என் மலர்
விளையாட்டு
- ஒருநாள் போட்டி தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.
- டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.
புதுடெல்லி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
ஒருநாள் போட்டி தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து இந்தியாவின் அதிரடி வீரரான திலக் வர்மா விலகி உள்ளார்.
திலக் வர்மாவுக்கு ராஜ்கோட்டில் வயிற்றுப் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று காலை மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது சீராகவும், நல்ல முன்னேற்றத்துடனும் உள்ளார்.
மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்பது பயிற்சி மற்றும் திறன் நிலைகளுக்குத் திரும்பும் போது அவரது முன்னேற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் நமப்ர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரொமேனியாவின் சொரானா சிர்ஸ்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பவுலா படோசாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் டொயோகோ மியாசகி உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-8, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பி.வி.சிந்து ஜப்பானின் யமாகுச்சி உடன் மோத உள்ளார்.
- ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின
- ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 6 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற வரலாறு படைத்தார் ருதுராஜ்.
ருதுராஜ் மொத்தமாக 112 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அடுத்த இடங்களில் 108 சிக்ஸர்களுடன் மணிஷ் பாண்டே, விஷ்ணு வினோத் ஆகியோர் உள்ளனர்.
- ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருதை வென்றார்.
- ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 567 ரன் குவித்தது. 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 88. 2 ஓவரில் 342 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 160 ரன்கள் இலக்காக இருந்தது.
168 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. ஆஸ்திரேலியா 31.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடக்கை பந்துவீச்சாளர் என்ற ரங்கனா ஹெராத்தின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் சமன் செய்துள்ளார்.
93 டெஸ்ட் போட்டிகளில் ஹெராத் 433 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில், ஸ்டார்க் 106 டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின
- ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அங்கித் பாவ்னே சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் (15) சமன் செய்தார்
ருதுராஜ், அங்கித் ஆகியோர் 15 சதங்கள் அடித்துள்ள நிலையில், அதற்கு அடுத்த இடங்களில் உள்ள படிக்கல், மயங்க் அகர்வால் ஆகியோர் 13 சதங்கள் அடித்துள்ளனர்.
- ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
- ஆஷஸ் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் வருகை தந்துள்ளனர்.
சிட்னி:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 567 ரன் குவித்தது. 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 88. 2 ஓவரில் 342 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 160 ரன்கள் இலக்காக இருந்தது.
168 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. ஆஸ்திரேலியா 31.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே முதல் 3 டெஸ்டில் வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்தது. 4-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 879 பேர் வருகை தந்துள்ள நிலையில் அந்த வருகை சாதனையை இந்த ஆண்டு ஆஷஸ் தொடர் முறியடித்துள்ளது.
- ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
- இந்த தொடருடன் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஓய்வு பெற்றார்.
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த தொடரில் அவர் ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். அவரது கடைசி இன்னிங்சிலும் ஏமாற்றத்தை அளித்தார். அவர் இன்று 6 ரன்னில் அவுட் ஆனார்.
39 வயதான கவாஜா 88 டெஸ்டில் 6229 ரன் எடுத்துள்ளார். சராசரி 42.95 ஆகும். 16 சதமும், 28 அரைசதமும் எடுத்துள்ளார். ஆஷஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெற்ற 7-வது ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஆவார். டான் பிராட்மேன், டேமியனை மார்ட்டின், ஜஸ்டின் லாங்கர், வார்னே, மெக்ராத், மைக்கேல் கிளார்க் ஆகியோரும் ஆஷஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெற்றனர்.
- இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
சிட்னி:
ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹெட் தொடர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார். அவருடன் ஸ்மித் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை இருவரும் நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 567 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் 183 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். மற்ற வீரர்களில் டக்கெட் , ஹாரி புரூக் தலா 42 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 4வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.119 ரன்கள் முன்னிலை பெற்றது.
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. சிறப்பாக விளையாடி வந்த பெத்தேல் 154 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
168 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. இந்த இலக்கை எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டை இழந்தது.
தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 29 ரன்னிலும், வெதரால்டு 34 ரன்னிலும் ஜோஷ் டங் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள்.
அடுத்து லபுஷேன் 37 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவ் சுமித் 12 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 121 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரி-கேமரூன் கிரீன் ஜோடி அணிைய வெற்றிக்கு அழைத்து சென்றது. ஆஸ்திரேலியா 31.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட்டும் தொடர் நாயகனாக ஸ்டார்க்கும் தேர்வு பெற்றனர். அத்துடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
- பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மும்பையில் நாளை தொடங்குகிறது.
- இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
புதுடெல்லி:
பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கி 17-ம் தேதி வரை நவி மும்பையிலும், ஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை வதோதராவிலும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான ஜுலான் கோஸ்வாமி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஹர்மன்பிரீத் கவுர், இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கும், டபிள்யூ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் செய்துள்ள சாதனைகள் மகத்தானது.
முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார்.
அவரது தலைமையில் மும்பை அணி 2 முறை மகுடம் சூடியுள்ளது.
ஒரு கேப்டனாக அவரது சாதனையை யாராலும் நெருங்க முடியாது. மேலும் பல பட்டங்களை அவர் வென்று தருவார்.
ஹர்மன்பிரீத் கவுரால் இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாட முடியுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தைவானின் லீ ஜே ஹூய்-பி.ஹெச்.யாங் உடன் மோதியது.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-13, 21-15 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
- எஸ்.ஏ. டி20 லீக் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
- பாப் டூ பிளசிஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார்.
கேப் டவுன்:
எஸ்.ஏ.20 லீக் என்றழைப்படும் தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த லீக் போட்டியில் எம்.ஐ.கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக இந்தப் போட்டி 12 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற கேப்டவுன் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டூ பிளசிஸ் 44 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து ஆடிய எம்ஐ கேப்டவுன் அணி முதலில் தடுமாறியது. இருப்பினும் அந்த அணி 11.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் 44 ரன்களை சேர்த்ததன் மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பாப் டூ பிளசிஸ் டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12,000 ரன்களைக் கடந்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.






