search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நியூசிலாந்தை கரை சேர்த்த கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல்: சமனில் முடிந்த டெஸ்ட் தொடர்
    X

    நியூசிலாந்தை கரை சேர்த்த கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல்: சமனில் முடிந்த டெஸ்ட் தொடர்

    • நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • கிளென் பிலிப்ஸ், சாண்ட்னர் ஜோடி 70 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தது.

    டாக்கா:

    வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 35 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் சான்ட்னெர், கிளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டும், அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 87 ரன்கள் எடுத்தார்.

    8 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் ஜகிர் ஹசன் பொறுப்புடன் ஆடி 59 ரன்கள் எடுத்தார்.

    இதனால் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 144 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டும், சான்ட்னெர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நியூசிலாந்து தத்தளித்தது.

    7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில் நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    Next Story
    ×