என் மலர்
விளையாட்டு
- 2011 உலகக் கோப்பையின்போது யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றார்.
- உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்குவகித்த யுவராஜை பாராட்டாதது ஏன் என கம்பீர் கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
இந்திய அணி 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. கபில்தேவ் தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.
28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவரது தலைமையிலான அணி சொந்த மண்ணில் 2011-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த உலகக் கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார். இடதுகை அதிரடி பேட்ஸ்மேனான அவர் 362 ரன்கள் குவித்தார். மேலும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி னார்.
இந்நிலையில், 2011 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
2011 உலகக் கோப்பையின்போது யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றது எல்லோருக்கும் தெரியும். இதுகுறித்து எத்தனை பேர் பேசினார்கள்.
யுவராஜ் சிங் குறித்து பேசாததற்கு காரணம் என்ன? அவரை விளம்பரப்படுத்திக் கொள்ள மக்கள் தொடர்பு குழுவினர் என தனியாக ஒன்று இல்லை என்பது காரணமாக இருக்கலாம்.
நீங்கள் ஒருவரை பற்றி அதிகமாக பேசவில்லை என்றாலும், அவரை மக்களிடத்தில் அதிகம் கொண்டு செல்லவில்லை என்றாலும் அவர் அதிகமாக வெளியில் தெரியமாட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய உரிய பாராட்டு கிடைக்காது. ஒருவரை மட்டுமே தொடர்ந்து மக்கள் முன் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தால் அவர் பிராண்டாக மாறிவிடுவார்.
இந்த உலகக் கோப்பையில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. பேட்டிங்கை நம்பியுள்ள அணியாக இல்லாமல் பந்துவீச்சை மையப்படுத்தும் அணியாக மாறி உள்ளது.
முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரின் கடினமாக உழைப்பு பாராட்டுகளுக்கு உரியதாகும் என தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த லெஜண்ட்ஸ் போட்டியின்போது காம்பீருக்கும், ஸ்ரீசாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் யுவராஜ்சிங்குக்கு உரிய பாராட்டு கிடைக்கவில்லை என்று காம்பீர் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 206 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் டி.ஆர்.எஸ். முறைப்படி நிர்ணயித்த இலக்கை எட்டியது.
பிரிட்ஜ்டவுன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 40 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. பென் டெக்கெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார். லிவிங்ஸ்டோன் 45 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் டி.ஆர்.எஸ் முறைப்படி 34 ஓவரில் 188 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அந்த அணியின் கெய்சி கார்டி சிறப்பாக ஆடி அரை சதமடித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் ஆலிக் அதான்சே 45 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்டு அதிரடியாக ஆடி 28 பந்தில் 43 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 31.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக மேத்யூ போர்டேவும், தொடர் நாயகனாக ஷாய் ஹோப்பும் தேர்வாகினர்.
இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது.
- ஷபாலி வர்மா ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
- ரேனுகா சிங் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
அந்த வகையில், இரண்டாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 09) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா பத்து ரன்களில் ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து வந்த இந்திய வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர். எனினும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுமையாக ஆடி 30 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக இந்திய பெண்கள் அணி 16.2 ஓவர்களில் வெறும் 80 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து பெண்கள் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சார்லி டீன், லாரன் பெல், சோபி எக்லெஸ்டோன், சாரா க்ளென் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சோபியா டன்க்ளெ 9 ரன்களிலும், டேனி யாட் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.
அடுத்து களமிறங்கிய அலைஸ் கேப்சி மற்றும் நேட் ஸ்கிவர் ப்ரண்ட் சிறப்பாக விளையாடினர். நேட் ஸ்கிவர் ப்ரண்ட் 16 ரன்களிலும், அலைஸ் கேப்சி 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் கேப்டன் ஹீத்தர் நைட் 7 ரன்களையும், சோபி 9 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 11.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது.
இந்திய அணி சார்பில் ரேனுகா சிங், தீப்தி ஷர்மா சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வஸ்ட்ராக்கர், சைகா இஷாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணி இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 10) நடைபெற இருக்கிறது.
- மகளிர் பிரீமியர் லீக் ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது.
- இதில் இந்திய, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ரூ.2 கோடிக்கு ஏலம் போயினர்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.
முதல் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது.
இதற்கிடையே, 2-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் நடத்தப்படுகிறது. இதையொட்டி வீராங்கனைகளின் மினி ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது.
ஏலப்பட்டியலில் 104 இந்தியர்கள், 61 வெளிநாட்டினர் என்று மொத்தம் 165 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 109 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடியவர்கள்.
5 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30 இடம் காலியாக உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கான 9 இடங்களும் அடங்கும்.
இந்நிலையில், இந்திய வீராங்கனை காஷ்வீ கவுதமை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இதேபோல், ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல் சதர்லேண்டை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
மற்றொரு இந்திய வீராங்கனை விருந்தா தினேஷை உ.பி. வாரியர்ஸ் அணி 1.3 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயிலை ரூ.1.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
- நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- கிளென் பிலிப்ஸ், சாண்ட்னர் ஜோடி 70 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தது.
டாக்கா:
வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 35 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் சான்ட்னெர், கிளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டும், அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 87 ரன்கள் எடுத்தார்.
8 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் ஜகிர் ஹசன் பொறுப்புடன் ஆடி 59 ரன்கள் எடுத்தார்.
இதனால் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 144 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டும், சான்ட்னெர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நியூசிலாந்து தத்தளித்தது.
7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில் நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
- வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 144 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
- நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட் வீழ்த்தினார்.
வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 6-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை அள்ளினர். இதனால் வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது. சான்ட்னெர், கிளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டும், அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணிக்கும் அதே நிலைதான். 55 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஒரு கட்டத்தில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 72 பந்தில் 87 ரன்கள் எடுக்க நியூசிலாந்து 180 ரன்கள் எடுத்தது.
8 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஜகிர் ஹசன் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 144 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டும், சான்ட்னெர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வங்காளதேசம் மொத்தமாக 136 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரன் எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இதனால் போட்டி கடைசி ரன் வரை பரபரப்பாகவே செல்லும்.
- ஆப்கானிஸ்தானின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் முகமது ஷேசாத்.
- இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே "டை" ஆன போட்டியில் சதம் விளாசியிருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். தோனி. இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவருக்கும் அணியின் நிர்வாகத்திற்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருந்து வருகிறது. இதனால் தோனி ஒரு வீரரை ஏலத்தில் எடுக்க விருப்பம் தெரிவித்தால், நிர்வாகம் எவ்வளவு தொகை கொடுத்தாவது அவரை ஏலத்தில் எடுத்து விடும்.
கூல் கேப்டன் எனப் பெயரெடுத்துள்ள எம்.எஸ். டோனி உடல் கட்டுக்கோப்பு (fitness), பீல்டிங் ஆகிய இரண்டு விசயத்தில் கறாராக இருப்பார். கேட்ச் மிஸ் செய்தால், அல்லது பீல்டிங்கில் கோட்டை விட்டால் கடுங்கோபம் அடைவார்.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரராக இருந்தவர் முகமது ஷேசாத். உடல் பருமனாக காணப்படும் ஷேசாத் சிக்ஸ் அடிப்பதில் வல்லவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவரால் விரைவாக ஓடி ரன்கள் எடுக்க முடியாது. இருந்தபோதிலும் தனது அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அளவில் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்.
2018-ம் இந்தியா- ஆப்காகிஸ்தான் இடையிலான சர்வதேச போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது எம்.எஸ். டோனியிடம் அப்போதைய ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன் பேசியுள்ளார். அப்போது எம்.எஸ். தோனியிடம் பேசியது குறித்து சமீபத்தில் அஸ்கர் ஆப்கன் விவரித்திருந்தார்.
2018-ல் எம்.எஸ். தோனியிடம் பேசியது குறித்து அஸ்கர் ஆப்கன் கூறியதாவது:-
2018-ம் ஆண்டு இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை போட்டிக்குப்பிறகு நீண்ட நேரம் எம்.எஸ். தோனியிடம் பேசிக் கொண்டிருந்தேன். எம்.எஸ். தோனி சிறந்த கேப்டன். இந்திய கிரிக்கெட்டிற்கு கடவுள் வழங்கிய பரிசுதான் எம்.எஸ். தோனி. அவர் தலைசிறந்த மனிதர்.

முகமது ஷேசாத் குறித்து நாங்கள் அதிகமாக பேசிக் கொண்டோம். நான் எம்.எஸ். தோனியிடம் ஷேசாத் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் எனத் தெரிவித்தேன். தோனி என்னிடம் ஷேசாத் மிகப்பெரிய பானை வைத்திருக்கிறார். அவர் 20 கிலோ எடையை குறைத்தால், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரை எடுத்துக் கொள்வேன் எனக் கூறினார். ஆனால், ஷேசாத் மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு திரும்பும்போது, 5 கிலோ எடை அதிகரித்திருந்தார்.
இவ்வாறு அஸ்கர் ஆப்கன் தெரிவித்திருந்தார்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான "டை" ஆன போட்டியில் முதலில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் இந்தியா 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நிலையில் 49.5 ஓவரில் 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்த போட்டியில் முகமது ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2018-ல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
- 2021-ல் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் நீங்கா இடம் பெற்றவர்களில் ஏபி டி வில்லியர்ஸ் ஒருவர் என்றால் மிகையாகாது.
2004-ல் தனது 20 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். விக்கெட் கீப்பர், அதிரடி பேட்ஸ்மேன் என முத்திரை பதித்து 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் மூன்று வருடங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடினார். டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில விளையாடி 20,014 ரன்கள் குவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு ஓய்வு பெறும்போது அவருக்கு வயது 34. கூடுதலாக இரண்டு மூன்று வருடங்கள் விளையாடியிருக்கலாம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்தனர். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டும் அதை விரும்பியது. ஆனால், சர்வதேச போட்டியில் விளையாடவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் விஸ்டன் கிரிக்கெட் உடன் உரையாடும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-
என்னுடைய இளைய மகள் தற்செயலாக என்னுடைய கண் மீது காலால் உதைத்துவிட்டான். இதனால் வலது கண்ணில் என்னுடைய பார்வையை இழக்க ஆரம்பித்தேன். நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது மருத்துவர்கள் இந்த பார்வையுடன் எப்படி சர்வதேச கிரிக்கெட் விளையாடினீர்கள்? என்று கேட்டனர். அதிர்ஷ்டவசமாக இரண்டு வருடங்கள் சிறப்பாக செயல்பட என்னுடைய இடது கண் சிறப்பாக வேலை செய்தது. தன்னுடைய பார்வை எப்படி இருக்கிறது என்பதை பரிசோதிக்க அடிக்கடி ஸ்கோர் போர்டை பார்ப்பேன்.
இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
துபாய்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.
முதலாவது லீக் ஆட்டத்தில் உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி, நசீர் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.
இதில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி, அர்ஷின் குல்கர்னி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 76 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் குல்கர்னி - முசீர் கான் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இறுதியில் இந்திய அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குல்கர்னி 70 ரன்களிலும் முசிர் கான் 48 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
- முதலில் விளையாடிய நேபாளம் அணி 47.2 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
- பாகிஸ்தான் தரப்பில் முகமது ஜீஷான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துபாய்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.
தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி, நசீர் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதுகின்றன. இரண்டு ஆட்டமும் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
பாகிஸ்தான் - நேபாளம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நேபாளம் அணி 47.2 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக உத்தம் மகர் 51 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஜீஷான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அசான் அவாய்ஸ் 56 ரன்கள் எடுத்தார். நேபாளம் தரப்பில் குல்சன் ஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
- அதிரடியாக விளையாடி பிலிப் 72 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது. நேற்றைய 2-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசாமல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிரடியாக விளையாடி பிலிப் 72 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 8 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 2-வது இன்னிங்சை வங்காளதேசம் அணி தொடங்கியது. 2 ரன்னில் மஹ்முதுல் ஹசன் ஜாய் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது நாள் ஆட்டம் முடிவில் வங்காளதேசம் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 38 ரன்கள் எடுத்தது.
- ஆப்கானிஸ்தானில் அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 43 ரன்கள் எடுத்தார்.
- இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி, அர்ஷின் குல்கர்னி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
துபாய்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தானும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
முதலாவது லீக் ஆட்டத்தில் உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி, நசீர் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதுகின்றன.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட் 26 ரன்னிலும் 2-வது விக்கெட் 75 ரன்களிலும் விழுந்தது.
இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி, அர்ஷின் குல்கர்னி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.






