என் மலர்
நீங்கள் தேடியது "Leander Paes"
- 1972ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
- பல்வேறு அணிகளுக்கு மெடிக்கல் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரராக திகழ்ந்தவர் லியாண்டர் பயஸ். இவரது தந்தை வெஸ் பயஸ். முன்னாள் ஹாக்கி வீரரான இவர், இன்று காலமானார். இவருக்கு 80 வயது.
வெஸ் பயஸ் 1972ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்திருந்தார்.
பார்கின்சன் நோய் முற்றிய நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இந்திய ஹாக்கி அணியில் மிட்பீல்டர் வீரராக விளையாடி வந்தவர். மேலும் கால்பந்து, கிரிக்கெட், ரக்ஃபி போன்றவற்றில் விளையாடியுள்ளார். இந்திய ரக்ஃபி கால்பந்து சங்கத்தின் தலைவராக 1996-ல் இருந்து 2002 வரை தலைவராக பணியாற்றினார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், பிசிசிஐ, இந்திய டேவிஸ் கோப்பை அணி மெடிக்கல் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
- 6 வயது சிறுவன் தனது பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பெயரை பொருத்துக பிரிவில் லியாண்டர் பயசை தவறுதலாக நடன கலைஞர் என பொருத்தி இருந்தார்.
- பிரபுதேவாவை டென்னிஸ் வீரர் எனவும் தவறாக குறிப்பிட்டிருந்தான்.
டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயசை பற்றி பெரும்பாலானோருக்கு அறிமுகம் தேவை இல்லை. உலக அளவில் பிரபலம் ஆனவர். ஆனால், அவரை பற்றி அறியாத 6 வயது சிறுவன் தனது பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பெயரை பொருத்துக பிரிவில் லியாண்டர் பயசை தவறுதலாக நடன கலைஞர் என பொருத்தி இருந்தார்.
இந்த படத்தை பிருத்வி என்ற பயனர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதில், பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிட்டு எதிர்திசையில் அவர்களின் தொழில்களுக்கு பொருத்த வேண்டும் என்ற பிரிவில் அந்த சிறுவன், லியாண்டர் பயசை தவறாக நடன கலைஞர் என பொருத்தி இருந்த காட்சி உள்ளது. அதே நேரத்தில் பிரபுதேவாவை டென்னிஸ் வீரர் எனவும் தவறாக குறிப்பிட்டிருந்தான்.
இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அதைப்பார்த்த லியாண்டர் பயஸ், நகைச்சுவையாக பதில் அளித்து பதிவிட்டிருந்தார். அதாவது, சல்மான்கானின் நடன வீடியோ ஒன்றை பதிவிட்டு, அதில் சல்மான்கான் முகத்திற்கு பதிலாக தனது முகத்தை பொருத்தி, தான் நடனம் ஆடுவது போன்று காட்சி இருந்தது. அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
The rumours are true. pic.twitter.com/GFa76uGC3M
— Leander Paes OLY (@Leander) March 21, 2024
- சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியலில் 2 இந்தியர்கள் இடம்பெற்றனர்.
- இதில் லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் பெயர்கள் இடம்பிடித்தனர்.
புதுடெல்லி:
சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியல் இடம் பெறும்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 2024-ம் ஆண்டின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன.
இதன்மூலம் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பட்டியலில் இடம்பெற்ற ஆசிய டென்னிஸ் வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
விஜய் அமிர்தராஜ் 1970 முதல் 1993-ல் ஓய்வுபெறும் வரை விளையாடினார். 15 ஏடிபி ஒற்றையர் பட்டங்களையும், 399 போட்டிகளையும் வென்று உலகில் 18-வது இடத்தைப் பிடித்தார். மேலும் 1974 மற்றும் 1987 இல் டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றார்.
லியாண்டர் பயஸ் டென்னிஸ் அரங்கில் ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டின் லில்லி நகரில் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரர் லியாண்டர் பயஸ், ஆஸ்திரிய வீரர் பிலிப் ஓஸ்வால்டுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் பங்கேற்றார். இரண்டாம் தரநிலையில் உள்ள பயஸ்-பிலிப் ஜோடி முதல் சுற்றில் ஸ்பெயின் ஜோடி கில்லரோ- டேவிட் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை சிறப்பாக விளையாடிய பயஸ் ஜோடி, அந்த செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுத்த ஸ்பெயின் ஜோடி அடுத்தடுத்து இரண்டு செட்களை (6-3, 10-4) கைப்பற்றி வெற்றி பெற்றது. #LeanderPaes
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியில் மூத்த வீரர் 45 வயதான லியாண்டர் பெயசும் இடம் பிடித்து இருந்தார். 2010, 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் பங்கேற்காத லியாண்டர் பெயஸ் இந்த முறை அணித்தேர்வுக்கு தயாராக இருப்பதாக கூறிய பிறகே அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இரட்டையர் பிரிவில் சுமித் நாகல் அல்லது ராம்குமார் ஆகியோரில் ஒருவருடன் இணைந்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய டென்னிஸ் வீரர்கள் நேற்று இந்தோனேஷியாவுக்கு சென்றடைந்த நிலையில் லியாண்டர் பெயஸ் அவர்களுடன் இல்லை. இது குறித்து இந்திய டென்னிஸ் அணியின் கேப்டனும், பயிற்சியாளருமான ஜீஷன் அலியிடம் கேட்ட போது ‘லியாண்டர் பெயஸ் எப்போது இந்தோனேஷியாவுக்கு வருவார் என்பது எனக்கு தெரியாது. இதை அவர் தான் சொல்ல வேண்டும். கடைசியாக நான் அவரிடம் பேசிய போது, சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் விளையாடிவிட்டு அங்கிருந்து நேரடியாக இந்தோனேஷியாவுக்கு வந்து விடுகிறேன் என்று கூறினார். ஆனால் அவர் சின்சினாட்டியிலும் விளையாடவில்லை என்பது தெரிய வந்துள்ளது’ என்று கூறினார்.
இந்த நிலையில் லியாண்டர் பெயஸ் ஆசிய விளையாட்டில் இருந்து விலகுவதாக நேற்றிரவு அறிவித்தார். ‘நான் பல முறை வேண்டுகோள் விடுத்தும், இரட்டையரில் சிறப்பு வாய்ந்த வீரரை எனக்கு ஜோடியாக ஒதுக்காமல், ஒற்றையர் பிரிவில் ஆடும் வீரர்களுடன் கைகோர்க்கும்படி கூறினார்கள். இதனால் வேறு வழியின்றி ஆசிய விளையாட்டில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். எனது விலகலால் ஆசிய விளையாட்டில் டென்னிசில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பாதிக்காது’ என்று பெயஸ் விளக்கம் அளித்துள்ளார். லியாண்டர் ஆசிய விளையாட்டில் இதுவரை 5 தங்கம் உள்பட மொத்தம் 8 பதக்கம் கைப்பற்றி இருப்பது நினைவு கூரத்தக்கது. #LeanderPaes #AsianGames






