என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20-யில் ஒரேயொரு பவுலர் 5 ஓவர்கள் வீச அனுமதிக்க வேண்டும்: முன்னாள் நடுவர்
    X

    டி20-யில் ஒரேயொரு பவுலர் 5 ஓவர்கள் வீச அனுமதிக்க வேண்டும்: முன்னாள் நடுவர்

    • ஒயிட்பால் கிரிக்கெட்டில் பேட்டிற்கும், பந்திற்கும் இடையிலான பேலன்ஸ் சமநிலையாக இருக்க வேண்டும்.
    • டி20 கிரிக்கெட்டில் ஒரேயொரு பந்து வீச்சாளர் 5 ஓவர் வீசப்படுவதை பார்க்க விரும்புகிறேன்.

    கிரிக்கெட்டில் பேட்டிற்கும், பந்திற்கும் இடையிலான பேலன்ஸை சமநிலைப்படுத்த பல்வேறு விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. என்றாலும் பேட்டர்களின் ஆதிக்கம்தான் கையோங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களும் அதைத்தான் விரும்புகின்றனர்.

    டி20 கிரிக்கெட்டில் ஒரு பந்து வீச்சாளர் 4 ஓவர்கள் மட்டுமே வீச முடியும். குறைந்தபட்சம் 5 பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நிலையில், ஒரேயொரு பந்து வீச்சாளர் 5 ஓவர்கள் வீச அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரபல நடுவர் சைமன் டபெல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சைமன் டபெல் கூறியதாவது:-

    நான் சில டி20 லீக்குகளுக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளேன். ஆனால், இன்னும் அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், ஒயிட்பால் கிரிக்கெட்டில் பேட்டிற்கும், பந்திற்கும் இடையிலான பேலன்ஸ் சமநிலையாக இருக்க வேண்டும். இதை பார்க்க விரும்புகிறேன்.

    டி20 கிரிக்கெட்டில் ஒரேயொரு பந்து வீச்சாளர் 5 ஓவர் வீசப்படுவதை பார்க்க விரும்புகிறேன். அனைத்து பந்து வீச்சாளர்களையும் 4 ஓவர்களில் கட்டுப்படுத்துவதால் பேட்ஸ்மேன் ஒருவர் முதல் பந்தில் இருந்து கடைசி வரை களத்தில் இருந்து 100 ரன்கள் அடிக்கக் கூடிய நிலை ஏற்படுகிறது.

    ஒரு ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேனுக்கு எதிராக ஒரு ஆதிக்கம் செலுத்தும் பந்து வீச்சாளரால் சமநிலை செய்வதற்கு, அந்த பந்து வீச்சாளருக்கு 5 ஓவர்கள் வழங்க முடியுமா?. இந்த மாதிரியான விஷயங்கள் உங்களுக்கு தெரியும். நம்மால் எப்படி இந்த நிலையைச் சற்றே சமநிலைப்படுத்த முடியும் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்.

    ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி உள்ளது. ஐஎல்டி20-யில் சூப்பர் சப் (Supre Sub) விதி உள்ளது. 11 வீரர்கள் களத்தில் விளையாடுவதை என்னுடைய மைய கிரிக்கெட் எனக்கு சொன்னது. நான் அதிகமான ஆல்-ரவுண்டர்களை பார்க்க விரும்புகிறேன். 11 பேருக்கு 11 பேர் என்பதை பார்க்க விரும்புகிறேன். இம்பேக்ட் பிளேயர் இரண்டு பந்துகளை சந்திக்கலாம். பீல்டிங் செய்ய இயலாது. அதில் மதிப்பு எங்கே இருக்கிறது? கிரிக்கெட் பாரம்பரிய அம்சங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    இவ்வாறு சைடன் டபெல் தெரிவித்துள்ளார்.

    2004 முதல் 2008 வரை ஐந்து முறை தொடர்ந்து ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை சைமன் டபெல் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×