என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய நெல்லை அணி 177 ரன்களை சேர்த்தது.
நெல்லை:
8-வது டி.என்.பி. எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது.
முதல் 2 சுற்று ஆட்டம் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் சூப்பர் கில்லீஸ் 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.
இதன் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இன்றைய ஆட்டத்தில் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 51 பந்தில் 84 ரன்கள் குவித்தார். ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.
திருச்சி அணி சார்பில் சரவணகுமார் 4 விக்கெட்டும், ஆண்டனி தாஸ், அதிசயராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.
- டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
- கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தது திருப்புமுனையாக அமைந்தது.
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தது திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில், டேவிட் மில்லர் கேட்சை பிடித்ததும் எல்லோரும் சூர்யகுமாரிடம் லைஐ டச் செய்தீர்களா என கேட்டோம் என்றார் அக்சர் படேல்.

இதுதொடர்பாக அக்சர் படேல் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
நான் மிட் விக்கெட்டில் இருந்தேன். மில்லர் பந்தை அடிக்கும்போது இது சிக்சருக்குப் போய்விட்டது என நினைத்தேன்.
ஆனால் சூர்யா கேட்சை பிடித்ததும், எல்லோரும் அவரிடம் கேட்டார்கள் கயிற்றைத் தொட்டீர்களா? என. சூர்யா பாய்க்கு கூட உறுதியாக தெரியவில்லை. முதலில் ஆம், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனக்கூறிய அவர், சில நொடிகளில் எனக்கு உறுதியாக தெரியவில்லை என்றார்.
ரீப்ளேயைப் பார்த்தபோது 99 சதவீதம் பேர் உலகக் கோப்பையை வென்றோம் என நினைத்தோம்.
அது நெருக்கடியான நிலையில் பிடிக்கப்பட்ட கேட்ச். அப்போது அவர் தனது சமநிலையை தக்கவைத்த விதம் ஆச்சரியமாக இருந்தது என தெரிவித்தார்.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் இறுதிப்போட்டியில் நுழைந்தார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், குரோசியாவின் டுஜே அஜ்டுகோவிச் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை டுஜே 6-4 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2-வது செட்டை நடால் 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை நடால் 6-4 என கைப்பற்றினார்.
இறுதியில் நடால் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்தது.
- இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்து 3-வது சுற்றுக்கு வரத் தவறியது. கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த மனோலோ மார்கிசை நியமனம் செய்தது அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு.
மனோலோ மார்கிஸ் தற்போது எப்.சி கோவா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 457 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் கவெம் ஹாட்ஜ் 120 ரன்கள் அடித்தார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஒல்லி போப் 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட், ஜெய்டன் சீலஸ், சின்க்ளெர், ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட், மிகைல் லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
பிராத்வைட் 48, மிகைல் லூயிஸ் 21, கிர்க் மெக்கென்சி 11 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு கவெம் ஹாட்ஜ் மற்றும் அலிக் அத்தனாஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். இருவரும் 175 ரன்கள் சேர்த்த நிலையில் அலிக் அத்தானாஸ் 82 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவெம் ஹாட்ஜ் சதமடித்து அசத்தினார். அவர் 120 ரன்னில் அவுட் ஆனார்.

இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 84 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. ஜேசன் ஹோல்டர் 27 ரன்னும், சின்க்ளேர் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் ஜோஷ்வா டா சில்வா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
10-வது விக்கெட்டுக்கு ஷமார் ஜோசப், ஜோஷ்வா டா சில்வா ஜோடி 71 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜோஷ்வா டா சில்வா 82 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய தாய்லாந்து 133 ரன் எடுத்தது.
- அடுத்து ஆடிய மலேசியா 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தம்புல்லா:
9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் பி பிரிவு ஆட்டத்தில் தாய்லாந்து, மலேசியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தாய்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள்எடுத்துள்ளது. அதிகபட்சமாக நன்னபட் கொஞ்சரோஎங்கை 40 ரன்கள் அடித்தார்.
மலேசியா சார்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மலேசியா களமிறங்கியது. வான் ஜூலியா அரை சதம் கடந்து 52 ரன்கள் எடுத்தார். வின்பயர்ட் துரைசிங்கம் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
இறுதியில், மலேசியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 111 ரன்கள்மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தாய்லாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
- ஒடிசா விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையால் தொடங்கப்பட்டது பிஜு பட்நாயக் விருது.
- முன்னாள் முதல் மந்திரி பிஜு பட்நாயக் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
புவனேஸ்வர்:
ஒடிசாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையால் தொடங்கப்பட்டது பிஜு பட்நாயக் துணிச்சலான விருது. இது ஒடிசா மக்கள் நிகழ்த்திய அற்புதமான துணிச்சலான செயல்களை அங்கீகரிக்கிறது.
ஒடிசாவின் முன்னாள் முதல் மந்திரி மறைந்த பிஜு பட்நாயக்கின் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அவர் தனது வாழ்நாளில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் பல துணிச்சலான செயல்களை வெளிப்படுத்தினார்.
பிஜு பட்நாயக் விருது ஆண்டுதோறும் மிகச்சிறந்த துணிச்சலான செயலுக்காக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் பிஜு பட்நாயக் விருது இனி ஒடிசா ராஜ்ய கிரிடா சம்மான் விருது என்ற பெயரில் வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுக்கான பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுக்காக ரூ.3 லட்சம், சிறந்த வீரருக்கான விருதுக்கு ரூ. 2லட்சம் மற்றும் சிறந்த பயிற்சியாளருக்கான விருதுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
- டெல்லி அணிக்கு அதிக ரன்கள் அடித்தவராக ரிஷப் பண்ட் உள்ளார்.
- சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் எனத் தகவல்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும், அதிக ரன்கள் அடித்தவராகவும் ரிஷப் பண்ட் உள்ளார்.
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட்-ஐ விடுவிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டைரக்டர் சவுரவ் கங்குலி ரிஷப் பண்ட்-க்கு ஆதரவாக உள்ளார். இருந்த போதிலும் டெல்லி அணி இதற்கு தயாராகி வருகிறது.
ஒருவேளை டெல்லி அணி ரிஷப் பண்ட்-ஐ விடுவித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை மெகா ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே அணியில் இருந்து எம்.எஸ். டோனி ஓய்வு பெற இருக்கிறார். இதனால் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை சிஎஸ்கே அணி அடுத்ததாக தயார் செய்ய வேண்டும். இதனால் ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.
- நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
2007 ஆம் ஆண்டுக்கு பின் 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பையை தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 16, 18-வது ஓவரில் வெறும் 4, 2 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார்.
அவ்வகையில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.
அண்மையில் நடந்த முடிந்த ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கிரிக்கெட் வீரர் பும்ரா தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மேட் டாசன் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளாயாட மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கினார்.
- இந்த வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் டாசனின் விரல் அகற்றப்படும்
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30 வயதான ஹாக்கி வீரர் மாட் டாசன் [Matt Dawson] தனது விரலை துண்டித்துக்கொள்ள மடுவெடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான அணியை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. 117 பேர் கொண்ட அணியை இந்தியாவும் அறிவித்துள்ளது.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மேட் டாசன் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளாயாட மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கினார். கடைசியாக டோக்கியோ ஒலிம்பிக்சில் ஆஸ்திரேலேயே ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் மாட் டாசன். இந்நிலையில் விளையாட்டின்போது மேட் டாசனின் வலது கையில் உள்ள மோதிர விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் டாசன் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் எழுந்தது.

ஒன்று நீங்கள் உங்கள் விரல் குணமடையும் வரை விளையாடக்கூடாது அல்லது உங்கள் விரலை நீக்கியாக வேண்டும் என்று டாசனின் மருத்துவர் தெரிவிக்கவே, அவர் தனது விரலை அகற்றும் முடிவை எடுத்துள்ளார்.
இந்த முடிவு குறித்து மாட் டாசன் பேசுகையில், இந்த வாய்ப்பு பாரிஸில் விளையாடுவதற்கானது மட்டுமல்ல, வாழ்கைக்கானது. பலர் தங்களது வாழ்க்கையில் எவ்வளவோ இழக்கின்றனர். நான் இழக்கப்போவது வெறும் விரலை மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூலை 27 ஆம் தேதி அர்ஜென்டினா ஹாக்கி அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
- திருச்சி வெற்றி பெற்றால் 6 புள்ளியை பெறும்.
நெல்லை:
8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. 11-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது. 9 ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் கடந்த 13-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 8 போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.
இதுவரை 17 ஆட்டங்கள் முடிந்துள்ளன. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 8 புள்ளியுடனும், 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 புள்ளியுடனும், நெல்லை ராயல் கிங்ஸ் 5 புள்ளியுடனும் முதல் 3 இடங்களில் உள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் தலா 4 புள்ளிகளுடனும், மதுரை பாந்தர்ஸ் 3 புள்ளியுடனும், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 2 புள்ளிகளுடனும் உள்ளன.
டி.என்.பி.எல். போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் இன்று தொடங்குகிறது. வருகிற 24-ந் தேதி வரை அங்கு 6 போட்டிகள் நடத்தப்படுகிறது.
நெல்லை இந்திய சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை-திருச்சி அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை அணி மோதிய ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அந்த அணி வெற்றி பெற்றால் 7 புள்ளியுடன் முன்னேறும். திருச்சி வெற்றி பெற்றால் 6 புள்ளியை பெறும்.
- இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை மார்க் வுட் படைத்துள்ளார்.
- முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
இப்போட்டியில், பந்துவீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் அதிவேக ஓவரை வீசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய மிகைல் லூயிஸுக்கு தனது முதல் ஓவரை வீசினார் மார்க் வுட். முதல் பந்தை 151.1 கிமீ வேகத்தில் அவர் வீசினார். 2 ஆவது பந்தை 154. 65 கிமீ வேகத்திலும் மூன்றாவது பந்தை 152.88 கிமீ வேகத்திலும் 4 ஆவது பந்தை 148.06 கிமீ வேகத்திலும் 5 ஆவது பந்தை 155.30 கிமீ வேகத்திலும் கடைசி பந்தை 153.20 கிமீ வேகத்திலும் வீசினார்.
இதன் மூலம் இங்கிலாந்தில் அதிவேகமாக ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
மார்க் வுட் தனது 2 ஆவது ஓவரை முதல் ஓவரை விடவும் அதிவேகத்தில் வீசினார். அந்த ஓவரில் 152, 149.66, 152, 154.49, 156.26, 151.27 கிமீ வேகத்தில் அவர் வீசினார். இதன் மூலம் முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார்.






