என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செக் குடியரசின் ஜிரி லெஹெகா 2வது சுற்ரில் காயம் காரணமாக விலகியதால் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தம்புல்லா:

    பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 19.2 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜெனித் லியாங்கே 40 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் சல்மான் மிர்சா, அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டும், வாசிம் ஜூனியர், ஷதாப் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாகிப்சதா பர்ஹான் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ஆட்ட நாயகன் விருது ஷதாப் கானுக்கு அளிக்கப்பட்டது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, தைவானின் சங் ஷோ யுன் உடன் மோதினார்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-13, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் பேட்டிங் செய்த இந்தியா 393 ரன்கள் குவித்தது.
    • இந்த தொடக்க வீரர்கள் இருவரும் சதம் விளாசினர்.

    இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றியது.

    இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் முகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    இதில் வைபவ் சூர்யவன்ஷி 74 பந்தில் 127 ரன்கள் சேர்த்தும், ஆரோன் ஜார்ஜ் 106 பந்தில் 118 ரன்கள் சேர்த்தும் ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது.

    பின்னர் 394 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் தென்ஆப்பிரிக்கா இளையோர் அணி பேட்டிங் செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 35 ஓவர்கள் மட்டுமே விளையாடி 160 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. பால் ஜேம்ஸ் அதிகபட்சமாக 41 ரன்களும், டேனியல் போஸ்மேன் 40 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் கிஷன் சிங் 3 விக்கெட்டும், முகமது எனான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் கிடைக்காது ஏமாற்றமளித்தது என்று சொல்ல மாட்டேன்.
    • ஒருநாள் அணிக்குள் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

    இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் தேவ்தத் படிக்கல். இடது கை பேட்ஸ்மேனான இவர் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் 5 போட்டிகளில் நான்கில் சதம் விளாசினார். என்றாலும் வருகிற 11-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    இது தொடர்பாக தேவ்தத் படிக்கல் கூறியதாவது:-

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் கிடைக்காது ஏமாற்றமளித்தது என்று சொல்ல மாட்டேன். ஆம், நான் அணித் தேர்வைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன நடக்கப் போகிறது என்று கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதே நேரத்தில், அணியில் ஏராளமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்பதையும், எல்லோரும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்பதையும் நான் புரிந்துகொண்டேன்.

    ஒருநாள் அணிக்குள் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மீண்டும் சொல்கிறேன், ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய முயற்சி செய்து, தொடர்ந்து ரன்களைக் குவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    இவ்வாறு தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார்.

    25 வயதான தேவ்தத் படிக்கல் இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளாலர். டெஸ்ட் போட்டியில் 3 இன்னிங்சில் 90 ரன்களும், டி20யில் 38 ரன்களும் அடித்துள்ளார்.

    • ஜெய்ஸ்வால் 28 டெஸ்ட் போட்டியில் 7 சதங்கள் அடித்துள்ளார்.
    • சராசரி 49.23 ஆகும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 214 ரன்கள் அடித்துள்ளார்.

    இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால். தற்போது இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 24 வயதான இடது கை தொடக்க பேட்டரான இவர், 28 போட்டிகளில் விளையாடி 53 இன்னிங்சில் 7 சதங்கள், 13 அரைசதங்களுடன் 2511 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 49.23 ஆகும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 214 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் அடுத்த சிறந்த பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால்தான் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க்வாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மார்க் வாக் கூறியதாவது:-

    இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலை டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார். அவரது உயர்மட்ட நுட்பம், மன உறுதி மற்றும் நிலைத்தன்மை ஆகியவை பாராட்டத்தக்கது.

    இவ்வாறு மார்க் வாக் தெரிவித்துள்ளார்.

    • 4 அணிகளுக்கான தகுதிச் சுற்றுத் தொடர் நடைபெற இருக்கிறது.
    • இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

    இங்கிலாந்து மற்றும வேல்ஸில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஏற்கனவே 6 அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. 4 அணிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன.

    இதற்கான தகுதிச் சுற்று நேபாளத்தில் வருகிற 14-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இந்த தகுதிச் சுற்று தொடரில் 10 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள் அதே பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் மூன்று இடங்களில் பிடிக்கும் அணி சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 6 பிரிவில் 6 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பைத் தொடருக்கான முதன்மை சுற்றுக்கு இடம் பெறும்.

    "ஏ" பிரிவில் வங்கதேசம், அயர்லாந்து, நமீபியா, பபூவா நியூ கினியா, அமெரிக்கா அணிகள் இடம் பிடித்துள்ளனர. "பி" பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, தாய்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்துள்ளன.

    தகுதிச் சுற்று தொடருக்காக 10 பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. 18-ந்தேதி தகுதிச் சுற்று தொடரின் லீக் ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    • வைபவ் சூர்யவன்ஷி 127 ரன்களுடனும், ஆரோன் ஜார்ஜ் 118 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
    • 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது.

    இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் முகமது பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் இந்திய அணி தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி , ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    இதில் வைபவ் சூர்யவன்ஷி 127 ரன்களுடனும், ஆரோன் ஜார்ஜ் 118 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது.

    • நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
    • ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் ஷ்ரேயாஸ் இடம் பெற்றிருந்தார்.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் போட்டிகள் வதோதரா (ஜன.11), ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்த நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரை தவறவிட்ட ஷ்ரேயாஸ் அய்யர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் முழுஉடற்தகுதி சான்றிதழ் பெறவில்லை எனவும் இந்த தொடரில் விளையாடமாட்டார் எனவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில், பிசிசிஐ மருத்துவக்குழு ஷ்ரேயாஸ் அய்யருக்கு முழுஉடற்தகுதி சான்று அளித்துள்ளது. இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

    • டி20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. மேலும் சில அணிகள் பயிற்சியாளர்களையும் நியமித்து வருகின்றனர்.

    அந்த வகையில் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியாவின் விக்ரம் ரத்தோரை நியமித்துள்ளது.

    முன்னதாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக மலிங்காவை குறுகிய கால அடிப்படையில் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.
    • ஒருநாள் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான டி20 அணி முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் தொடருக்கான அணி சிலதினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

    இந்த ஒருநாள் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இன்று லண்டனில் இருந்த மும்பை வந்தடைந்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இங்கிலாந்து வீரர் பெத்தேல் 142 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன் குவித்தது. இதற்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் (160 ரன்), கேப்டன் ஸ்டீவ் சுமித் ஆகியோர் சதம் அடித்தனர். நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன் எடுத்து இருந்தது. சுமித் 129 ரன்னிலும், வெப்ஸ்டர் 42 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 138 ரன்கள் முன்னிலை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.

    அந்த அணி மேலும் 49 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டை இழந்தது. ஆஸ்திரேலியா 133.5 ஓவரில் 567 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது இங்கிலாந்தின் ஸ்கோரை விட 183 ரன் கூடுதலாகும்.

    ஸ்டீவ் சுமித் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 138 ரன்கள் எடுத்தார். 8-வது டெஸ்டில் விளையாடும் வெப்ஸ்டர் 5-வது அரை சதத்தை பதிவு செய்தார். 9-வது வீரராக களம் இறங்கிய அவர் 71 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கார்ஸ், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது.தொடக்க வீரர் கிராவ்லி 1 ரன்னில் ஸ்டார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டான டக்கெட்-ஜேக்கப் பெத்தேல் ஜோடி பொறுப்புடன் விளையாடியது.

    டக்கெட் 42 ரன்னிலும், அடுத்து வந்த ஜோரூட் 6 ரன்னிலும் வெளியேறினார்கள். இங்கிலாந்து 117 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது. அடுத்து ஹாரி புரூக்களம் வந்தார். மறுமுனையில் இருந்த ஜேக்கப் பெத்தேல் பொறுப்புடன் ஆடி அரைசதம் எடுத்தார்.

    ஹாரி ப்ரூக்- பெத்தேல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அரைசதம் விளாசுவார் என எதிர்பார்த்த ப்ரூக் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து ஸ்மித் 26 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    ஒருமுனை விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பெத்தேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னிலும் கிராஸ் 16 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனையடுத்து 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெத்தேல் 142 ரன்களுடனும் மேத்யூ பாட்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து அணி 119 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. உணவு இடைவேளை வரை விளையாடினால் போட்டியை டிரா செய்ய இங்கிலாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி தோல்வியடையும்.

    ×