என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை எமிரேட்ஸ்"

    • அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியால் 120 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
    • எம்.ஐ. எமிரேட்ஸ் 16.1 ஓவரில் இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

    சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற குவாலிபையர்-2 போட்டியில் மும்பை எம்.ஐ. எமிரேட்ஸ்- அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் களம் இறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அந்த அணியின் அலிஷன் ஷராஃபு 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.ஐ. எமிரேட்ஸ் அணி சார்பில் கசான்ஃபர் 3 விக்கெட்டும், முகமது ரோகித் கான் மற்றும் பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எம்.ஐ. எமிரேட்ஸ் களம் இறங்கியது. அந்த அணியின் டாம் பாண்டன் 53 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும், ஷாகிப் அல் ஹசன் 24 பந்தில் 38 ரன்களும் அடிக்க 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் எம்.ஐ. எமிரேட்ஸ் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் டெசர்ட் வைபர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

    • சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது.
    • இதில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    துபாய்:

    சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. பங்கேற்று விளையாடிய 6 அணிகளில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ், கல்ப் ஜெய்ண்ட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், துபாய் கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும், துபாய் கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற துபாய் கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. நிகோலஸ் பூரன் 57 ரன்னும், பிளட்சர் 53 ரன்னும், முகமது வசீம் 43 ரன்னும், குசால் பெரேரா 38 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து ஆடிய துபாய் கேபிடல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் நிகோலஸ் பூரன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

    ஆட்டநாயகனாக நிகோலஸ் பூரனும் தொடர் நாயகனாக சிக்கந்தர் ராசாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    ×