சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த பும்ரா

இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த பும்ரா
Published on

2007 ஆம் ஆண்டுக்கு பின் 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

இந்த டி20 உலகக்கோப்பையை தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 16, 18-வது ஓவரில் வெறும் 4, 2 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார்.

அவ்வகையில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.

அண்மையில் நடந்த முடிந்த ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கிரிக்கெட் வீரர் பும்ரா தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com