என் மலர்
விளையாட்டு

2036 ஒலிம்பிக்கை நடத்த இந்தியா முழு பலத்துடன் தயாராகி வருகிறது: பிரதமர் மோடி
- கடந்த 10 வருடங்களில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
- 2030 காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
72-வது தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கியது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இதில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் பல்வேறு நகரங்களில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிஃபா உலக கோப்பை, உலக கோப்பை ஹாக்கி, முக்கிய செஸ் போட்டிகள் அடங்கும்.
2030 காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. 2036 ஒலிம்பிக்கை நடத்த இந்தியா முழு பலத்துடன் தயாராகி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இன்று முதல் ஜனவரி 11-ந்தேதி வரை இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 58 அணிகள் விளையாடுகின்றனர்.
Next Story






