என் மலர்
விளையாட்டு
- ஹர்திக் பாண்ட்யா விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.
- காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். We want someone who can play a lot without injury.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
டி20-யில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா முழுமையான பிட்னஸ் கொண்டிருக்கவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதனாலயே சூர்யகுமாரை புதிய கேப்டனாக நியமித்ததாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
ஹர்திக் பாண்ட்யா இப்போதும் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். இருப்பினும் பிட்னஸ் என்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அது அவரை தேர்வு செய்ய பயிற்சியாளர் அல்லது தேர்வுக்குழுவுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அவரது விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.
ஏனெனில் நாங்கள் அடிக்கடி காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். அந்த வகையில் சூர்யகுமார் கேப்டனாக செயல்படுவதற்கு தேவையான தகுதிகளைக் கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.
அதே சமயம் ஹர்திக் பாண்ட்யாவை நாங்கள் சிறப்பாக கையாள்வோம் என்று கருதுகிறோம். டி20 உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். கேப்டன்ஷிப் பற்றி ஹர்திக் பாண்ட்யாவிடமும் நாங்கள் பேசியுள்ளோம்.
சூர்யகுமார் யாதவ் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர். நீங்கள் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடக்கூடிய ஒரு கேப்டனை விரும்புவது முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.
இவ்வாறு அஜித் அகார்கர் கூறினார்.
- இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது.
- இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் செயல்பட உள்ளார்.
இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது. இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் செயல்பட உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று அவர் வழிநடத்த இருக்கும் முதல் தொடரை ஒட்டி, கவுதம் காம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.
தலைமை பயிற்சியாளர் காம்பீர், மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்தித்தனர். பயிற்சியாளராக பொறுப்பேற்றபின் காம்பீர் பங்கேற்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவே.
"நான் மிகவும் வெற்றிபெற்ற அணியை வழி நடத்துகிறேன். டி20 உலக கோப்பை சாம்பியன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. ஆனால் இன்னும் பல வெற்றிகளை நாம் காண வேண்டும்."
"விளையாட்டு வீரர்களுக்கு சுதந்திரம் என்பது மிகவும் முக்கியம் என்பதை நான் நம்புகிறேன். எனக்கும், வீரர்ளுக்கும் நல்ல நம்பிக்கையை வளர்த்துக் கொள்வேன். அவர்களுக்கு பின்னால் உறுதுணையாக எப்போதும் இருப்பேன்."
"ரோகித் மற்றும் விராட் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் முழு திறமையை காண்பித்து உள்ளனர். டி20 ஆகட்டும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியாகட்டும், அவர்களுக்குள் இன்னும் நிறய கிரிக்கெட் மீதம் இருக்கிறது."
"அவர்கள் நினைத்தால் 2027 உலக கோப்பையிலும் விளையாடும் சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் விளையாடுவதும் விளையாடாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும். அவர்கள் நிச்சயம் உலக தரமிக்க வீரர்கள். எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர்கள் எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் விளையாடலாம்," என்று கூறியுள்ளார்.
- 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய நேபாளம் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே அடித்தது.
- அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த குல் பெரோசாக் இலக்கை நெருங்கிய தருவாயில் ஆட்டமிழந்தார்.
9-வது மகளிர் ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நேபாளம், பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளித்து அதிரடியாக விளையாட முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய நேபாளம் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக கபிதா ஜோஷி 31 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாடியா இக்பால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குல் பெரோசாக் மற்றும் முனீபா அலி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த குல் பெரோசாக் இலக்கை நெருங்கிய தருவாயில் ஆட்டமிழந்தார். வெறும் 11.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்த பாகிஸ்தான் 110 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. முனீபா அலி 46 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
நடப்பு தொடரில் பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முன்னதாக நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது.
- சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியலில் 2 இந்தியர்கள் இடம்பெற்றனர்.
- இதில் லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் பெயர்கள் இடம்பிடித்தனர்.
புதுடெல்லி:
சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியல் இடம் பெறும்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 2024-ம் ஆண்டின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன.
இதன்மூலம் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பட்டியலில் இடம்பெற்ற ஆசிய டென்னிஸ் வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
விஜய் அமிர்தராஜ் 1970 முதல் 1993-ல் ஓய்வுபெறும் வரை விளையாடினார். 15 ஏடிபி ஒற்றையர் பட்டங்களையும், 399 போட்டிகளையும் வென்று உலகில் 18-வது இடத்தைப் பிடித்தார். மேலும் 1974 மற்றும் 1987 இல் டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றார்.
லியாண்டர் பயஸ் டென்னிஸ் அரங்கில் ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
- இதில் இத்தாலி வீரர் பெரேட்டேனி சாம்பியன் பட்டம் வென்றார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 6வது தரவரிசையில் உள்ள இத்தாலி வீரர் மேட்டியோ பெரேட்டேனி, பிரான்சின் குயின்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.
இதில் பெரேட்டேனி 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வென்று, சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
- பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.
- 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும்.
ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ சார்பில் ரூ. 8.5 கோடி வழங்கவுள்ளதாக செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது:-
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம் விளையாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ ஆதரவளிக்கும் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்காக, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி வழங்குகிறோம் என்பதை பிசிசிஐ அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
நம் முழு குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள். இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்! ஜெய் ஹிந்த்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் இறுதிப்போட்டியில் தோற்றார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று நடைபெற்றது.
இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், போர்ச்சுகல் வீரர் நியுனோ போர்ஜஸ் உடன் மோதினார்.
இதில் போர்ஜஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 425 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஹாரி புரூக், ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஒல்லி போப் 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட், ஜெய்டன் சீலஸ், சின்க்ளெர், ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கவெம் ஹாட்ஜ் சதமடித்து 120 ரன்னில் அவுட் ஆனார். ஜோஷ்வா டா சில்வா 82 ரன்னும், அலிக் அத்தானாஸ் 82 ரன்னும், பிராத்வைட் 48 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 76 ரன்னும், ஒல்லி போப் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஹாரி புருக் சதமடித்து 109 ரன்னும், ஜோ ரூட் சதமடித்து 122 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 425 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீலஸ் 4 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 385 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
- இதில் யூகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மார்டின், யூகோ ஹம்பர்ட் ஜோடியைச் சந்தித்தது.
ஒரு மணி நேரம், 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 3-6, 6-3, 10-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது.
யூகி பாம்ப்ரி ஜோடி பெற்ற இரண்டாவது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய கோவை அணி 172 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய திண்டுக்கல் அணி 176 ரன் எடுத்து வென்றது.
நெல்லை:
8-வது டி என் பி எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. ஷாருக் கான் 25 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.
6-வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த ஷாருக் கான், அதிக் உர் ரகுமான் ஜோடி அதிரடியாக ஆடி 67 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 33 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் அரை சதம் கடந்த பாபா இந்திரஜித் இந்தப் போட்டியிலும் அதிரடியை தொடர்ந்தார்.
பாபா இந்திரஜித் 49 பந்தில் 5 சிக்சர், 11 பவுண்டரியுடன் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஷிவம் சிங் 36 ரன் எடுத்தார்.
இறுதியில், திண்டுக்கல் 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் திண்டுக்கல் அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும்.
- முதலில் ஆடிய இந்தியா 201 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் ஹர்மன்பிரித் கவுர், ரிச்சா கோஷ் அரை சதம் கடந்தனர்.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா, யு.ஏ.இ அணிகள் மோதின. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அரை சதம் கடந்த ஹர்மன்பிரித் கவுர் 66 ரன்னில் வெளியேறினார். ஷபாலி வர்மா 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் யு.ஏ.இ. அணி சிரமப்பட்டது.
ஈஷா ரோகித் 38 ரன்கள் எடுத்தார். கவிஷ்கா எகோடகே பொறுப்புடன் ஆடி கடைசி வரை அவுட்டாகாமல் உள்ளார்.
இறுதியில், யு.ஏ.இ. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய கோவை அணி 172 ரன்கள் குவித்தது.
நெல்லை:
8-வது டி என் பி எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கோவை முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால் 26 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தத்தளித்தது. ராம் அரவிந்த் 25 ரன்னும், சாய் சுதர்சன் 33 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
6-வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த ஷாருக் கான், அதிக் உர் ரகுமான் ஜோடி அதிரடியாக ஆடி 67 ரன்கள் குவித்தது.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. ஷாருக் கான் 25 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.






