என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி நடக்கவுள்ளது.
    • ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.

    இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணை கேப்டன் ஷ்ரேயஸ் விளையாடுவாரா? இல்லையா? என அவரது உடற்தகுதியை பொறுத்து பின்னர் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீரர்கள் விவரம்:-

    சுப்மன் கில் (C), ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் , ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் , நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்

    • ஒயிட்பால் கிரிக்கெட்டில் பேட்டிற்கும், பந்திற்கும் இடையிலான பேலன்ஸ் சமநிலையாக இருக்க வேண்டும்.
    • டி20 கிரிக்கெட்டில் ஒரேயொரு பந்து வீச்சாளர் 5 ஓவர் வீசப்படுவதை பார்க்க விரும்புகிறேன்.

    கிரிக்கெட்டில் பேட்டிற்கும், பந்திற்கும் இடையிலான பேலன்ஸை சமநிலைப்படுத்த பல்வேறு விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. என்றாலும் பேட்டர்களின் ஆதிக்கம்தான் கையோங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களும் அதைத்தான் விரும்புகின்றனர்.

    டி20 கிரிக்கெட்டில் ஒரு பந்து வீச்சாளர் 4 ஓவர்கள் மட்டுமே வீச முடியும். குறைந்தபட்சம் 5 பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நிலையில், ஒரேயொரு பந்து வீச்சாளர் 5 ஓவர்கள் வீச அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரபல நடுவர் சைமன் டபெல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சைமன் டபெல் கூறியதாவது:-

    நான் சில டி20 லீக்குகளுக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளேன். ஆனால், இன்னும் அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், ஒயிட்பால் கிரிக்கெட்டில் பேட்டிற்கும், பந்திற்கும் இடையிலான பேலன்ஸ் சமநிலையாக இருக்க வேண்டும். இதை பார்க்க விரும்புகிறேன்.

    டி20 கிரிக்கெட்டில் ஒரேயொரு பந்து வீச்சாளர் 5 ஓவர் வீசப்படுவதை பார்க்க விரும்புகிறேன். அனைத்து பந்து வீச்சாளர்களையும் 4 ஓவர்களில் கட்டுப்படுத்துவதால் பேட்ஸ்மேன் ஒருவர் முதல் பந்தில் இருந்து கடைசி வரை களத்தில் இருந்து 100 ரன்கள் அடிக்கக் கூடிய நிலை ஏற்படுகிறது.

    ஒரு ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேனுக்கு எதிராக ஒரு ஆதிக்கம் செலுத்தும் பந்து வீச்சாளரால் சமநிலை செய்வதற்கு, அந்த பந்து வீச்சாளருக்கு 5 ஓவர்கள் வழங்க முடியுமா?. இந்த மாதிரியான விஷயங்கள் உங்களுக்கு தெரியும். நம்மால் எப்படி இந்த நிலையைச் சற்றே சமநிலைப்படுத்த முடியும் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்.

    ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி உள்ளது. ஐஎல்டி20-யில் சூப்பர் சப் (Supre Sub) விதி உள்ளது. 11 வீரர்கள் களத்தில் விளையாடுவதை என்னுடைய மைய கிரிக்கெட் எனக்கு சொன்னது. நான் அதிகமான ஆல்-ரவுண்டர்களை பார்க்க விரும்புகிறேன். 11 பேருக்கு 11 பேர் என்பதை பார்க்க விரும்புகிறேன். இம்பேக்ட் பிளேயர் இரண்டு பந்துகளை சந்திக்கலாம். பீல்டிங் செய்ய இயலாது. அதில் மதிப்பு எங்கே இருக்கிறது? கிரிக்கெட் பாரம்பரிய அம்சங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    இவ்வாறு சைடன் டபெல் தெரிவித்துள்ளார்.

    2004 முதல் 2008 வரை ஐந்து முறை தொடர்ந்து ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை சைமன் டபெல் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியால் 120 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
    • எம்.ஐ. எமிரேட்ஸ் 16.1 ஓவரில் இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

    சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற குவாலிபையர்-2 போட்டியில் மும்பை எம்.ஐ. எமிரேட்ஸ்- அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் களம் இறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அந்த அணியின் அலிஷன் ஷராஃபு 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.ஐ. எமிரேட்ஸ் அணி சார்பில் கசான்ஃபர் 3 விக்கெட்டும், முகமது ரோகித் கான் மற்றும் பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எம்.ஐ. எமிரேட்ஸ் களம் இறங்கியது. அந்த அணியின் டாம் பாண்டன் 53 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும், ஷாகிப் அல் ஹசன் 24 பந்தில் 38 ரன்களும் அடிக்க 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் எம்.ஐ. எமிரேட்ஸ் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் டெசர்ட் வைபர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

    • பரோடா அணி 71 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது திணறியது.
    • ஹர்திக் பாண்ட்யா 11 சிக்ஸ், 8 பவுண்டரிகள் மூலம் 133 ரன்கள் விளாசினார்.

    விஜய் ஹசாரே தொடரில் பரோடா- விதர்பா அணிகள் மோதும் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. விதர்பாவிற்கு எதிராக பரோடா முதலில் பேட்டிங் செய்தது.

    பரோடா ஒரு கட்டத்தில் 71 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஹர்திக் பாண்ட்யா 7-வது வீரராக களம் இறங்கினார். ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 11 சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் விளாசினார்.

    "லிஸ்ட் ஏ" போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் முதல் சதம் இதுவாகும். இவர் இதுவரை 119 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போதுதான் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

    39-வது ஓவரை விதர்பா அணியின் பார்த் ரெகாடே வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் 34 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா அடித்த 133 ரன்களில் 31 ரன்கள் மட்டுமே சிங்கிள் ஆகும்.

    • முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
    • ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப் பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியுள்ளது.

    இது தொடர்பாக பேசிய BCCI செயலாளர் தேவஜித் சைகியா, " சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு கேகேஆர் அணிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அதை அனுமதிக்கும்" என்று தெரிவித்தார்.

    முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.

    • உஸ்மான் கவாஜா இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதால் அவரை வெற்றியோடு வழியனுப்ப தீவிரம் காட்டுவார்கள்.
    • மெல்போர்ன் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் கூடுதல் உற்சாகமடைந்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 3 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியாவும், 4-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மெல்போர்னில் நடந்த முந்தைய டெஸ்டில் இரு நாளுக்குள் அடங்கியதால் கடும் விமர்சனத்திற்குள்ளான ஆஸ்திரேலியா சரிவில் இருந்து வலிமையாக மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். அத்துடன் மூத்த வீரர் உஸ்மான் கவாஜா இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதால் அவரை வெற்றியோடு வழியனுப்ப தீவிரம் காட்டுவார்கள். ஆடுகளம் ஓரளவு சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் டாட் மர்பி களம் காண்கிறார்.

    அதே சமயம் மெல்போர்ன் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் கூடுதல் உற்சாகமடைந்துள்ளனர். இந்த டெஸ்டிலும் வென்று தொடரை 2-3 என்ற கணக்கில் முடிக்க ஆர்வமாக உள்ளனர். எதிரணியின் பந்து வீச்சு எப்படி இருந்தாலும் தொடர்ந்து ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிப்போம் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி கூறியுள்ளார். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    மெல்போர்னில் 10 மில்லிமீட்டர் அளவுக்கு புற்களை வைத்ததால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு தாறுமாறாக கைகொடுத்ததுடன், மோசமான ஆடுகளம் என்று ஐ.சி.சி. முத்திரை குத்தியது. அதனால் சிட்னி ஆடுகளம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இது குறித்து சிட்னி ஆடுகள பராமரிப்பாளர் ஆடம் லீவிஸ் கூறுகையில், 'போட்டிக்கு 3 நாட்கள் இருக்கும் போது ஆடுகளம் பசுமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். புற்கள் எதுவும் தென்படவில்லை என்றால் அது தான் கவலைக்குரிய விஷயம். இன்று (ேநற்று) காலை கொஞ்சம் வெயில் அடித்தது. நாளையும் (இன்று) வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது ஆடுகளத்தில் உள்ள பசுமையை நீக்கி விடும். தற்போதைக்கு ஆடுகளத்தன்மை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். போட்டி 5-வது நாள் வரை நீடிக்கும் என்று நம்புகிறேன்' என்றார். 2011-ம் ஆண்டுக்கு பிறகு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் போபாலில் நடந்து வருகிறது.
    • பெண்கள் தனிநபர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அரியானாவின் அமீரா தங்கம் வென்றார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் 68-வது சீசன் நடந்துவருகிறது.

    இதில் பெண்களுக்கான தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் அரியானாவின் அமீரா அர்ஷத் 251.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    இதேபோல, ஆண்களுக்கான டிராப் பிரிவு இறுதிப் போட்டியில் உத்தர பிரதேசத்தின் ஜுஹைர் கான் (43 புள்ளி) தங்கம் வென்று அசத்தினார்.

    • யுனைடெட் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    சிட்னி:

    யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கிரீசின் மரியா சக்காரி உடன் மோதினார்.தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய மரியா சக்கா இப்போட்டியில் வெற்றி பெற்றார். ஒசாகா 4-2 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். மரியா சக்காரி 6-6, செட் கணக்கில் வென்றார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ராசா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஜிம்பாப்வே அணி விவரம் வருமாறு:

    சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேம் க்ரீமர், பிராட்லி எவன்ஸ், கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, ப்ளெஸிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்டன் நகரவா, பிரெண்டன் டெய்லர்.

    • டெவால்டு பிரேவிஸ், ஜேசன் ஸ்மித் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
    • டி காக், ரபாடா, யான்சன், நோர்ஜே, டேவிட் மில்லர், மகாராஜ் ஆகியோருக்கும் இடம்.

    டி20 உலகக் கோப்பைக்கான மார்க்கிராம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்த 7 பேர் தற்போது இடம் பிடித்துள்ளனர்.

    மார்க்கிராமை தவிர்த்து டி காக், ரபாடா, யான்சன், நோர்ஜே, டேவிட் மில்லர், மகாராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ஆனால் டிரிஸ்டியன் ஸ்டப்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    டெவால்டு பிரேவிஸ், க்வெனா மபாகா, கார்பின் போஸ்ச், டோனி டி ஜோர்சி, ஜேசன் ஸ்மித், டொனோவன் பெரைரா, ஜார்ஜ் லிண்டே ஆகியோர் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா அணி:-

    மார்க்கிராம், போஸ்ச், டெவால்டு பிரேவிஸ், டி காக், டோனி டி ஜோர்சி, டொனோவன் பெரைரா, மார்கோ யான்சன், ஜார்ஜ் லிண்டே, மகாராஜ், க்வெனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ஜே, ரபாடா, ஜேசன் ஸ்மித்.

    • இந்தியா- வங்கதேசம் இடையில் ஒருவரும் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • செப்டம்பர் மாதம் மீண்டும் தொடரை தொடங்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது.

    இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக வங்கதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    ஆனால், தற்போது வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், பிசிசிஐ இந்திய அணியை அனுப்ப சம்மதம் தெரிவிக்குமா? என்பது சந்தேகம்தான்.

    மீடியாக்கள் தகவலின்படி, செப்டம்பர் 1, 3 மற்றும் 6-ந்தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் செப்டம்பர் 9, 12, 13-ந்தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி ஆகஸ்ட் 28-ந்தேதி வங்கதேசம் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா- வங்கதேசம் இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒயிட்பால் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை போட்டிகளை ஒத்திவைக்க இரு நாட்டின் கிரிக்கெட் போர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

    ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடருக்காக, 2026 செப்டம்பரில் இந்தியாவை வரவேற்பதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆவலுடன் காத்திருக்கிறது. இந்தத் சுற்றுப் பயணத்திற்கான திருத்தப்பட்ட தேதிகள் மற்றும் போட்டி அட்டவணைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியில் சாய் சுதர்சன் விளையாடி வருகிறார்.
    • தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

    விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியில் சாய் சுதர்சன் விளையாடி வருகிறார். இந்த நிலையில் மத்தியப் பிரதேச அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் கடந்த மாதம் 26-ந் தேதி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது சாய் சுதர்சனுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதி, போட்டியின் தொடக்கத்தில் வலைப் பயிற்சியின் போது அவர் தாக்கப்பட்ட அதே இடமாகும்.

    இந்த காயம் குணமடைந்த ஒரு மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அவர் தமிழ்நாட்டின் மீதமுள்ள ரஞ்சி டிராபி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அவர் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×