என் மலர்
விளையாட்டு
- நடப்பு தொடரில் இருந்து ஷ்ரேயங்கா பாட்டீல் காயம் காரணமாக விலகினார்.
- அவருக்கு பதிலாக தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார்.
கொழும்பு:
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஷ்ரேயங்கா பாட்டீல் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடது கை விரலில் ஏற்பட்ட காயத்தால் அவர் எஞ்சிய ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
- அதன்படி முதலில் ஆடிய இந்தியா 201 ரன்களைக் குவித்தது.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா, யு.ஏ.இ அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
மந்தனா 13 ரன்னிலும், ஹேமலதா 2 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். ஷபாலி வர்மா 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்மன்பிரித் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியாக ஆடியது. ஹர்மன்பிரித் அரை சதம் கடந்தார்.
இந்த ஜோடி 75 ரன் சேர்த்த நிலையில் கவுர் 66 ரன்னில் வெளியேறினார்.
கடைசி ஓவரில் ரிச்சா கோஷ் 5 பவுண்டரிகள் விளாசியதுடன் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்குகிறது.
- ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ஒருமுறை நான் டோனியிடம் கேட்டேன்.
- இந்த விளையாட்டு மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அப்போது ஓய்வு பெறுவதுதான் சரியான முடிவாக இருக்கும்.
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்து வந்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் அவர் இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் முகமது ஷமி, யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவ்வகையில் எம்.எஸ்.டோனியின் ஓய்வு முடிவு குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். "ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ஒருமுறை நான் டோனியிடம் கேட்டேன். அதற்கு அவர், இந்த விளையாட்டு உனக்கு சோர்வை தந்தால் ஓய்வு பெறலாம் அல்லது அணியிலிருந்து நீ ஓரம் கட்டப்பட்டால் ஓய்வு பெறலாம். ஆனால் இறுதியாக உனக்கு இந்த விளையாட்டு மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அப்போது ஓய்வு பெறுவதுதான் சரியான முடிவாக இருக்கும்" என்று டோனி கூறியதாக ஷமி தெரிவித்தார்.
2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி 2020 ஆம் ஆண்டில் சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் டோனி ஓய்வு அறிவித்தது அந்த சமயத்தில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
- அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன்மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சிகாகோ பயர் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர் மியாமி க்ளப் வெற்றி பெற்றது.
இப்போட்டி நடைபெறுவதற்கு முன்பு கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற ஜாம்பவான் மெஸ்ஸியை இன்டர் மியாமி க்ளப் கௌரவித்தது.
ஆண்டு வாரியாக வென்ற 45 கோப்பைகளின் படங்களை கைகளில் ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றேன்.
- கடந்த முறையை விட அதிகமாக உள்ளது. நிச்சயம் இந்த தடவை நெருக்கடி அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி தடகள வீரர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறியும் வீரரான அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு அவர் இந்த சாதனையை படைத்தார். மேலும் அவர் உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா மீது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தன் மீது அழுத்தம் அதிகம் இருப்பதாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த முறை என் மீது அழுத்தம் அதிகம் உள்ளது. ஏனென்றால் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை நான் தக்கவைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். இதற்கு முன்பு இதே மாதிரியான அனுபவத்தை கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் எதிர்கொண்டேன்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றேன். அதனால் நான் ஆசிய விளையாட்டில் மீண்டும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டு இருந்தது.
ஆனாலும் அதோடு ஒலிம்பிக்கை ஒப்பிட முடியாது. என் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை மறுக்க இயலாது. கடந்த முறையை விட அதிகமாக உள்ளது. நிச்சயம் இந்த தடவை நெருக்கடி அதிகரித்துள்ளது.
இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
- 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷமார் ஜோசப் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.
- கஸ் அட்கின்ஷன் வீசிய 4வது பந்தை முரட்டுத்தனமாக அடித்து பெரிய சிக்சரை ஷமார் ஜோசப் பறக்க விட்டார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஒல்லி போப் 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட், ஜெய்டன் சீலஸ், சின்க்ளெர், ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்க்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கவெம் ஹாட்ஜ் 120 ரன்களும் அலிக் அத்தானாஸ் மற்றும் ஜோஷ்வா டா சில்வா 82 ரன்களும் அடித்தனர்.
குறிப்பாக 10-வது விக்கெட்டுக்கு ஷமார் ஜோசப், ஜோஷ்வா டா சில்வா ஜோடி 71 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷமார் ஜோசப் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.
107வது ஓவரில் கஸ் அட்கின்ஷன் வீசிய 4வது பந்தை முரட்டுத்தனமாக அடித்து பெரிய சிக்சரை ஷமார் ஜோசப் பறக்க விட்டார். அது ரசிகர்கள் அமரும் மைதானத்தின் மேற்கூரையில் இருந்த சில ஓடுகளை அடித்து நொறுக்கியது. அந்த துண்டுகள் கீழே அமர்ந்திருந்த ரசிகர்கள் மீதும் விழுந்தது. நல்லவேளையாக ரசிகர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
- ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடரில் ருதுராஜ் இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜிம்பாப்வே தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் ஒரு அரை சதம் மற்றும் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாததை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்து பேசியிருந்தார்.
அதேபோல் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், "ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காகவும் உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 7 இன்னிங்ஸில் அவர் 71.2 என்ற அபாரமான சராசரியில் 158.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்தார். அப்படி கடந்த சில வருடங்களாகவே அவர் தொடர்ந்து ரன்கள் மேல் ரன்கள் அடித்துள்ளார். ஆனாலும் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் தெரியாததால் ருதுராஜ்க்கு நியாயம் வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கேட்கிறேன். அவரை எடுக்காதது மிகப்பெரிய தவறு. அது எனக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
மறுபுறம் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விராட்கோலி , ரோகித்துடன் நானும் விளையாடியுள்ளேன். அவர்களிடம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா திறமை இருந்தது. ஆனால் அவர்களைப் போல கில்லையும் சிலர் தத்தெடுத்து வளர்க்க நினைக்கின்றனர்.
ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ருதுராஜ், ரிங்கு போன்ற வீரர்கள் கழற்றி விடுவதை பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அதாவது நீங்கள் ஏதாவது நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். வித்தியாசமாக உடலில் டாட்டூ குத்திக்கொள்ள வேண்டும். சொந்தப் புகழை பெருமை பேசுவதற்காக பிஆர் ஏஜென்சியை வைத்துக் கொள்ள வேண்டும்.
கிரிக்கெட்டில் நன்றாக விளையாடத் தெரிவதுடன் இந்தியாவுக்காக விளையாட இப்போதெல்லாம் இந்த 3 விஷயங்களை வைத்திருப்பது அவசியமாகிறது. அப்போது தான் உங்களால் பெரியாளாக வர முடியும் போல" என்று காட்டமாக பேசியுள்ளார்.
- உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.
- 206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, ஒலிம்பிக்ஸ் விளையாட்டு. அங்கு ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டது. இதில் யுத்தத்துக்கு தயாராவதற்கு உதவக்கூடிய ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு அனுமதி இல்லை.
2-வது ஒலிம்பிக்ஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1900-ம் ஆண்டில் நடந்தது. 24 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர், வீராங்கனைகள் 19 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.இந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும்.
ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 162 படகுகள் மூலம் வீரர்கள் மற்றும் கலைஞர்களை செய்ன் நதிக்கு அழைத்து வந்து, சுமார் 6 கி.மீ தூரப்பாதையில் 4 மணி நேரம் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
- திருச்சி அணி 3 வெற்றி, 2 தோல்வியுன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாசை நாளை எதிர் கொள்கிறது.
நெல்லை:
8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. தற்போது நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் 3-வது கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது
இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி முதல் ஆட்டத்தில் கோவை கிங்சிடம் 13 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. 3-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 15 ரன்னிலும், 4-வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்சை 9 விக்கெட் வித்தியாசத்திலும், 5-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சை 23 ரன்னிலும் வீழ்த்தியது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாசை நாளை (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு எதிர்கொள்கிறது.
பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சியை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கில் ஜெகதீசன் (159 ரன்), கேப்டன் பாபா அபராஜித் (143 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (122 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் அபிஷேக் தன்வர், பெரியசாமி (தலா 7 விக்கெட்), டேரில் பெரா ரியோ, ரகில்ஷா (தலா 5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
திருச்சி அணி 3 வெற்றி, 2 தோல்வியுன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மதுரை, சேலம், நெல்லை ஆகியவற்றை வென்றது. திண்டுக்கல், கோவையிடம் தோற்றது. திருச்சி அணியும் 4-வது வெற்றி வேட்கையில் உள்ளது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் திண்டுக்கல்-கோவை (மாலை 3.15), திருப்பூர்-சேலம் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன.
- வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- இலங்கையின் பிரபோதானி, பிரியதர்ஷினி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
வங்காளதேசம் அணியின் துவக்க வீராங்கனை திலாரா அக்தர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீராங்கனை இஷ்மா, இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருபாயா ஹைடர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா பொறுமையாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவரும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டமே சேர்த்தது.

இலங்கை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பிரபோதானி மற்றும் பிரியதர்ஷினி தலா 2 விக்கெட்டுகளையும் சுகந்திகா குமாரி, கவிஷா தில்ஹாரி மற்றும் சமாரி அட்டப்பட்டு தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
112 எனும் எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீராங்கனையான விஷ்மி குனரத்ன 51 ரன்களை குவித்தார்.
இவருடன் களமிறங்கிய கேப்டன் சமாரி அட்டப்பட்டு 12 ரன்களையும் அடுத்து வந்த கவிஷா தில்ஹாரி 12 ரன்களையும் சேர்த்தனர். ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ரன்களை குவிக்க, இலங்கை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்களை குவித்தது. இதன் மூலம் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு, மாற்றுத்திறனாளி சிறுமியை இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு ஒரு மொபைல்போனை அவர் பரிசாக வழங்கினார்.
இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.
- நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.
- 4 விக்கெட்டுகள் வீழ்த்திய திருச்சி அணி வீரர் சரவண குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
நெல்லை:
8-வது டி.என்.பி. எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது.
இதன் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் தொடங்கியது.
நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 51 பந்தில் 84 ரன்கள் குவித்தார். ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.
திருச்சி அணி சார்பில் சரவணகுமார் 4 விக்கெட்டும், ஆண்டனி தாஸ், அதிசயராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வசீம் அகமது 27 ரன்னிலும் ராஜ்குமார் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நிதானமாக விளையாடிய ஷியாம் சுந்தர் 31 ரன்னிலும் ஜபார் ஜமால் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரவி ராஜ்குமார் 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசி திருச்சி அணியை வெற்றி பெற வைத்தார்.
சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய திருச்சி அணி வீரர் சரவண குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.






