என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டி20 உலகக் கோப்பைக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
    • வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்கா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    15 பேர் கொண்ட வங்கதேச அணி விவரம் வருமாறு:

    லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் , சைப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், டன்சிம் ஹசன், தஸ்கின் அகமது, ஷயிப் உதின், ஷோரிபுல் இஸ்லாம்.

    • டெல்லி அணியை 3 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் 7 முறை இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவில் நடத்தப்படும் பெண்கள் பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் 7 முறை இடம் பிடித்துள்ளார். இரண்டு முறை ஒருநாள் மற்றும் ஐந்து முறை டி20 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இவரை உ.பி. வாரியர்ஸ் ஏலத்தில் 1.9 கோடி ரூபாய்க்கு எடுத்தது. உ.பி. வாரியர்ஸ் அறிமுக சீசனான 2023-ல் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடம் பிடித்து. 2024-ல் 4-வது இடமும், 2025-ல் 5-வது இடமும் பிடித்தது.

    மெக் லேனிங் இதற்கு முன்னதாக மூன்று சீசனிலும் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தார். மூன்று முறையில் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. மூன்று முறையும் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    WPL தனது நான்காவது சீசனைத் தொடங்கும்போது, இந்த லீக் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள விதம், கிரிக்கெட்டின் தரம், போட்டித்தன்மை மற்றும் அற்புதமான புதிய வீராங்கனைகளின் திறமைகளின் எழுச்சி ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் தரத்தை உயர்த்தி வருவது பார்ப்பதற்கு நம்பமுடியாத வகையில் உள்ளது என மெக் லேனிங் தெரிவித்துள்ளார்.

    பெண்கள் பிரீமியர் லீக் நவி மும்பையில் 9-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையிலும், வதோதராவில் ஜனவரி 19-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.

    • மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்.
    • ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேமியன் மார்ட்டின் தூண்டப்பட்ட கோமா நிலையிலிருந்து மீண்டு எழுந்தார். 

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அவரைத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று கோமாவில் இருந்து டேமியன் எழுந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    'எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த இந்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த சவாலான காலகட்டம் முழுவதும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட கோல்ட் கோஸ்ட் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவக் குழுவினருக்கு எங்களின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இது ஒரு கடினமான நேரமாக இருந்துள்ளது, எனவே குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என டேமியன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

    மேலும் "அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வேறுபிரிவிற்கு மாற்றப்படுகிறார். இது அவர் எவ்வளவு சிறப்பாக மீண்டு வருகிறார் என்பதையும், நிலைமை விரைவாக மாறியுள்ளது என்பதையும் காட்டுகிறது" என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். 


    • வங்கதேச வீரர்கள் இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
    • முஷ்தபிசுர் ரகுமான் கே.கே.ஆர். அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.

    வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

    இதனால் நெருக்கடிக்கு உள்ளான பிசிசிஐ, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியது. பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

    IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்ட நிலையில், ஆவேசமாக பேசிய வங்கதேச விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், "டி20 உலக கோப்பையில் வங்கதேசத்தின் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும். IPLல் ஒப்பந்தம் போட்ட பிறகும், வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாட முடியாதென்றால், எப்படி வங்கதேச வீரர்களால் பாதுகாப்பாக உணர முடியும்?

    IPL போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளேன். மேலும் எந்த சூழ்நிலையிலும் வங்கதேசத்தையோ எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடிமை மனநிலையில் இருந்து எப்போதோ விடுபட்டு விட்டோம்" என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் வங்கதேச போட்டிகள் அனைத்தையும், இந்தியாவிற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என ஐசிசி-க்கு முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளது வங்கதேசம் கிரிக்கெட் போர்டு. பாதுகாப்பு கவலை அளிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    தற்போதுள்ள சூழ்நிலை மதிப்பீடு அளவின்படி, இந்தியாவில் வங்கதேச அணியின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்து வரும் நிலையில், வங்கதேச அணியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமா? என்பது குறித்து பரிசீலனை செய்யவும் என வங்கதேச அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் வங்கதேச கிரிக்கெட் போர்டு, முறையாக ஐசிசி-க்கு வங்கதேச போட்டிகளை அனைத்தையும் வேறு இடத்தில் (இந்தியாவுக்கு வெளியில்) நடத்த பரிசீலனை செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என பிசிபி தெரிவித்துள்ளது.

    இந்தியா- இலங்கை வருகிற பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை டி20 உலகக் கோப்பையைநடத்துகிறது.

    • வங்கதேசத்தில் நடைபெற்று கொண்டிருப்பது யாருக்கும் நல்லது அல்ல.
    • வங்கதேசத்தில் முன்கூட்டியே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், கொல்த்தாக நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாபிசுர் ரகுமானை ஏலம் எடுத்துள்ளதாக, இந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மீது பாஜக மற்றும் இந்து அமைப்புத் தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டினர். அவரை துரோகி என்று குறிப்பிட்டனர். இது பெரிய விவகாரமாக வெடிக்க பிசிசிஐ, முஸ்தாபிசுர் ரகுமானை விடுவிக்க கே.கே.ஆர். அணியிடம் கேட்டுக்கொண்டது. பிசிசிஐ உத்தரவின்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அவரை விடுவித்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்களை போன்று, வங்கதேச வீரர்களை ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிக்கக் கூடாது என மேற்கு வங்க மாநில முன்னாள் பாஜக தலைவர் திலிப் கோஷ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக திலிப் கோஷ் கூறியதாவது:-

    வங்கதேசத்தில் நடைபெற்று கொண்டிருப்பது யாருக்கும் நல்லது அல்ல. இந்திய அரசாங்கம் தனது கடமையைச் செய்து வரும் நிலையில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களால் மேற்கு வங்க மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இது மனிதாபிமானமற்ற செயல். இதற்குப் பின்விளைவுகள் இருக்கும்.

    வங்கதேசத்தில் முன்கூட்டியே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஒரு நிலையான அரசாங்கம் அமைய வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உயிர்களும் உடைமைகளும் பாதுகாக்கப்படும். எல்லைப் பதட்டங்களும் குறையும்.

    நான் பிசிசிஐ-க்கு நன்றி தெரிவிக்கிறேன். பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் விளையாட அனுமதிக்கப்படாதது போலவே, வங்கதேச கிரிக்கெட் வீரர்களும் அனுமதிக்கப்படக் கூடாது. இந்தக் கோரிக்கை கொல்கத்தாவில் இருந்து வந்தது, அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 10 வருடங்களில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
    • 2030 காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது.

    72-வது தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கியது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இதில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் பல்வேறு நகரங்களில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிஃபா உலக கோப்பை, உலக கோப்பை ஹாக்கி, முக்கிய செஸ் போட்டிகள் அடங்கும்.

    2030 காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. 2036 ஒலிம்பிக்கை நடத்த இந்தியா முழு பலத்துடன் தயாராகி வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இன்று முதல் ஜனவரி 11-ந்தேதி வரை இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 58 அணிகள் விளையாடுகின்றனர்.

    • இங்கிலாந்து அணி 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
    • ஜோ ரூட், ஹாரி ப்ரூக் அரைசதம் அடிக்க இங்கிலாந்து மேலும் விக்கெட்டுகளை இழக்கவில்லை.

    ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர்.

    இங்கிலாந்து அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது, வெளிச்சமின்மை காரணமாக முதல்நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஜோ ரூட் 72 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 78 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், நேசர், போலண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
    • ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் விளையாட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.

    வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது.

    இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

    IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்ட நிலையில், ஆவேசமாக பேசிய வங்கதேச விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், "டி20 உலக கோப்பையில் வங்கதேசத்தின் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும். IPLல் ஒப்பந்தம் போட்ட பிறகும், வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாட முடியாதென்றால், எப்படி வங்கதேச வீரர்களால் பாதுகாப்பாக உணர முடியும்?

    IPL போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளேன். மேலும் எந்த சூழ்நிலையிலும் வங்கதேசத்தையோ எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடிமை மனநிலையில் இருந்து எப்போதோ விடுபட்டு விட்டோம்" என்று தெரிவித்தார்.

    • முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இந்துக்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    • முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.

    வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து தனியார் ஊடகத்தில் பேசிய முஸ்தபிசுர் ரகுமான், "என்னை அணியில் இருந்து விடுவித்துவிட்டால், என்னால் வேறு என்ன செய்ய முடியும்?" என்று விரக்தியுடன் தெரிவித்தார்.

    முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.

    • ஒருவேளை வங்கதேசத்தின் இந்து வீரர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?
    • ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் - இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்?

    வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்காகக் கிரிக்கெட்டை பலிகடா ஆக்கக்கூடாது என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை காரணம் காட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமானை  விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டது.

    பிசிசிஐ-யின் கட்டளையை ஏற்று, 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முஷ்தபிசுர் ரகுமானை கேகேஆர் அணி விடுவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இதற்கு திருவனநாதபுர காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, "பிசிசிஐ, முஷ்தபிசுர் ரகுமானை மிகவும் பரிதாபகரமான முறையில் அணியிலிருந்து நீக்கியுள்ளது.

    ஒருவேளை வங்கதேசத்தின் இந்து வீரர்கள், லிட்டன் தாஸ் அல்லது சௌம்யா சர்க்கார் போன்றவர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?

    ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் - இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்?

    விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரரை அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலைக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல" என்று தெரிவித்துள்ளார்.

      

    • முதலில் ஆடிய கர்நாடக அணி 50 ஓவரில் 332 ரன்கள் குவித்தது.
    • சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து 108 ரன்கள் சேர்த்தார்.

    அகமதாபாத்:

    விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் கர்நாடகா, திரிபுரா அணிகள் மோதின.

    இதில், முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் கர்நாடக அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து 108 ரன்கள் சேர்த்தார். நடப்பு தொடரில் படிக்கல் அடித்த 4-வது சதம் இதுவாகும்.

    தொடர்ந்து ஆடிய திரிபுரா அணி 49 ஓவரில் 252 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் கர்நாடக அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நடப்பு தொடரில் 5-வது வெற்றியை ருசித்த கர்நாடகா அணி ஏ பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    • முதல் 3 போட்டியில் வென்று ஆஸ்திரேலியா டி20 தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
    • நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது. 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    ×