என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு- வீடியோ
- டெஸ்ட் வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள்.
- இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் 10-ந் தேதி நடக்கிறது.
பெங்களூரு:
இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் 10-ந் தேதியும், 2-வது போட்டி கெபராவில் 12-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் 14-ந் தேதியும், முதலாவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் 17-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி கெபராவில் 19-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்லில் 21-ந் தேதியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் 26-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 3-ந் தேதியும் தொடங்குகிறது.
தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களுருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் உள்ளிட்ட 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணி வீரர்கள் சென்றனர். டெஸ்ட் வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள்.






