என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
    • கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி. இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    மைதானத்தில் வெற்றிக் களிப்பில் கோலி உள்ளிட்ட ஆர்சிபி அணியனர் கொண்டாடித் தீர்த்தனர். இதனிடையே தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கைகொடுக்கும் வழக்கப்படி டோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்ற நிலையில் ஆர்சிபி அணியினர் தங்களது கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததால் தோனி அவர்களுக்கு கை கொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறி ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு சென்றார்.


     

    இருப்பினும் பிற சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி அணியினருடன் கைகுலுக்கினர். இந்நிலையில் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமலேயே டோனி மைதானத்தை விட்டு வேகமாக வெளியேறிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் தோனியின் செயல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    • என்னை பொறுத்தவரை ஆட்டம் மாறியது டோனி அடித்த 110 மீட்டர் தூர சிக்சரால்தான்.
    • மைதானத்திற்கு வெளியில் பந்து சென்றதால் யாஷ் தயாள் வீசுவதற்கு புதிய பந்து கிடைத்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

    முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், போட்டி முடிந்ததும் வீரர்களின் ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:

    இந்தப் போட்டியின் சிறப்பான விஷயமே எம்.எஸ்.டோனி அந்த பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தது தான். அதனால்தான் நனைந்து ஊறிய பந்திற்கு பதிலாக புதிய பந்து கிடைத்தது. நன்றாக வீச முடிந்தது.

    பழைய பந்து ஈரமாக இருந்ததால், திட்டமிட்ட பகுதியில் பவுலிங் செய்ய முடியவில்லை. முதல் பந்திற்கு பின் யாஷ் தயாள் அசத்திவிட்டார். அப்படி ஒரு வெற்றியையும், கம்பேக்கையும் ஆர்சிபி அணி செய்துள்ளது.

    அகமதாபாத் மைதானத்தில் ஒரு பணி காத்திருக்கிறது. அதனை வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம் என தெரிவித்தார்.

    • இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை எதிர்கொண்டது.
    • இதில் இந்திய ஜோடி 21-15, 21-15 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    பாங்காக்:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, சீன ஜோடியை எதிர்கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சாத்விக்- சிராக் ஜோடி ஆதிக்கம் செலுத்தியது.

    இறுதியில், சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    • நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார்.
    • ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்து 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. புள்ளிகளில் சம அளவில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றவுடன் வீரர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர். விராட் கோலியும் உற்சாகத்தில் இருந்தார். அவர் முகத்தில் புன்னகையுடன் கண்களில் இருந்து கண்ணீர் சிந்துவதைக் காண முடிந்தது. கோலி மட்டுமல்ல, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் தனது கணவரின் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதைக் கண்டு மிகுந்த உணர்ச்சிவசத்தில் இருந்தார்.

    இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் இந்த மைதானத்தில் 89 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அவர் 3,005 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    விராட் கோலி 33 ரன்னை தொட்டபோது ஒட்டுமொத்த டி20 போட்டியில் இந்திய மண்ணில் 9,000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்திய மண்ணில் விராட் கோலி மொத்தம் 268 டி20 போட்டிகளில் ஆடி 9,014 ரன்கள் எடுத்துள்ளார்.


    • 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.

    இந்நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விஜய் மல்லையா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மல்லையான எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதல் நான்கு இடங்களுக்குள் தகுதிபெற்று ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்.சி.பி. அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏமாற்றமளிக்கும் தொடக்கத்திற்குப் பிறகு சிறந்த உறுதியும் திறமையும் வெற்றிகரமான வேகத்தை உருவாக்கியுள்ளன. கோப்பையை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய பெங்களூரு 218 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சென்னை 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை யாஷ் தயாள் வீசினார். அதில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து தோனியின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். கடைசி ஓவரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது.

    இந்தப் போட்டியில் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது அவர் கூறியதாவது:

    லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. முதலாவதாக பேட் செய்ய நான் ஆடிய ஆடுகளங்களில் மிகவும் கடினமானதாக இந்த ஆடுகளம் இருந்தது. கடந்த 6 போட்டிகளாக எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக இருந்தது.

    இலக்கு சற்று நெருக்கமாக இருந்தபோது தோனி களத்தில் இருந்தார். பலமுறை வெற்றிகரமாக அதை அவர் செய்துள்ளார் என எண்ணினேன். ஈரமான பந்தில் எங்களது பந்துவீச்சை மாற்ற முயற்சித்தோம். ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு வழங்க விரும்புகிறேன். அவர் பந்துவீசிய விதம் நம்ப முடியாததாக இருந்தது. அதற்கு அவர் தகுதியானவர்.

    கடைசி ஓவர் வீசுவதற்கு முன் பந்தில் அதிகம் பேஸ் வேண்டாம் என அவரிடம் சொன்னேன். அவரது திறனை நம்புமாறு சொன்னேன். முதல் பந்தில் யார்க்கர் முயற்சித்தார். அடுத்தடுத்த பந்துகளில் வேகத்தை மட்டுப்படுத்தினார். அது பலன் தந்தது.

    எங்களுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. எங்களது முதல் இலக்கு நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைவது. இதை இந்த நேரத்தில் அனுபவிப்பது அவசியம் என தெரிவித்தார்.

    • இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ராஜஸ்தான் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று இருக்கிறது. தனது முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றிய ருசித்து கம்பீரமாக நடைபோட்ட அந்த அணி கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து சற்று தடுமாறுகிறது.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ரியான் பராக் (531 ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (504) ஜெய்ஸ்வால் (348) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஜோஸ் பட்லர் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக இடம் பெற்ற டாம் கோலர் காட்மோர், துருவ் ஜூரெல், ரோமன் பவெல் ஆகியோர் சோபிக்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தனதாக்கி விட்டது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட அந்த அணியின் முந்தைய ஆட்டம் (குஜராத்துக்கு எதிராக) மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் பில் சால்ட் (435 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோராவும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக சுனில் நரின் (461 ரன், 15 விக்கெட்), ஆந்த்ரே ரஸ்செல் (222 ரன், 15 விக்கெட்) அசத்துகிறார்கள்.

    வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

    கொல்கத்தா அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடர முழு பலத்தையும் வெளிப்படுத்தும். கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்த ராஜஸ்தான் அணி நம்பிக்கையுடன் களம் காண்பதுடன், வெற்றிப் பாதைக்கு திரும்பி 2-வது இடத்தை தக்க வைக்க போராடும். எனேவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 14 வெற்றிகள் கண்டுள்ளன.

    இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது.
    • சொந்த மண்ணில் சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய ஆட்டங்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்ட ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 15 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க குறிவைக்கும். இந்த சீசனில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்துள்ள அந்த அணியின் முந்தைய லீக் ஆட்டம் (குஜராத்துக்கு எதிரான) மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    அதிரடியில் அசத்தும் ஐதராபாத்

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (533 ரன்), அபிஷேக் ஷர்மா (401), ஹென்ரிச் கிளாசென் (339), நிதிஷ் குமார் ரெட்டி என அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். பந்து வீச்சில் நடராஜன், கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார், நாதன் எலிஸ்சும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக பொறுப்பு கேப்டன் சாம் கர்ரன், பேர்ஸ்டோ ஆகியோர் நாடு திரும்பியதும், காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா விலகியதும் அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    தோள்பட்டை காயம் காரணமாக முதல் 5 ஆட்டத்துக்கு பிறகு ஒதுங்கிய ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ஜிதேஷ் ஷர்மா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஐதராபாத் அணி தனது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் தேட பஞ்சாப் தீவிரம் காட்டும். வலுவான ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
    • இந்தத் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் 3-வது முறையாக ஸ்வியாடெக் இத்தாலி ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையைப் பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
    • நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்து 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. புள்ளிகளில் சம அளவில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

    சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வீரர் விராட்கோலி 47 ரன்கள் எடுத்தார். ஐ.பி.எல். தொடரில் இந்த மைதானத்தில் 89 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அவர் 3,005 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    மேலும், விராட் கோலி 33 ரன்னை தொட்டபோது ஒட்டுமொத்த டி20 போட்டியில் இந்திய மண்ணில் 9,000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்திய மண்ணில் விராட் கோலி மொத்தம் 268 டி20 போட்டிகளில் ஆடி 9,014 ரன்கள் எடுத்துள்ளார்.

    நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    • 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது.

    ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டு பிளேசிஸ் 54 ரன்கள் குவித்தார். சென்னை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சாட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ருதுராஜ் கோல்டன் டக் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் 4 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ரச்சின் மற்றும் ரகானே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    அதிரடியாக விளையாடிய ரகானே 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே 7 ரன்னிலும் ரச்சின் 61 ரன்னிலும் மிட்செல் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து டோனி மற்றும் ஜடேஜா ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 12 பந்தில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 6 பந்துக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சரை பறக்க விட்ட டோனி 2-வது பந்தில் அவுட் ஆனார்.

    இறுதியில் சிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • கோலி - டு பிளிசிஸ் சிறப்பான துவக்கம் தந்தனர்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. கோலி - டு பிளிசிஸ் சிறப்பான துவக்கம் தந்தனர். அதிரடியாக விளையாடிய கோலி 47 ரங்களில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் நிதானமாக ஆட்டத்தை துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடிய டு பிளிசிஸ் 54 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார்.

    பின்னர் இணைந்த படிதார் - க்ரீன் ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சித்தடித்தனர். அதிரடியாக விளையாடிய படிதார் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 14 ரென்னும் மேக்ஸ்வெல் 16 ரென்னும் அடித்து ஆட்டமிழந்தனர். கிறீன் 38 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது.

    சென்னை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சாட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

    சென்னை அணிக்கு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி. இப்போட்டியில் 201 ரன்கள் அடித்தால் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் கூட சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ×