search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "womens T20"

    • ஷபாலி வர்மா ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • ரேனுகா சிங் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    அந்த வகையில், இரண்டாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 09) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

     


    இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா பத்து ரன்களில் ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து வந்த இந்திய வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர். எனினும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுமையாக ஆடி 30 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக இந்திய பெண்கள் அணி 16.2 ஓவர்களில் வெறும் 80 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இங்கிலாந்து பெண்கள் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சார்லி டீன், லாரன் பெல், சோபி எக்லெஸ்டோன், சாரா க்ளென் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சோபியா டன்க்ளெ 9 ரன்களிலும், டேனி யாட் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.

    அடுத்து களமிறங்கிய அலைஸ் கேப்சி மற்றும் நேட் ஸ்கிவர் ப்ரண்ட் சிறப்பாக விளையாடினர். நேட் ஸ்கிவர் ப்ரண்ட் 16 ரன்களிலும், அலைஸ் கேப்சி 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் கேப்டன் ஹீத்தர் நைட் 7 ரன்களையும், சோபி 9 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 11.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது.

    இந்திய அணி சார்பில் ரேனுகா சிங், தீப்தி ஷர்மா சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வஸ்ட்ராக்கர், சைகா இஷாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணி இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 10) நடைபெற இருக்கிறது. 

    • லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
    • இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இருந்து விலகல்.

    8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேப்டவுனில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா பயிற்சி ஆட்டத்தின்போது இடது கைவிரவில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று பொறுப்பு பயிற்சியாளர் கனித்கர் நேற்று தெரிவித்தார். இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகும்.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    ×