் ஒன்னாக திகழ்கிறார். இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பத்திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஆனால் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 38 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல்-நகர் கிளப்பில் விளையாடி வருகிறார். 38 வயது ஆனாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.
ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. ரொனல்டோ ரியால் மாட்ரிக் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய காலம் கால்பந்து விளையாட்டின் பொற்காலம் எனலாம்.
ரொனால்டோ மாஸ்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிக் அணிகளுக்காக விளையாடிய 15 வருட காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.
- 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
- மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி இம்மாதம் 15- 21ம் தேதி வரை சென்னை லீலா பேலஸில் நடைபெறவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், இப்போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

- உச்சக்கட்ட உதாரணமாக இந்திய வீரர் விராட் கோலி இருக்கிறார்.
- ஃபிட்னஸ் குறித்த கேள்வி நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கிரிக்கெட் என்ற விளையாட்டு அறிமுகமான காலத்தில் இந்திய அணியில் இடம்பிடிக்க உடற்தகுதி அவசியமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் வேறாக மாறிவிட்டது. கிரிக்கெட்டில் உடற்தகுதி மிகவும் அவசியம் என்ற காலம் இது. இதற்கு உச்சக்கட்ட உதாரணமாக இந்திய வீரர் விராட் கோலி இருக்கிறார்.
இவர் தலைமையிலான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்கள் யோயோ ஃபிட்னஸ் டெஸ்ட் எனும் சோதனையில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இருந்தது. எனினும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஃபிட்னஸ் குறித்த கேள்வி நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ரோகித் சர்மா எத்தனை போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியும், இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது.

இந்த நிலையில், ரோகித் சர்மா யோ யோ ஃபிட்னஸ் டெஸ்ட்-இல் தேர்ச்சி பெற்று இருக்கிறாரா என்ற கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றுள்ள அன்கிட் கலியர் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ரோகித் சர்மா ஃபிட்-ஆன வீரர். அவரது ஃபிட்னஸ் சிறப்பாக உள்ளது. அவர் உடல் தோற்றம் பருமன் அதிகமாக இருப்பதை போன்று காட்சியளிக்கலாம், ஆனாலும், அவர் யோ யோ டெஸ்டில் எப்போதுமே தேர்ச்சி பெற்றிடுவார். விராட் கோலி போன்றே அவரும் நல்ல உடல்நிலையில் உள்ளார்."
"அவர் சற்று பருமன் கொண்டவர் போன்று காட்சியளித்தாலும், களத்தில் அவரின் செயல்பாட்டை நாம் பார்த்திருக்கிறோம். கட்டுக்கோப்பான உடற்தகுதி கொண்ட கிரிக்கெட் வீரர்களில் அவர் நிச்சயம் இடம்பிடித்துள்ளார்," என்று தெரிவித்தார்.
- தென்ஆப்பிரிக்கா மண்ணில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம்.
- ஒன்று அல்லது இரண்டு செசன்களில் சிறப்பாக விளையாடும் அணி ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக திகழும்.
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கேப் டவுனில் ஜனவரி 3-ந்தேதியும் தொடங்க இருக்கிறது.
விராட் கோலி குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ் கூறியதாவது:-
விராட் கோலி தென்ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய தொடரை விளையாட விரும்புவார் என நம்புகிறேன். அவர் சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்கு வகிப்பார். இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் தொடரை வெல்ல வேண்டும் என்றால், விராட் கோலி சிறந்த தொடராக அமைய வேண்டும். விராட் கோலி சிறந்த வீரர். தென்ஆப்பிரிக்காவில் குறிப்பிட்ட அளவு ரன்கள் சேர்த்துள்ளார்.
அவர் மற்ற வீரர்களுக்கு ஆட்டத்தின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கும் நபர். தென்ஆப்பிரிக்கா சீதோஷண நிலையை மற்றும் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து இளம் வீரர்களுக்கு யோசனை வழங்கக் கூடியவர்.

தற்போதுள்ள இந்திய அணி சிறந்தது. என்றபோதிலும் தென்ஆப்பிரிக்கா மண்ணில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம்.
செஞ்சூரியன் தென்ஆப்பிரிக்கா அணிக்கு சாதகமாக இருக்கும். கேப் டவுன் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இது சிறந்த தொடராக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு செசன்களில் சிறப்பாக விளையாடும் அணி ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக திகழும்" என்றார்.
கடந்த ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலி 30 இன்னிங்சில் 932 ரன்கள் எடுத்துள்ளார். தற்போதைய தொடரில் ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
- உடற்பயிற்சியும் தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
- தடகள போட்டி எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த எஸ்.வி தாரகராம மைதானத்தில் மாநில அளவிலான 42-வது தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது.
குண்டூர் மாவட்டம், தெனாலியை சேர்ந்த நாராயணமூர்த்தி (வயது 95). இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
கடந்த 30 ஆண்டுகளாக மாநிலத்தில் நடைபெறும் பொதுநிலை தடகள போட்டி எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
நேற்று நடந்த தடகள போட்டியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு வட்டு எறிதல் ஈட்டி எறிதல் குண்டு எறிதல் உள்ளிட்டவைகளில் கலந்துகொண்டு அசத்தி காட்டினார்.
வருகின்ற 2024-ம் ஆண்டு புனேவில் நடைபெற உள்ள தேசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். சைவ உணவும், உடற்பயிற்சியும் தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
இவருக்கு 60 வயதிற்கு மேற்பட்ட 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
- இந்தியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
இந்தியா- இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து, இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 76 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடியது.
இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட்டின் போராட்டத்தால் ஒரு வழியாக மூன்று இலக்கத்தை கடந்தது. ஹீதர் நைட் 52 ரன்களில் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்கா இஷாக், ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், அமன்ஜோத் கவுர் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மிர்தி மந்தனா 48 ரன்களும் (48 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களும் விளாசினர்.
ஆனால் இந்த வெற்றி இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை தனக்குரியதாக்கி விட்டது.
அடுத்து இவ்விரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தொடங்குகிறது.
- பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஜீஷன் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
- அசன் அவைஸ் 105 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் "பி" பிரிவில், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மல்லுக்கட்டின. "டாஸ்" வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. ஆதர்ஷ் சிங் (62 ரன்), கேப்டன் உதய் சாஹரன் (60 ரன்), சச்சின் தாஸ் (58 ரன்) அரைசதம் அடித்தனர். உதிரியாக 17 வைடு உள்பட 20 ரன்கள் கிடைத்தது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஜீஷன் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சமைல் ஹூசைன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடி இந்திய பவுலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஷசாயிப் கான் 63 ரன்கள் திரட்டினார்.
3-வது விக்கெட்டுக்கு அசன் அவைசும், கேப்டன் சாத் பெய்க்கும் கூட்டணி போட்டு அணியை சிக்கலின்றி இலக்கை நோக்கி பயணிக்க வைத்தனர். 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
பாகிஸ்தான் 47 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அசன் அவைஸ் 105 ரன்களுடனும் (130 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் சாத் பெய்க் 68 ரன்களுடனும் (51 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.
2-வது லீக்கில் ஆடிய இந்திய அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். இந்தியா தனது கடைசி லீக்கில் நேபாளத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திக்கிறது. அரைஇறுதிக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 73 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை சாய்த்தது. இதில் ஜம்ஷித் ஜட்ரனின் சதத்தின் (106 ரன்) உதவியுடன் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 262 ரன் இலக்கை நோக்கி ஆடிய நேபாளம் 40.1 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க ஆப்கானிஸ்தான் தனது கடைசி லீக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியாக வேண்டும்.
- தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது.
- இரு அணிகளிடையே முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.
போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போடப்படாத நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது.
- இரு அணிகளிடையே முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.
போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
- ஐசிசி உறுப்பினர்களில் பிசிசிஐ அதிக வருமானம் ஈட்டும் வாரியமாக உள்ளது
- ஆஸ்திரேலிய வாரியத்தை விட பிசிசிஐ 28 மடங்கு அதிக மதிப்பு உடையது
பல விளையாட்டுகள் இந்தியாவில் பிரபலமாக இருந்தாலும், பெரும்பான்மையான இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்குத்தான் முதலிடம் தருகிறார்கள் என்பது நிதர்சன உண்மை.
தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் சர்வ வல்லமை பொருந்திய அமைப்பு, பிசிசிஐ (BCCI) எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம். இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதியில் இயங்குகிறது.
ஐசிசி (ICC) எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்புடன் இந்தியாவின் சார்பான உறுப்பினராக இணைந்திருந்தாலும், ஐசிசி எடுக்கும் முடிவுகளில் பிசிசிஐ ஆதிக்கம் செய்யும் அளவிற்கு பலம் பொருந்தி இயங்கி வருகிறது.
இது ஒரு தனியார் அமைப்பாக செயல்படுவதால், இதன் வருமானம் இந்திய அரசாங்கத்தை சார்ந்து இல்லை. மற்ற வாரியங்களை விட ஐசிசி அமைப்பின் பெரும்பான்மை வருமானம் பிசிசிஐ அமைப்பிற்கே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் நிகர மதிப்பு ரூ.18,700 கோடி ($2.25 பில்லியன்) என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு அடுத்த நிலையில், இரண்டாவது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) அமைப்பு ரூ.660 கோடி ($79 மில்லியன்) மட்டுமே ஈட்டுகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் 2023 விளையாட்டு தொடரில் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் வருமான அடிப்படையில், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை விட 28 மடங்கு அதிக நிகர மதிப்பு கொண்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமே இந்திய ரசிகர்கள் தரும் அதிக வரவேற்பினால், பிற நாடுகளும் இந்திய அணியினர் தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுவதையும் அதன் மூலம் வரும் விளம்பர வருவாயையும் பெரிதும் விரும்புகின்றனர்.
2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் (IPL) எனப்படும் இந்திய பிரீமியர் லீக் விளையாட்டு தொடருக்கு பிறகு பிசிசிஐக்கு கிடைத்து வரும் வருமானம் ஆண்டுதோறும் மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- 2011 உலகக் கோப்பையின்போது யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றார்.
- உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்குவகித்த யுவராஜை பாராட்டாதது ஏன் என கம்பீர் கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
இந்திய அணி 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. கபில்தேவ் தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.
28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவரது தலைமையிலான அணி சொந்த மண்ணில் 2011-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த உலகக் கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார். இடதுகை அதிரடி பேட்ஸ்மேனான அவர் 362 ரன்கள் குவித்தார். மேலும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி னார்.
இந்நிலையில், 2011 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
2011 உலகக் கோப்பையின்போது யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றது எல்லோருக்கும் தெரியும். இதுகுறித்து எத்தனை பேர் பேசினார்கள்.
யுவராஜ் சிங் குறித்து பேசாததற்கு காரணம் என்ன? அவரை விளம்பரப்படுத்திக் கொள்ள மக்கள் தொடர்பு குழுவினர் என தனியாக ஒன்று இல்லை என்பது காரணமாக இருக்கலாம்.
நீங்கள் ஒருவரை பற்றி அதிகமாக பேசவில்லை என்றாலும், அவரை மக்களிடத்தில் அதிகம் கொண்டு செல்லவில்லை என்றாலும் அவர் அதிகமாக வெளியில் தெரியமாட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய உரிய பாராட்டு கிடைக்காது. ஒருவரை மட்டுமே தொடர்ந்து மக்கள் முன் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தால் அவர் பிராண்டாக மாறிவிடுவார்.
இந்த உலகக் கோப்பையில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. பேட்டிங்கை நம்பியுள்ள அணியாக இல்லாமல் பந்துவீச்சை மையப்படுத்தும் அணியாக மாறி உள்ளது.
முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரின் கடினமாக உழைப்பு பாராட்டுகளுக்கு உரியதாகும் என தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த லெஜண்ட்ஸ் போட்டியின்போது காம்பீருக்கும், ஸ்ரீசாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் யுவராஜ்சிங்குக்கு உரிய பாராட்டு கிடைக்கவில்லை என்று காம்பீர் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.






