என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • லாங்-ஆன் திசையில் நின்றிருந்த நான் பந்தை பிடிப்பதற்கான டைவ் அடித்தேன்.
    • 4 ரன்களை சேமிப்பதை விட உங்களுடைய 4 ஓவர்கள் மிகவும் முக்கியமானது என்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வெயின் பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். 10 சீசனில் 154 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

    இவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனிக்கும் இடையில் சிறந்த தொடர்பு உள்ளது. எம்.எஸ். டோனியை சகோதரர் என்றே அழைத்து வருகிறார்.

    இந்த நிலையில் Beard Before Wicket போட்காஸ்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2018-ல் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

    ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட தடைவிதிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 2018-ல் களம் இறங்கினோம். லாங்-ஆன் திசையில் நின்றிருந்த நான் பந்தை பிடிப்பதற்கான டைவ் அடித்தேன். உண்மையிலேயே எனக்கு அப்போது 34 வயதிற்கு மேல் இருக்கும். அந்த ஓவர் முடிந்தபின்னர், அவர் என்னை அழைத்தார். அவர் என்னிடம், என்னுடைய கிரிக்கெட் மைதானத்தில் இனிமேல் ஒருபோதும் டைவ் அடிக்கக் கூடாது எனக் கூறினார். 4 ரன்களை சேமிப்பதை விட உங்களுடைய 4 ஓவர்கள் மிகவும் முக்கியமானது என்றார். அவர் என்னிடம் சொன்னபோது, ஆஹா என்பது போல் உணர்ந்தேன்.

    இவ்வாறு பிராவோ தெரிவித்துள்ளார்.

    • பென் ஸ்டோக்ஸை இந்திய வீரர் அஸ்வின் 13 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
    • நாதன் லயன் 10 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 160 ரன்களும், ஹாரி ப்ரூக் 84 ரன்கள் அடித்த போதிலும், மற்ற வீரர்கள் சொதப்பினர்.

    கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 11 பந்துகளை சந்தித்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸை ஸ்டார்க் 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

    மேலும், பென் ஸ்டோக்ஸை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக இந்திய வீரர் அஸ்வின் 13 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தற்போது ஸ்டார்க் 14 முறை ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்து அஸ்வின் சாதனையை முறியடித்துள்ளார்.

    நாதன் லயன் 10 முறையும், ஜடேஜா 8 முறையும் பென் ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.

    • முஸ்தபிசுர் ரஹ்மானை விலக்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒரு உத்தரவு வந்துள்ளது
    • இத்தகைய முடிவுக்குப் பின்னால் எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளை அந்நாட்டில் ஒளிபரப்புவதற்கும், இணையத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் வங்கதேச அரசு காலவரையற்ற தடையை விதித்துள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை இந்த தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "மார்ச் 26, 2026 முதல் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வங்காளதேச நட்சத்திர வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விலக்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (பிசிசிஐ) ஒரு உத்தரவு வந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம். 

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இத்தகைய முடிவுக்குப் பின்னால் எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை. இம்முடிவு வங்கதேச மக்களைப் புண்படுத்தி, துயரப்படுத்தி, வேதனைப்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தல்களின்படி கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவு உரிய அதிகாரியின் ஒப்புதலுடன், பொது நலன் கருதியும் வெளியிடப்படுகிறது.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும்சூழலில் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து பிசிசிஐ அவரை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்தது. அதன்பேரில் முஸ்தபிசுர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து வங்கதேச அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

    • 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
    • 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்திய எந்த நாடும் இதுவரை வென்றதில்லை.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த 20-ந்தேதி அறிவிக்கப்பட்டது. நடப்பு சாம்பியனான இந்திய அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்ளுமா என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்திய எந்த நாடும் இதுவரை வென்றதில்லை. அதை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி மாற்றி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் டி.வில்லியர்ஸ் கணித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "ஹர்திக் பாண்ட்யாவால் எந்த சூழ்நிலையிலும் பந்து வீச முடியும். பேட்டிங்கில் எந்த வரிசையிலும் களம் இறங்கி அதிரடியாக ஆடக் கூடியவர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அவர் மிகவும் முக்கிய வீரராக இருப்பார். ஹர்திக் பாண்ட்யா 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஓவர்கள் பேட்டிங் செய்தால் எதிரணிக்கு தோல்விதான் ஏற்படும். இதனால் அவரை வெளி யேற்ற வேண்டும் என்ற உணர்வுடன் எதிர் அணி வீரர்கள் இருப்பார்கள்" என்று கூறினார்.

    20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    • 2016 ஆம் ஆண்டு நீரஜ் சோப்ராவுக்கு JSW ஸ்போர்ட்ஸ் உடனான தொடர்பு தொடங்கியது.
    • நீரஜ் சோப்ராவின் ஒவ்வொரு வெற்றிக்கும் JSW ஸ்போர்ட்ஸ் உடன் நின்று உதவியது.

    இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

    இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நீரஜ் சோப்ரா JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடனான தனது தொடர்பை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

    2016 ஆம் ஆண்டு நீரஜ் சோப்ராவுக்கு JSW ஸ்போர்ட்ஸ் உடனான தொடர்பு தொடங்கியது. நீரஜ் சோப்ராவின் ஒவ்வொரு வெற்றிக்கும் JSW ஸ்போர்ட்ஸ் உடன் நின்று உதவியது.

    நீரஜ் தற்போது வேல் ஸ்போர்ட்ஸ் என்ற புதிய தடகள மேனேஜ்மேண்ட் நிறுவனம் மூலம் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளார்

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது
    • WTC புள்ளிப்பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் இந்தியா நீடிக்க வேண்டும் என்றால் அடுத்து வரும் 9 போட்டிகளில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதன் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

    இன்னும் இந்திய அணிக்கு 9 போட்டிகள் உள்ளது. இதில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

    இந்திய அணி இந்த 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

    இலங்கையில் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து நியூசிலாந்திலும் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக முடிந்த அளவுக்கு இந்தியா போராடி வெற்றி பெற்றாலும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு புதிய திட்டம் ஒன்றை டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் வகுத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் களமிறங்குவதற்கு முன்பு இந்திய அணி வீரர்களுக்கு சிறந்த பயிற்சி தேவை. ஆகவே ஒவ்வொரு டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வீரர்களுக்கு 15 நாள் முகாம் நடத்தவேண்டும் என்று பிசிசிஐயிடம் கில் கோரிக்கை வைத்துள்ளார். 

    • ஹாரி ப்ரூக் 84 ரன்னில் அவுட் ஆனார்
    • ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.

    ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர். ஹாரி ப்ரூக் 84 ரன்னில் அவுட்டாக நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.

    97.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

    • முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 366 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய மும்பை அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஜெய்ப்பூர்:

    விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிரா, மும்பை அணிகள் மோதின.

    முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 366 ரன்கள் குவித்தது. குல்கர்னி 114 ரன்னும், பிரித்வி ஷா 71 ரன்னும், ருதுராஜ் 66 ரன்னும் எடுத்தனர். அடுத்து ஆடிய மும்பை அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 128 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிர அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், விஜய் ஹசாரே தொடரில் வேகமாக 100 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்தார். அவரது இந்த சாதனையை பெருமைப்படுத்தும் வகையில் சி.எஸ்.கே. போஸ்டர் வெளியிட்டுள்ளது.

    • முதலில் ஆடிய டெசர்ட் வைபர்ஸ் அணி 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் சாம் கர்ரன் 51 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    துபாய்:

    4-வது சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் எம்.ஐ.எமிரேட்ஸ், டெசர்ட் வைபர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய டெசர்ட் வைபர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் சாம் கர்ரன் 51 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அடுத்து ஆடிய எம்.ஐ.எமிரேட்ஸ் 18.3 ஓவரில் 136 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெசர்ட் வைபர்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது.

    கடந்த 2 தொடர்களில் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த வைபர்ஸ் இந்த தடவை முதல் முறையாக கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலகக் கோப்பைக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
    • வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்கா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    15 பேர் கொண்ட வங்கதேச அணி விவரம் வருமாறு:

    லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் , சைப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், டன்சிம் ஹசன், தஸ்கின் அகமது, ஷயிப் உதின், ஷோரிபுல் இஸ்லாம்.

    • டெல்லி அணியை 3 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் 7 முறை இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவில் நடத்தப்படும் பெண்கள் பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் 7 முறை இடம் பிடித்துள்ளார். இரண்டு முறை ஒருநாள் மற்றும் ஐந்து முறை டி20 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இவரை உ.பி. வாரியர்ஸ் ஏலத்தில் 1.9 கோடி ரூபாய்க்கு எடுத்தது. உ.பி. வாரியர்ஸ் அறிமுக சீசனான 2023-ல் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடம் பிடித்து. 2024-ல் 4-வது இடமும், 2025-ல் 5-வது இடமும் பிடித்தது.

    மெக் லேனிங் இதற்கு முன்னதாக மூன்று சீசனிலும் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தார். மூன்று முறையில் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. மூன்று முறையும் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    WPL தனது நான்காவது சீசனைத் தொடங்கும்போது, இந்த லீக் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள விதம், கிரிக்கெட்டின் தரம், போட்டித்தன்மை மற்றும் அற்புதமான புதிய வீராங்கனைகளின் திறமைகளின் எழுச்சி ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் தரத்தை உயர்த்தி வருவது பார்ப்பதற்கு நம்பமுடியாத வகையில் உள்ளது என மெக் லேனிங் தெரிவித்துள்ளார்.

    பெண்கள் பிரீமியர் லீக் நவி மும்பையில் 9-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையிலும், வதோதராவில் ஜனவரி 19-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.

    • மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்.
    • ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேமியன் மார்ட்டின் தூண்டப்பட்ட கோமா நிலையிலிருந்து மீண்டு எழுந்தார். 

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அவரைத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று கோமாவில் இருந்து டேமியன் எழுந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    'எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த இந்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த சவாலான காலகட்டம் முழுவதும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட கோல்ட் கோஸ்ட் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவக் குழுவினருக்கு எங்களின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இது ஒரு கடினமான நேரமாக இருந்துள்ளது, எனவே குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என டேமியன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

    மேலும் "அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வேறுபிரிவிற்கு மாற்றப்படுகிறார். இது அவர் எவ்வளவு சிறப்பாக மீண்டு வருகிறார் என்பதையும், நிலைமை விரைவாக மாறியுள்ளது என்பதையும் காட்டுகிறது" என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். 


    ×