search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட்
    X

    வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட்

    • நியூசிலாந்து அணி 8 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
    • வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனல் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.

    தொடர்ந்து மழை பெய்து வருந்ததால் 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மிட்செல் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த சாண்ட்னர் 1, ஜாமிசன் 20, சவுத்தி 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனை அதிரடியாக விளையாடி பிலிப் 72 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 8 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    Next Story
    ×