என் மலர்
விளையாட்டு
- முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.
- ஒருநாள் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான டி20 அணி முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் தொடருக்கான அணி சிலதினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த ஒருநாள் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இன்று லண்டனில் இருந்த மும்பை வந்தடைந்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இங்கிலாந்து வீரர் பெத்தேல் 142 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிட்னி:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன் குவித்தது. இதற்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் (160 ரன்), கேப்டன் ஸ்டீவ் சுமித் ஆகியோர் சதம் அடித்தனர். நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன் எடுத்து இருந்தது. சுமித் 129 ரன்னிலும், வெப்ஸ்டர் 42 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 138 ரன்கள் முன்னிலை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.
அந்த அணி மேலும் 49 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டை இழந்தது. ஆஸ்திரேலியா 133.5 ஓவரில் 567 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது இங்கிலாந்தின் ஸ்கோரை விட 183 ரன் கூடுதலாகும்.
ஸ்டீவ் சுமித் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 138 ரன்கள் எடுத்தார். 8-வது டெஸ்டில் விளையாடும் வெப்ஸ்டர் 5-வது அரை சதத்தை பதிவு செய்தார். 9-வது வீரராக களம் இறங்கிய அவர் 71 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கார்ஸ், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது.தொடக்க வீரர் கிராவ்லி 1 ரன்னில் ஸ்டார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டான டக்கெட்-ஜேக்கப் பெத்தேல் ஜோடி பொறுப்புடன் விளையாடியது.
டக்கெட் 42 ரன்னிலும், அடுத்து வந்த ஜோரூட் 6 ரன்னிலும் வெளியேறினார்கள். இங்கிலாந்து 117 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது. அடுத்து ஹாரி புரூக்களம் வந்தார். மறுமுனையில் இருந்த ஜேக்கப் பெத்தேல் பொறுப்புடன் ஆடி அரைசதம் எடுத்தார்.
ஹாரி ப்ரூக்- பெத்தேல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அரைசதம் விளாசுவார் என எதிர்பார்த்த ப்ரூக் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து ஸ்மித் 26 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
ஒருமுனை விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பெத்தேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னிலும் கிராஸ் 16 ரன்னிலும் வெளியேறினர்.
இதனையடுத்து 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெத்தேல் 142 ரன்களுடனும் மேத்யூ பாட்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து அணி 119 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. உணவு இடைவேளை வரை விளையாடினால் போட்டியை டிரா செய்ய இங்கிலாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி தோல்வியடையும்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது.
- அதற்கு முன் சுமார் 40 போட்டிகளில் நான் 12-வது வீரராக மட்டுமே இருந்தேன்.
புற்றுநோயை வென்று மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய அனுபவத்தைப் பற்றி யுவராஜ் சிங் உருக்கமாகப் பேசியுள்ளார். புற்றுநோய் காரணமாக 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
அவர் பேசுகையில்,
நீங்கள் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என்று உங்களிடம் சொல்லும் போது, நாம் இறக்கப் போகிறோம் என்ற எண்ணமே முதலில் மனதில் தோன்றும். என்னுடைய நுரையீரலும் இதயத்துக்கும் இடையே இருந்த கட்டி நரம்பு மண்டலத்தை அழுத்தியது. அதனால் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. ஆனால் அதற்கு முன் சுமார் 40 போட்டிகளில் நான் 12-வது வீரராக மட்டுமே இருந்தேன்.
நீண்ட காலமாக காத்திருந்த எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருந்தாலும், அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. மருத்துவமனையில் டாக்டர் என்ஹார்ன், 'நீங்கள் இங்கிருந்து புற்றுநோய் இல்லாத மனிதராக வெளியேறுவீர்கள்' என்று சொன்னது எனக்கு மிகுந்த தைரியத்தை அளித்தது.
அனைத்து சிகிச்சைகளும் முடிந்து மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடலாமா என்று நினைத்த போது, அது எனக்கு இரண்டாவது வாழ்க்கை போலத் தோன்றியது. மீண்டும் விளையாடுவது சாத்தியமில்லை என்று உலகம் சொன்னபோதும், அதை நான் நிரூபித்துக் காட்ட விரும்பினேன்," என்றார்.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரிலும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த இரு தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் யுவராஜ் சிங், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
- இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்து உள்ளது.
- பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் வலியுறுத்தியுள்ளது.
துபாய்:
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டில் எதிரொலித்து வருகிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாட வங்கதேச வீரர் முஸ்டாபிசுர் ரகுமானுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்து உள்ளது. பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே வங்கதேசத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் விளையாட வேண்டும் இல்லையென்றால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. எச்சரித்ததாக கூறப்படுகிறது. காணொலி அழைப்பின் மூலம் இதை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் ஐ.சி.சி.யி டம் இருந்து தங்களுக்கு இறுதி எச்சரிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
20 ஓவர் உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. வங்கதேசம் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணி வெஸ்ட் இண்டீசுடன் பிப்ரவரி 7-ந்தேதியும், இத்தாலியுடன் 9-ந் தேதியும், இங்கிலாந்துடன் 14-ந்தேதியும், நேபாளத்துடன் 17-ந்தேதியும் மோதுகிறது. கொல்கத்தா, மும்பையில் இந்த ஆட்டங்கள் நடைபெறுகிறது.
- நடப்பு ஆஷஸ் தொடரில் இதுவரை 3 சதம் உள்பட 600 ரன்களை டிராவிஸ் ஹெட் குவித்துள்ளார்.
- தொடரின் தொடக்கத்தில் நான் 3 சதங்கள் உள்பட 600 ரன்கள் குவிப்பேன் என்று நினைக்கவில்லை.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 384 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 567 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக 163 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் நடப்பு ஆஷஸ் தொடரில் இதுவரை 3 சதம் உள்பட 600 ரன்களை டிராவிஸ் ஹெட் குவித்துள்ளார். மேலும் ஆஷஸ் தொடர் ஒன்றில் 600 ரன்னுக்கு மேல் எடுத்த 9-வது தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எதிர்பார்த்ததை விட அனேகமாக 400 ரன்கள் அதிகம் எடுத்திருப்பதாக நினைக்கிறேன். மிடில் வரிசையில் பேட் செய்யும் எனக்கு இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காராக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நான் நன்றாக பேட் செய்வதாக உணர்கிறேன். முடிந்த வரை தொடர்ந்து சீராக ரன் எடுக்க முயற்சிக்கிறேன். தொடரின் தொடக்கத்தில் நான் 3 சதங்கள் உள்பட 600 ரன்கள் குவிப்பேன் என்று நினைத்திருக்கமாட்டேன் என்பதில் சந்தேகமில்லை. பெரிய ஸ்கோர் குவித்தது மிகவும் திருப்தி அளிக்கிறது.
என ஹெட் கூறினார்.
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது.
- சபலென்கா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் புதிய சீசனை வெற்றியோடு தொடங்கினார்.
பிரிஸ்பேன்:
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய 'நம்பர் ஒன்' வீராங்கனை பெலாரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை சந்தித்தார்.
தனது அதிரடியான ஷாட்டுகளால் கிறிஸ்டினாவை திணறடித்த சபலென்கா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் புதிய சீசனை வெற்றியோடு தொடங்கினார். இந்த வெற்றிக்கு அவருக்கு 48 நிமிடங்களே தேவைப்பட்டது. தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் கஜகஸ்தானின் எலினா ரைபகினா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் சீனாவின் சூவாய் ஜாங்கை வெளியேற்றினார்.
எகதெரினா அலெக்சாண்ட்ரா, டயானா ஸ்னைடர் (ரஷியா), கரோலின் முச்சோவா (செக்குடியரசு), சோரனா கிர்ஸ்டியா (ருமேனியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
இதன் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் பாப்லோ காரெனோ பஸ்தாவை (ஸ்பெயின்) விரட்டினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் உள்ளூர் நட்சத்திரம் நிக் கிரியாசுக்கு அதிர்ச்சி அளித்தார்.
- அணி நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- போட்டி தொடர்பாக சில மாதங்களாக நீடித்த குழப்பம் ஒரு வழியாக இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியை செப்டம்பர் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் போட்டியை நடத்தும் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்துக்கும், இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கும் இடையே ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் உடன்பாடு ஏற்படாததால் ஐ.எஸ்.எல். போட்டியை நிறுத்தி வைப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து பிரச்சனையை தீர்க்க மத்திய விளையாட்டு அமைச்சகம் தலையிட்டது. அணி நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போட்டி தொடர்பாக சில மாதங்களாக நீடித்த குழப்பம் ஒரு வழியாக இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதன்படி 2025-26-ம் ஆண்டுக்கான ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந்தேதி தொடங்கும் என்றும், இதில் மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் உள்பட 14 கிளப் அணிகளும் பங்கேற்கும் என்றும் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார்.
- இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), டெவன் கான்வே, ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் , மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, இஷ் சோதி.
- ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நீதா அம்பானி மும்பையில் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
- இந்த விழாவிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் மஹீகா சர்மா இருவரும் ஜோடியாக வருகை தந்தனர்.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, தனது காதலி மஹீகா சர்மாவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அறிமுகம் செய்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணிகளின் உலகக்கோப்பை வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நீதா அம்பானி மும்பையில் நேற்று முன்தினம் இரவு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் மஹீகா சர்மா இருவரும் ஜோடியாக வருகை தந்தனர்.

விழாவின் போது, அங்கு வந்திருந்த பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சனிடம், ஹர்திக் பாண்டியா தனது காதலியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர்கள் உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 518 ரன்களை குவித்தது.
- டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 129 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
சிட்னி:
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 97.3 ஓவரில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்தார். ஹாரி புரூக் 84 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி பொறுப்புடன் விளையாடியது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 518 ரன்களை குவித்து 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து 129 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 36 சதங்களுடன் இருந்தனர்.
இந்நிலையில், சிட்னி டெஸ்டில் சதமடித்துள்ள ஸ்டீவன் ஸ்மித் 37 சதங்களுடன் இந்தியாவின் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளினார்.
இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (51), ஜாக் காலிஸ் (45), ரிக்கி பாண்டிங் (41), ஜோ ரூட் (41), குமார் சங்ககரா (38) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென், சிங்கப்பூரி ஜேசன் டே உடன் மோதினார்.
முதல் செட்டை லக்ஷயா சென் 21-16 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை ஜேசன் டே 21-15 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லக்ஷயா சென் 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-17 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஜி ஜியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய பெண்கள் அணி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.
- அடுத்த ஐந்து பத்தாண்டுகளில் தோற்கடிக்க மிகவும் கடினமான அணியாக இருக்கப் போகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவையும், இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலியா அணியில் ஆஷ்லே கார்ட்னெர் இடம் பிடித்திருந்தார். இவர் வருகிற 9-ந்தேதி தொடங்கும் பெண்கள் பிரீமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறது.
இவர் இந்திய பெண்கள் அணியை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்திய அணி குறித்து ஆஷ்லே கார்ட்னெர் கூறியதாவது:-
இந்திய பெண்கள் அணி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த ஐந்து பத்தாண்டுகளில் தோற்கடிக்க மிகவும் கடினமான அணியாக இருக்கப் போகிறது.
இது ஒரு உற்சாகமான வாய்ப்பு. ஒரு ஆஸ்திரேலியராக இது சற்று பயமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்த விளையாட்டு இவ்வளவு விரைவாகவும் வேகமாகவும் வளர்ந்து வருகிறது என்பதை அறிவது பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது.
உலகக் கோப்பைக்குப் பிறகு ஊடகங்களில் நான் கூறியிருக்கிறேன். மேலும் நாங்கள் இன்னும் உலகின் சிறந்த அணி என்று நான் கருதுவதை நான் மறுக்கவில்லை. உலக கோப்பைகள் உயர் நெருக்கடி தருணங்களில் உங்கள் வெற்றியை வெளிப்படுத்துகின்றன.
இவ்வாறு ஆஷ்லே கார்ட்னெர் தெரிவித்தார்.






