என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியில் சாய் சுதர்சன் விளையாடி வருகிறார்.
    • தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

    விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியில் சாய் சுதர்சன் விளையாடி வருகிறார். இந்த நிலையில் மத்தியப் பிரதேச அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் கடந்த மாதம் 26-ந் தேதி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது சாய் சுதர்சனுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதி, போட்டியின் தொடக்கத்தில் வலைப் பயிற்சியின் போது அவர் தாக்கப்பட்ட அதே இடமாகும்.

    இந்த காயம் குணமடைந்த ஒரு மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அவர் தமிழ்நாட்டின் மீதமுள்ள ரஞ்சி டிராபி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அவர் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

    4-வது பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் மூன்று சீசன்கள் முறையே மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளது.

    இந்த தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யூ.பி. வாரியர்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்கு தலா 2 முறை மோத வேண்டும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான புதிய ஜெர்சியை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சியை அந்த அணியின் வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

    • ஆஸ்திரேலிய ஓபன் தொடர் வரும் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை மெல்போர்ன் நடக்க உள்ளது.
    • இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.

    டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் வரும் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை மெல்போர்ன் நடக்க உள்ளது.

    இந்த தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ், வீல்சேர் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் இந்த தொடரில் அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (45 வயது), 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் விளையாட உள்ளார். 7 முறை கிராட்ண்ஸ்லாம் ஜாம்பியனான இவர் வைல்ட் கார்டு மூலம் விளையாட உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிடும் விளையாடுவதன் மூலம் மிக வயதான பெண் வீரராக வரலாறு படைப்பார். இதற்கு முன் ஜப்பானின் கிமிகோ டேட் 44 வயதில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4.5 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய ஆற்றல் மற்றும் தெளிவான தொலைநோக்குடன் திரும்புகிறேன்.
    • ஸ்ஜோர்ட் மரிஜ்னே ஜனவரி 14-ம் தேதி இந்தியா வருகிறார்.

    இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா இன்று அறிவித்துள்ளது.

    மேலும் துணை பயிற்சியாளர்கள் டாக்டர் வெய்ன் லோம்பார்ட் (விஞ்ஞான ஆலோசகர், டோக்கியோ ஒலிம்பிக் அணியின் உறுப்பினர்) மற்றும் மாடியாஸ் விலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அவர் ஜனவரி 14-ம் தேதி இந்தியா வருவார். அதே நேரத்தில் தேசிய பயிற்சி முகாம் ஜனவரி 19-ம் தேதி பெங்களூருவில் உள்ள SAI-யில் தொடங்குகிறது.

    அவரது முதல் தொடராக மார்ச் 8 முதல் 14, வரை ஐதராபாத்தில் நடைபெறும் FIH பெண்கள் ஹாக்கி உலக கோப்பை தகுதி சுற்று இருக்கும்.

    பயிற்சியாளர் நியமனம் குறித்து மரிஜ்னே கூறுகையில், "4.5 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய ஆற்றல் மற்றும் தெளிவான தொலைநோக்குடன் திரும்புகிறேன். அணியின் வளர்ச்சியை ஆதரித்து, வீரர்கள் தங்கள் முழு திறனை உலக அரங்கில் அடைய உதவுவேன்" என்றார்.

    இவர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணி 4-வது இடத்தை பிடித்து வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

    • நான் பள்ளியில் இருந்தபோது, ​​உலக கோப்பை சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தோம்.
    • இந்தியா முதல் சுற்றில் இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகளை எதிர்கொள்ளும்.

    10-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் இந்த முறை ஐசிசி டி20 உலக கோப்பையை யாரும் பார்க்கப் போவதில்லை என தமிழக வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

    இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது:-

    இந்த முறை ஐசிசி டி20 உலக கோப்பையை யாரும் பார்க்கப் போவதில்லை. இந்தியா மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தியா மற்றும் நமீபியா போன்ற போட்டிகள் உங்களை டி20 உலக கோப்பையிலிருந்து உண்மையில் விலக்கி வைக்கின்றன.

    1996, 1999 மற்றும் 2003 -ம் ஆண்டுகளில், நான் பள்ளியில் இருந்தபோது, உலக கோப்பை சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தோம். உலகக் கோப்பை அட்டைகளைச் சேகரித்து அட்டவணையை அச்சிட்டோம். ஏனெனில் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தது. அந்த எதிர்பார்ப்பு இயல்பாகவே உருவாகும்.

    இந்தியா முதல் சுற்றில் இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகளை எதிர்கொள்ளும். அது அதை இன்னும் உற்சாகப்படுத்தியது. இன்றைய காலகட்டத்தில், அந்த எதிர்பார்ப்பு உணர்வு இல்லை.

    • கடந்த ஆண்டு ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜூன் டெண்டுல்கரை வாங்கியது.
    • அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என யோகராஜ் கூறியுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஆலோசகராக உள்ளார். இவரது மகனாக அர்ஜூன் டெண்டுல்கர் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

    ஐபிஎல் தொடரில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்தார். அவருக்கு பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனையடுத்து கடந்த ஆண்டு ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜூன் டெண்டுல்கரை வாங்கியது.

    அவர் தற்போது ஐபிஎல் தொடருக்காக பந்து வீச்சு மட்டும் பேட்டிங்கில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவரது பேட்டிங்கை பார்த்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் யுவராஜ் சிங் தந்தையுமான யோகராஜ் பாராட்டி உள்ளார்.

    அதில், "அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும், அவர் ஒரு தரமான பேட்ஸ்மேன், அவர் சச்சினைப் போலவே பேட்டிங் செய்கிறார்" என்றார்.

    • இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவி வருகிறது.
    • இரண்டு டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்துள்ளனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி, பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த 8 மாதங்களிலேயே பயிற்சியாளர் பதவியை துறந்தார்.

    இந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தின் மூலம் தன்னை பின்தொடர்பவர்களுடன் கலந்துரையாடிய அவரிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு கில்லஸ்பி, 'பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நான் இருந்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னிடம் எதுவும் ஆலோசிக்காமல் சீனியர் உதவி பயிற்சியாளரை நீக்கியது. ஒரு தலைமை பயிற்சியாளராக இதை என்னால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற பல அவமதிப்புகளை சந்தித்தேன். அதனால் தான் விலகினேன்' என்றார்.

    'இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவி வருகிறது. இரண்டு டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்துள்ளனர். அதனால் இந்திய டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளராக நீங்கள் செயல்பட வேண்டும். உங்களது பயிற்சி இந்திய அணிக்கு தேவைப்படுகிறது' என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு கில்லஸ்பி, வேண்டாம்.... நன்றி கூறி பின்வாங்கினார்.

    • செல்சி கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக என்ஜோ மரிஸ்கா (இத்தாலி) 2024-ம் ஆண்டு இணைந்தார்.
    • அவரது பயிற்சியின் கீழ் செல்சி அணி கான்பரன்ஸ் லீக் மற்றும் கிளப் உலகக் கோப்பையை வென்று சாதித்தது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்தில் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபலமான அணிகளில் ஒன்றான செல்சி கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக என்ஜோ மரிஸ்கா (இத்தாலி) 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இணைந்தார். அவரது பயிற்சியின் கீழ் செல்சி அணி கான்பரன்ஸ் லீக் மற்றும் கிளப் உலகக் கோப்பையை வென்று சாதித்தது.

    ஆனால் தற்போது பிரிமீயர் லீக் போட்டியில் செல்சி அணியின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. கடைசி 7 லீக் ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதுடன், புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது.

    இந்த நிலையில் அவருக்கும், கிளப் நிர்வாகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கிளப்பில் தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று சமீபத்தில் வெளிப்படையாக கூறினார்.

    இந்த நிலையில் ஒப்பந்த காலம் 2029-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மரிஸ்கா நேற்று விலகினார்.

    • 5-வது லீக்கில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணி, எஸ்.ஜி. பைப்பர்சுடன் மோதியது.
    • வழக்கமான நேரத்தில் 3-3 என்று சமநிலையில் முடிந்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

    ராஞ்சி:

    4 அணிகள் இடையிலான பெண்களுக்கான 2-வது ஹாக்கி லீக் இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 5-வது லீக்கில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணி, எஸ்.ஜி. பைப்பர்சுடன் மோதியது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது. ஆனால் கடைசி 2 நிமிடங்களில் பைப்பர்ஸ் வீராங்கனைகள் சுனேலிதா தோப்போ, லோலா ரியரா ஆகியோர் அடுத்தடுத்து கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தனர்.

    வழக்கமான நேரத்தில் 3-3 என்று சமநிலையில் முடிந்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பெங்கால் அணி 4-3 என்ற கணக்கில் பைப்பர்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது. எதிரணியின் பல வாய்ப்புகளை முறியடித்து அசத்திய பெங்கால் கோல் கீப்பர் ஜெனிபர் ரிஜோ ஆட்டநாயகி விருதை பெற்றார்.

    இன்றைய ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ்- சூர்மா ஹாக்கி லீக் கிளப் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    • உஸ்மான் கவாஜா கடந்த 2 ஆண்டாக தனது பார்மை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறார்.
    • கடைசி 2 ஆண்டுகளில் அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா இதுவரை 87 டெஸ்ட், 40 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 8,001 ரன்கள் எடுத்துள்ளார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலியா அணியில் முக்கிய வீரராக ஜொலித்த கவாஜா, கடந்த 2 ஆண்டாக தனது பார்மை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறார்.

    கடைசி இரண்டு ஆண்டுகளில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் சராசரி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

    2025-ம் ஆண்டில் அவரிடமிருந்து ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் மட்டுமே வந்துள்ளது. நடப்பு ஆஷஸ் தொடரிலும் 5 இன்னிங்சில் வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இதற்கிடையே, உஸ்மான் கவாஜா தனது பார்மை இழந்து போராடி வரும் நிலையில், ஆஷஸ் தொடரில் 5வது டெஸ்ட்டில் ஓய்வை அறிவிக்க வேண்டும். அவரது சொந்த மண்ணான சிட்னியில் ஓய்வு அறிவிப்பது சிறந்த முடிவு என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உஸ்மான் கவாஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், சர்வதேசபோட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். சிட்னி டெஸ்ட் தான் எனது கடைசி டெஸ்ட் என தெரிவித்தார்.

    • விஜய் ஹசாரே டிராபியில் ரோகித், விராட் மீண்டும் வந்தபோது மக்கள் நேரில் வந்து பார்த்தனர்.
    • கிரிக்கெட் வீரரை விட விளையாட்டு பெரியது என எப்போதும் கூறுவேன் என்றார் அஸ்வின்.

    புதுடெல்லி:

    முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:

    2027 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டி வடிவம் குறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. அதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்.

    ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்னும் ஒரு இடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு இடமில்லை என்று நினைக்கிறேன்.

    விஜய் ஹசாரே டிராபியில் ரோகித் மற்றும் விராட் மீண்டும் வந்தபோது மக்கள் நேரில் வந்து பார்த்தார்.

    கிரிக்கெட் வீரரை விட விளையாட்டு பெரியது என எப்போதும் கூறுவேன். இவர்கள் ஓய்வு பெறும்போது என்ன நடக்கும்?

    ஐ.சி.சி. பிபாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கால்பந்தில் பல லீக்குகள் உள்ளன. ஆனால் பிபா 4 ஆண்டுக்கு ஒருமுறை உலகக் கோப்பையை நடத்துகிறது. உலகக் கோப்பைக்கு மதிப்பு உண்டு.

    ஒருநாள் போட்டியை முக்கியமானதாக மாற்ற விரும்பினால், உலகக் கோப்பையை 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.

    ஒருநாள் தொடருக்குப் பதிலாக, டி20 தொடர்களை விளையாட வேண்டும். இது உள்நாட்டுப் போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வாரியத்திற்கு உதவும் என தெரிவித்தார்.

    • பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்தனர்.
    • கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாடிய அவர் புத்தாண்டு விருந்து அளித்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை நேரில் சந்தித்தார். ஆஸ்திரேலிய பிரதமர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாடிய அவர் புத்தாண்டு விருந்து அளித்தார்.

    அப்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் ஆண்டனி அல்பானீஸ் உற்சாகமாக கலந்துரையாடினார்.

    இந்தச் சந்திப்பு பற்றி ஆண்டனி அல்பானீஸ் தனது இன்ஸ்டாகிராமில், இது வேறு எந்தத் தொடரையும் போலல்லாத ஒரு ஆஷஸ் தொடராக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் சிட்னி மைதானம் ஆஸ்திரேலிய ரசிகர்களும் பார்மி ஆர்மியும் மெக்ராத் அறக்கட்டளையின் சிறந்த பணியை ஆதரிக்கும் இளஞ்சிவப்பு கடலாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்குப் போவோம் என பதிவிட்டுள்ளார்

    ×