என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஒரே ஓவரில் 5 சிக்ஸ்: "லிஸ்ட் ஏ" போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார் ஹர்திக் பாண்ட்யா
- பரோடா அணி 71 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது திணறியது.
- ஹர்திக் பாண்ட்யா 11 சிக்ஸ், 8 பவுண்டரிகள் மூலம் 133 ரன்கள் விளாசினார்.
விஜய் ஹசாரே தொடரில் பரோடா- விதர்பா அணிகள் மோதும் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. விதர்பாவிற்கு எதிராக பரோடா முதலில் பேட்டிங் செய்தது.
பரோடா ஒரு கட்டத்தில் 71 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஹர்திக் பாண்ட்யா 7-வது வீரராக களம் இறங்கினார். ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 11 சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் விளாசினார்.
"லிஸ்ட் ஏ" போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் முதல் சதம் இதுவாகும். இவர் இதுவரை 119 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போதுதான் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
39-வது ஓவரை விதர்பா அணியின் பார்த் ரெகாடே வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் 34 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா அடித்த 133 ரன்களில் 31 ரன்கள் மட்டுமே சிங்கிள் ஆகும்.






