என் மலர்
விளையாட்டு
- ஒருநாள் போட்டிகளில் இந்தியா சிறந்த அணியாக விளையாடவில்லை.
- உலகக் கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா நல்ல ரன்களை குவித்து இருக்கிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் தென்ஆப்பிரிக்காவே ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒருநாள் போட்டிகளில் இந்தியா சிறந்த அணியாக விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்காவும் சிறந்த அணியாக விளையாட வில்லை. ஆனாலும் நிலைமைகள் இன்னும் அவர்களுக்கே சாதகமாக உள்ளது. உலகக் கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா நல்ல ரன்களை குவித்து இருக்கிறது.
இந்த முழு தொடரிலும் இந்தியாவைவிட தென் ஆப்பிரிக்காவே சற்று ஆதிக்கம் செலுத்தும் என்று நான் பார்க்கிறேன். இது முற்றிலும் தவறாக கூட இருக்கலாம். இது தவறாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு பல போட்டிகள் சாதகமாகவே இருக்கும். மொத்தமுள்ள 8 போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா 5-3 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நியூசிலாந்து அணி 8 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
- வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனல் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.
தொடர்ந்து மழை பெய்து வருந்ததால் 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மிட்செல் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த சாண்ட்னர் 1, ஜாமிசன் 20, சவுத்தி 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனை அதிரடியாக விளையாடி பிலிப் 72 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 8 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 147 ரன்கள் எடுத்தது.
- அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
ஹராரே:
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் பால்பிர்னி 32 ரன்னும், டெலனி 26 ரன்னும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் ராசா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 65 ரன்கள் எடுத்தார்.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14-வது ஆட்ட நாயகன் விருதை இவர் பெற்ற முகமது நபியை (14) சமன் செய்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 15 முறை பெற்றுள்ள நிலையில் அவரின் சாதனையை முறியடிக்க இன்னும் 2 முறை ஆட்டநாயகன் விருதை ராசா பெற வேண்டும். இவர்களை அடுத்து சூர்யகுமார் யாதவ் 13 முறையும் ரோகித் சர்மா 12 முறையும் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளனர்.
நடப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்ற (6) விராட் கோலியை ஏற்கனவே சிகந்தர் ராசா (7) பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
- கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் (201 ரன்) அடித்து களத்தில் இருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் கான்பெர்ராவில் தொடங்கியது.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் (201 ரன்) அடித்து களத்தில் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கால் மாட் ரென்ஷா ஒரு பந்தில் 7 ரன்கள் எடுத்தார். இந்த சம்பவம் 78-வது ஓவரில் அரங்கேறியது. இந்த ஓவரை அப்ரார் அகமது வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை ரென்ஷா பவுண்டரிக்கு விரட்டினார். இதனை தடுத்த பாகிஸ்தான் கேப்டன் பந்து வீச்சாளர் பக்கம் வீசினார். அதனை வாங்கிய பாபர் அசாம் கீப்பர் பக்கம் உள்ள ஸ்டெம்ப் மீது எரிந்தார். கீப்பர் நின்ற சப்ராஸ் அகமது அதனை பிடிக்காமல் விட்டார். அவர் பின்னாடி இருந்த வீரரும் அதனை பிடிக்காததால் பந்து பவுண்டரி சென்றது. 3 ரன்கள் ஓடி எடுத்த நிலையில் பவுண்டரியை சேர்த்து ஆக மொத்தம் ஒரே பந்தில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் ஸ்டைலில் பீல்டிங் செய்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
- டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எட்டுவதற்கு கோலிக்கு இன்னும் 20 சதங்கள் தேவை.
- ஆண்டுக்கு அவர் 5 சதங்கள் அடித்தாலும் கூட டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வதற்கு அவர் மேலும் 4 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியம்.
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுவரை 80 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 50 சதம், டெஸ்டில் 29 சதம், 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு சதம்) அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எட்டுவதற்கு இன்னும் 20 சதங்கள் தேவை. இப்போது கோலிக்கு 35 வயதாகிறது. ஆண்டுக்கு அவர் 5 சதங்கள் அடித்தாலும் கூட டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வதற்கு அவர் மேலும் 4 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியம். அப்போது அவருக்கு 39 வயதாகி விடும். இதன்படி பார்த்தால் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது மிக மிக கடினம்.
இன்னும் 20 சதங்கள் அடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். நிறைய வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் விளையாடி கூட 20 சதங்களை எடுத்ததில்லை. கோலியால் இதை செய்ய முடியாது என்று சவால் விடமாட்டேன். ஆனால் உங்களுடைய வயது எப்போதும், எதற்காகவும் நிற்காது. கோலியால் பல சாதனைகளை படைக்க முடியும். என்றாலும் 100 சதம் என்பது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது.
அதே நேரத்தில் கோலியால் மட்டுமே இச்சாதனையை நெருங்க முடியும். அவரது கட்டுக்கோப்பான பேட்டிங், ஒழுக்கம், அர்ப்பணிப்புக்கு நான் ரசிகன். ஒவ்வொரு போட்டிக்கும் அவர் தயாராகும் விதம், அதற்காக அவர் வழங்கும் கடின உழைப்பு இவற்றை எல்லாம் பார்க்கும் போது அவருக்கு எப்படி ரசிகராக இல்லாமல் இருக்க முடியும். டெண்டுல்கர் போன்று அவரும் 100 சதங்கள் அடித்தால் மகிழ்ச்சி அடைவேன். டெண்டுல்கர் எனது அன்பான நண்பர். ஏற்கனவே சொன்னது மாதிரி விராட் கோலிக்கு நான் தீவிர ரசிகன்.
இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் திறமை வாய்ந்த பேட்டராக இந்தியாவின் சுப்மன் கில் திகழ்கிறார். வரும் ஆண்டுகளில் அவர் கிரிக்கெட் களத்தில் வெகுவாக ஆதிக்கம் செலுத்துவார். அவரால் என்னுடைய சாதனைகளையும் தகர்க்க முடியும். அவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் பட்சத்தில், என்னுடைய முதல்தர கிரிக்கெட் சாதனையையும் (501 ரன்), டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது அதிகபட்ச ரன் சாதனையையும் (400 ரன்) நிச்சயம் தாண்ட முடியும்.
சுப்மன் கில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் செஞ்சுரி அடிக்கிறார். ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகரமான இன்னிங்ஸ் ஆடியுள்ளார். வருங்காலத்தில் அவர் நிறைய ஐ.சி.சி. தொடர்களை வெல்வார்.
இவ்வாறு லாரா கூறியுள்ளார்.
- முதலாவது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
- அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது.
கான்பெர்ரா:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் கான்பெர்ராவில் தொடங்கியது.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் (201 ரன்) அடித்து களத்தில் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

இதற்கிடையே, இந்த ஆட்டத்தின் போது இனவெறி சர்ச்சை வெடித்தது. மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்கோர் போர்டில் பாகிஸ்தானுக்கு பதிலாக பாகி (பி.ஏ.கே.ஐ.) என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தனர். 'பாகி' என்பது பாகிஸ்தான் அல்லது தெற்காசியாவில் பிறந்தவரை குறிப்பிடும் இழிசொல்லாக கருதப்படுகிறது.
இது சமூக வலைதளத்தில் வைரலானதும் அந்த வார்த்தை திருத்திக் கொள்ளப்பட்டதுடன், தவறுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியது.
- மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்தது.
- நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது.
கோலாலம்பூர்:
13-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள 2 முறை சாம்பியனான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று வலுவான ஸ்பெயினை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஸ்பெயின் அணியின் கையே ஓங்கி இருந்தது. முதலாவது நிமிடத்திலேயே ஸ்பெயின் கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணி வீரர் காப்ரி வெர்டெல் இந்த கோலை அடித்தார்.18-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை ஸ்பெயின் கேப்டன் ரபி ஆந்த்ரே கோலாக்கினார். இதனால் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
33-வது நிமிடத்தில் இந்திய அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரோஹித் இந்த கோலை அடித்தார். முதல் கோல் அடித்த காப்ரி வெர்டெல் 41-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் கோலடித்து தனது அணியின் முன்னிலையை அதிகரித்தார். 60-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை ரபி ஆந்த்ரே கோலாக மாற்றினார்.
கடைசி 5 நிமிடங்களில் இந்திய அணிக்கு 3 பெனால்டி வார்னர் வாய்ப்புகள் கிட்டியது. ஆனால் அதனை கோலாக்க இந்திய வீரர்கள் எடுத்த முயற்சியை ஸ்பெயின் கோல்கீப்பர் கேப்லாடெஸ் அருமையாக தடுத்து நிறுத்தினார்.
முடிவில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை சுவைத்து தனது பிரிவில் முதலிடம் வகிக்கிறது. 2-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். முதலாவது ஆட்டத்தில் தென் கொரியாவை (4-2) வென்று இருந்தது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
'டி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் 4-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து முதலாவது வெற்றியை தனதாக்கியது. அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்துடன் (3-3) டிரா கண்டு இருந்தது. இதே பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் வெற்றியை சொந்தமாக்கியது.
நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது. தனது பிரிவில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியா அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின்-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
- லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
துபாய்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தானும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி, நசீர் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதுகின்றன. இரண்டு ஆட்டமும் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
- தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது அரையிறுதி கொல்கத்தாவில் நடைபெற்றது.
- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-வது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 212 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 217 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டம் நடைபெற்ற ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மேலும் மந்தமாக இருந்தது. ரன்கள் அடிக்க மிகவும் சிரமமாக இருந்தது. லீக் ஆட்டங்களில் எல்லாம் ரன்கள் குவிக்கும் வகையில் ஆடுகளம் தயார் செய்துவிட்டு, முக்கிய அரையிறுதிக்கு ஆட்டத்திற்கு இப்படி ஆடுகளம் தயார் செய்யலாமா? என விமர்சிக்கப்பட்டது.
அதேபோல் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி ஆடுகளமும் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததும் இந்தியா முதலில் பேட்டிங் செய்த அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்லோ பிட்ச் என்பதால் பந்து சரியாக பேட்டிற்கு வரவில்லை. இதனால் ரன்கள் எடுப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் இந்தியா 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இரவு நேரத்தில் லைட் ஒளியின் கீழ் ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகச் சிறந்த அளவில் ஒத்துழைத்தது. 47 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அதன்பின் சிறப்பாக விளையாடினார்கள்.
முதல் 10 ஓவருக்குப்பின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பந்து டர்ன் ஆகவில்லை. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களால் ஜொலிக்க முடியவில்லை.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தோல்விக்கான காரணம் குறித்து அறிக்கை கேட்ட நிலையில், ஆடுகளம் எதிர்பார்த்த அளவில் சுழற்பந்து திரும்புவதற்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் 2-வது அரையிறுதி , இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளங்கள் சாரசரி என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.
- நவம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலை ஐசிசி வெளியிடப்பட்டது.
- இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பெயர் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு மாதம் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 பேர் பெயர் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திராவிஸ் ஹெட் மற்றும் மேக்ஸ்வெல் ஆவர்.
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இவர்கள் மூவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். உலகக் கோப்பை தொடரில் முகமது சமி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வீரர் என்ற விருதை தட்டிச் சென்றார். கடைசி போட்டியில் திராவிஸ் ஹெட் சதம் அடித்து அந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் இந்த தொடரில் இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற சிறப்பை பெற்றிருந்தார்.
உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.
- முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
- நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது.
வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனல் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.
தொடர்ந்து மழை பெய்து வருந்ததால் 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் முடிவுக்கு வந்தது. நாளை 3-வது நாள் ஆட்டம் தொடங்கும்.
- எலிமினேட்டர் சுற்றில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
- இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லெஜண்ட் லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 18-ந் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ், மனிபால் டைகர், குஜராத் ஜெயண்ட்ஸ், அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், பில்வார கிங்ஸ் என்ற 6 அணிகள் பங்கேற்றது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில் நேற்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது கவுதம் கம்பீர் தன்னை சூதாட்டவர் என்று கூறியதாக ஸ்ரீ சாந்த் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து ஸ்ரீசாந்த் பேசியதாவது:-
போட்டி நடந்து கொண்டிருக்கும் போது கம்பீர் என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தார். நான் ஒரு கெட்ட வார்த்தை கூட உபயோகிக்கவில்லை. என்ன சொல்கிறாய்? என்ன சொல்கிறாய்? என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். சொல்லப்போனால், அவர் என்னை சூதாட்ட வீரர் சூதாட்ட வீரர் என்று சொல்லிக்கொண்டே இருந்ததால், கிண்டலாகச் சிரித்துக்கொண்டே இருந்தேன்.
போட்டி நடந்து கொண்டிருந்த போது அவர் பயன்படுத்திய வார்த்தை இது. உண்மையில், நடுவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயன்றபோது அவர் அதே வார்த்தையை பயன்படுத்தினார். உடனே நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அவர் அதையே திரும்பத் திரும்பச் சொன்னார்.
இவ்வாறு அவர் கூறினார்.






