search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2-வது டி20.. டக்வெர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி
    X

    2-வது டி20.. டக்வெர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்களை சேர்த்தது.

    கெபேஹா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 3வது பந்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 2வது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் டக் அவுட்டானார்.

    3வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில் திலக் வர்மா 29 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிங்கு சிங் யாதவுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர்.


    சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்த நிலையில் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜிதேஷ் ஷர்மா ஒரு ரன்னில் வெளியேறினார். ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில், இந்தியா 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. ரிங்கு சிங் 68 ரன் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்ஸி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    தென் ஆப்பிரிக்கா அணி 15 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்தது. அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் விதிப்படி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது.

    Next Story
    ×