என் மலர்
நீங்கள் தேடியது "Biju Patnaik"
- தீயை அணைத்து, சிலையை பாலித்தீன் கவரால் மூடி வைத்துள்ளனர்.
- சமீபத்தில் மகாங்கா பகுதியில் இருந்த பிஜு பட்நாயக் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது
ஒடிசாவில் முன்னாள் முதல்வர் பிஜு பட்னாயாக் உடைய சிலைக்கு தீவைக்கப்பட்டதால் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மறைந்த பிஜு பட்டநாயக், நவீன் பட்நாயக்கின் தந்தை ஆவார். 1961–1963 மற்றும் 1990–1995 காலகட்டங்களில் ஒடிசா முதல்வராக இருந்துள்ளார்.
நாளை (ஏப்ரல் 17) ஆம் தேதி பிஜு பட்நாயக் நினைவு தினம் வர உள்ள நிலையில் ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டத்தில் பாட்நகராவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மர்ம நபர்களால் நேற்று தீ வைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படை மற்றும் போலீசார் தீயை அணைத்து, சிலையை பாலித்தீன் கவரால் மூடி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள தொண்டர்களிடேயே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பிஜு ஜனதா தளம், ஆளும் பாஜக அரசை விமர்சித்து இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளது.
அக்கட்சியின் தொண்டர்கள், புவனேஷ்வர் விமானம் நிலையில் அருகே இன்று தர்ணாவில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் மகாங்கா பகுதியில் இருந்த பிஜு பட்நாயக் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- ஒடிசா விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையால் தொடங்கப்பட்டது பிஜு பட்நாயக் விருது.
- முன்னாள் முதல் மந்திரி பிஜு பட்நாயக் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
புவனேஸ்வர்:
ஒடிசாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையால் தொடங்கப்பட்டது பிஜு பட்நாயக் துணிச்சலான விருது. இது ஒடிசா மக்கள் நிகழ்த்திய அற்புதமான துணிச்சலான செயல்களை அங்கீகரிக்கிறது.
ஒடிசாவின் முன்னாள் முதல் மந்திரி மறைந்த பிஜு பட்நாயக்கின் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அவர் தனது வாழ்நாளில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் பல துணிச்சலான செயல்களை வெளிப்படுத்தினார்.
பிஜு பட்நாயக் விருது ஆண்டுதோறும் மிகச்சிறந்த துணிச்சலான செயலுக்காக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் பிஜு பட்நாயக் விருது இனி ஒடிசா ராஜ்ய கிரிடா சம்மான் விருது என்ற பெயரில் வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுக்கான பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுக்காக ரூ.3 லட்சம், சிறந்த வீரருக்கான விருதுக்கு ரூ. 2லட்சம் மற்றும் சிறந்த பயிற்சியாளருக்கான விருதுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.






