என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனல் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.

    தொடர்ந்து மழை பெய்து வருந்ததால் 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் முடிவுக்கு வந்தது. நாளை 3-வது நாள் ஆட்டம் தொடங்கும்.

    • எலிமினேட்டர் சுற்றில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
    • இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    லெஜண்ட் லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 18-ந் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ், மனிபால் டைகர், குஜராத் ஜெயண்ட்ஸ், அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், பில்வார கிங்ஸ் என்ற 6 அணிகள் பங்கேற்றது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது கவுதம் கம்பீர் தன்னை சூதாட்டவர் என்று கூறியதாக ஸ்ரீ சாந்த் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

    இது குறித்து ஸ்ரீசாந்த் பேசியதாவது:-

    போட்டி நடந்து கொண்டிருக்கும் போது கம்பீர் என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தார். நான் ஒரு கெட்ட வார்த்தை கூட உபயோகிக்கவில்லை. என்ன சொல்கிறாய்? என்ன சொல்கிறாய்? என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். சொல்லப்போனால், அவர் என்னை சூதாட்ட வீரர் சூதாட்ட வீரர் என்று சொல்லிக்கொண்டே இருந்ததால், கிண்டலாகச் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

    போட்டி நடந்து கொண்டிருந்த போது அவர் பயன்படுத்திய வார்த்தை இது. உண்மையில், நடுவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயன்றபோது அவர் அதே வார்த்தையை பயன்படுத்தினார். உடனே நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அவர் அதையே திரும்பத் திரும்பச் சொன்னார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெஸ்ட் வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள்.
    • இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் 10-ந் தேதி நடக்கிறது.

    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் 10-ந் தேதியும், 2-வது போட்டி கெபராவில் 12-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் 14-ந் தேதியும், முதலாவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் 17-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி கெபராவில் 19-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்லில் 21-ந் தேதியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் 26-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 3-ந் தேதியும் தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களுருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் உள்ளிட்ட 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணி வீரர்கள் சென்றனர். டெஸ்ட் வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள்.

    • இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்திய அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.

    இங்கிலாந்து பெண்கள் அணி 3 டி20, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் டி20 தொடரும் அடுத்து டெஸ்ட் போட்டியும் நடைபெறும்.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பையில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர் என்ற உலக சாதனையை படைத்தார். இந்த போட்டியையும் சேர்த்து அவர் 101 ஆட்டங்களுக்கு கேப்டனாக பணியாற்றியுள்ளார்.

    இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 100 ஆட்டங்களில் கேப்டனாக இருந்ததே சாதனையாக இருந்தது.

    • வேகப்பந்துவீச்சுக்கு உகந்த செஞ்சூரியன், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளங்களில் ரன் குவிப்பது சுலபமல்ல.
    • பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்பதை புள்ளி விவரங்களே சொல்லும்.

    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் மட்டும் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த மாத கடைசியில் அந்த நாட்டுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

    இந்நிலையில் பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிராவிட் கூறியதாவது:-

    பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்பதை புள்ளி விவரங்களே சொல்லும். உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு கடினமான இடங்களில் ஒன்று தென்ஆப்பிரிக்கா. குறிப்பாக இங்குள்ள வேகப்பந்துவீச்சுக்கு உகந்த செஞ்சூரியன், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளங்களில் ரன் குவிப்பது சுலபமல்ல.

    ஒவ்வொரு பேட்ஸ்மேனும் இங்கு எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டமிடலுடன் வருவார்கள். அதற்கு ஏற்ப பயிற்சியும் மேற்கொள்வார்கள். எல்லோரும் ஒரே மாதிரி ஆடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் நமது வீரர்களுக்கு எப்படி ஆடினால் கைகொடுக்கும்.

    அதை எப்படி களத்தில் செயல்படுத்த வேண்டும் என்பதில் தெளிவான நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். களத்தில் நிலைத்து நிற்க வாய்ப்பு அமைந்து விட்டால், அதை வெற்றிக்குரிய இன்னிங்சாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணியால் 6 விக்கெட்டுக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது.
    • இங்கிலாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மும்பை:

    இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ரேணுகா சிங்கின் முதல் ஓவரிலேயே சோபியா டங்லி (1 ரன்) அலிஸ் கேப்சி (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தாலும் டேனி வியாட், நாட் சிவர் இருவரும் கூட்டணி போட்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    ஸ்கோரை அதிரடியாக உயர்த்திய இவர்களில் டேனி வியாட் 75 ரன்களிலும் (47 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), நாட் சிவர் 77 ரன்களிலும் (53 பந்து, 13 பவுண்டரி) ஆட்டமிழந்தனர்.

    20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டும், ஸ்ரேயங்கா பட்டீல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா (6 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (4 ரன்) ஏமாற்றம் அளித்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஷபாலி வர்மாவும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் ஜோடி சேர்ந்து களத்தில் நின்றது வரை வெற்றி வாய்ப்பு தென்பட்டது. ஸ்கோர் 82-ஐ எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தும் ஆட்டத்தின் போக்கு மாறியது. ஹர்மன்பிரீத் 26 ரன்னிலும், ஷபாலி வர்மா 52 ரன்னிலும் (42 பந்து, 9 பவுண்டரி) சோபி எக்லெஸ்டனின் சுழலில் சிக்கினர். அதன் பிறகு இலக்கை நெருங்க கூட முடியவில்லை.

    20 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணியால் 6 விக்கெட்டுக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது. எக்ஸ்டிரா வகையில் 20 வைடு உள்பட 21 ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சோபி எக்லெஸ்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    3 போட்டி கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

    • தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • முதல் டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கும், 2-வது டெஸ்ட் நடக்கும் நியூலேண்ட்ஸ் இந்தியாவுக்கும் சாதகமாக இருக்கும்.

    செஞ்சூரியன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

    முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் வருகிற 10-ந் தேதி டர்பனில் நடக்கிறது.

    ஒருநாள் போட்டி 17-ந் தேதியும், டெஸ்ட் தொடர் 26-ந் தேதியும் தொடங்குகிறது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் காலிஸ் கூறியதாவது:-

    இந்திய அணி ஒரு நல்ல அணி. ஆனால் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினமானது. முதல் டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கும், 2-வது டெஸ்ட் நடக்கும் நியூலேண்ட்ஸ் இந்தியாவுக்கும் சாதகமாக இருக்கும். இது ஒரு நல்ல தொடராக இருக்கும். 

    ஒரு அணி மற்றொன்றை விட சிறப்பாக விளையாட முயற்சிக்கும். இது ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணியின் வீரர்கள் வரிசையில் மாற்றம் இருக்கும். திறமையான வீரர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆலோசகர்களை பெற்று தங்களை வளர்த்துக் கொண்டால் சிறப்பாக விளையாட முடியும்.

    மூத்த வீரர்கள், ஆட்ட நுணுக்கங்களை பெற்று இருப்பார்கள். அதை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இளம் வீரர்கள் விளையாடாவிட்டாலும், அவர்கள் மூத்த வீரர்களுடன் கற்றுக் கொள்ளக்கூடிய சூழலில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களின் பணியாகும்.

    அறிமுகமில்லாத இடங்களுக்கு விளையாட செல்லும்போது இளம் வீரர்கள், மூத்த வீரர்களிடையே இருந்து அவர்களின் அனுபவங்களை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது.
    • நியூசிலாந்து பேட்ஸ்மேன்களும் திணற முதல் நாள் ஆட்டத்தில் 55 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனமால் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் 2-வது நாள் ஆட்டம் தொடங்க காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்னில் சுருண்டது.
    • இங்கிலாந்து 32.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் 39.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 202 ரன்னில் சுருண்டது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் 68 ரன்களும், ரூதர்போர்டு 63 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து வில் ஜேக்ஸ் (73), ஹாரி ப்ரூக் (43 அவுட் இல்லை), ஜோஸ் பட்லர் (58 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 32.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதி (நாளைமறுதினம்) நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியினர் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷஹாதத் ஹொசைன் தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் 66.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிலிப்ஸ் மற்றும் சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. டேரில் மிட்செல் 12 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 5 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்னில் அவுட் ஆனார்.
    • இந்த முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனையை ரஹீம் படைத்தார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷ்பிகுர் ரஹீம் தேவையில்லாமல் அவுட் ஆனார். அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேமிசன் பந்து வீச்சை எதிர் கொண்டார். அப்போது தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ரஹீம், பேட்டில் பட்டு பந்து அவரை விட்டு தள்ளி சென்றது. உடனே அந்த பந்தை கையால் தள்ளி விட்டார்.

    இதை பார்த்த நியூசிலாந்து வீரர்கள் அவுட் என அப்பீல் செய்தனர். உடனே நடுவர்கள் 3-ம் நடுவரிடம் முறையீட்டார். இதனையடுத்து 3-ம் நடுவர் அவுட் என அறிவித்தார். இதன் மூலம் obstructing the field முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனை படைத்தார்.

    • டி20 பந்து வீச்சாளர் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது.
    • இந்திய அணியில் இவர் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.

    ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான டி20 பந்து வீச்சாளர் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் நீடித்த ரஷித்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதல் இடத்தை பிடித்தார்.

    பிஷ்னோய் 699 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தார். ரஷித்கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் இவர் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பேட்டர்கள் தரவரிசையில் 56 இடங்கள் முன்னேறி 7ம் இடத்தை பிடித்தார் இந்திய இளம் வீரர் ருதுராஜ். முதலிடத்தில் சூர்யகுமாரும், இரண்டாம் இடத்தில் முகமது ரிஸ்வானும் உள்ளனர்.

    ×