என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாகிஸ்தான் அணி கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகினார்.
    • புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    லாகூர்:

    இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததால், கேப்டன் பதவியை பாபர் அசாம் ராஜினாமா செய்தார். இதனால் ஷாஹீன் அப்ரிடி டி20, ஒருநாள் பாகிஸ்தான் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷான் மசூத் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார்.

    ஆனால் டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாபர் அசாம் மீண்டும் டி20 மற்றும் ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டுள்ளார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • தமிழ் தலைவாஸ் அணி இன்றைய போட்டியை சமன் செய்தது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைப்வாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின. ஒரு கட்டத்தில் ஜெய்ப்பூர் அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

    தோல்வி நிலையில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி கடைசி கட்டத்தில் போராடியது.

    இறுதியில், தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையிலான போட்டி 30-30 என சமனில் சமனில் முடிந்தது.

    மற்றொரு போட்டியில் யுபி யோதாஸ் 35-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்றது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் தோல்வி அடைந்தார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் மோதினார்.

    இதில் குயின்வென் ஜெங் 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    ஏற்கனவே இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் தொடர்ந்து 6 தோல்விகளை தழுவியது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வென்றது.

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று தொடர் தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பின் வர்ணனையாளருடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் உரையாடினார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத்தை நேர்காணல் செய்யும் போது முன்னாள் பிசிபி தலைவரும் வர்ணனையாளருமான ரமீஷ் ராஜா கேலி செய்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் தொடரை வென்றதைத் தொடர்ந்து, ரமிஸ் ஷானிடம், "தொடர்ந்து ஆறு தோல்விகளை எப்படி அடைந்தீர்கள்?" இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் மசூத்தின் சாதனையை குறிப்பிடுகிறார். ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் தொடர்ந்து 6 தோல்விகளை தழுவியது.

    • இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • பார்டர் கவாஸ்கர் தொடரில் நிச்சயம் முகமது சமி இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹர்சித் ரானா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் டெஸ்ட்டில் அறிமுகமாகி உள்ளனர். இந்த தொடரில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இடம் பெறுவாரா என்பது சந்தேகத்தில் இருந்தது.

    காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது சமி, குணமடைந்து பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். மேலும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு பந்து வீசி வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனால் பார்டர் கவாஸ்கர் தொடரில் நிச்சயம் முகமது சமி இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் பார்டர் கவாஸ்கர் தொடரில் இடம் பெறாறது குறித்து பிசிசிஐ மற்றும் ரசிகர்களிடம் முகமது சமி மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது முயற்சிகளை மேற்கொண்டு, எனது பந்துவீச்சு உடற்தகுதியை நாளுக்கு நாள் மேம்படுத்துகிறேன். போட்டிக்கு தயாராகவும், உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடவும் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ மன்னிக்கவும். ஆனால் மிக விரைவில் நான் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் விரும்புகிறேன். என்று அவர் கூறினார்.

    • இறுதிப்போட்டியை எனது வீட்டில் நான் எனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
    • நான் கடைசி வரை ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாட்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணியானது டி20 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இந்த தொடரை வென்றதன் மூலம் மீண்டும் ஐசிசி டி20 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.

    இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை தான் எவ்வாறு பார்த்தேன் என்று குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோனி மனம் திறந்த சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை எனது வீட்டில் நான் எனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியதும் என் நண்பர்கள் அனைவரும் எழுந்து சென்று விட்டனர். மேலும் அதை பார்க்காதே எழுந்து வா இந்தியாவுக்கு எல்லாம் முடிந்தது என்று கூறினர்.

    ஆனால் நான் ஒருவன் மட்டுமே போட்டியை முழுவதுமாக பார்த்தேன். எப்பொழுதுமே கிரிக்கெட்டை பொருத்தவரை கடைசி பந்து முடியும் வரை எதுவும் முடிந்து விட்டதாக நினைப்பது தவறு என்று கூறினேன். ஆனால் அவர்கள் என்னை நம்பவில்லை. அதன் பின்னர் நான் சொல்வது சரிதான் என்பதை போட்டி முடிந்ததும் அவர்கள் புரிந்து கொண்டனர்.

    இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அது எப்போது நடக்கும் என்பதை பொறுத்திருந்து யாரும் பார்க்கவில்லை. ஆனால் நான் கடைசி வரை ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆர்டர் சற்று வலுவில்லாமல் இருந்ததால் எனக்குள் இந்தியா ஜெயிக்கும் என்ற திடமான நம்பிக்கை இருந்தது.

    இவ்வாறு டோனி கூறினார்.



    • இந்தியாவிற்கு வருகை தரும் எந்தவொரு அணிக்கும், இங்கு டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஒரு கனவாகும்.
    • அதனை தற்சமயம் நியூசிலாந்து அணி செய்துள்ளது.

    இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றுள்ள நியூசிலாந்து அணிக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவிற்கு வருகை தரும் எந்தவொரு அணிக்கும், இங்கு டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஒரு கனவாகும். அதனை தற்சமயம் நியூசிலனது அணி செய்துள்ளது. ஒரு அணியாக குழு முயற்சிகளால் மட்டுமே இத்தகைய முடிவுகளை அடைய முடியும். மேலும் இப்போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் சான்ட்னருக்கு எனது பாராட்டுகள். இந்த அபார சாதனைக்காக நியூசிலாந்து அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • 12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
    • இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    ஐதராபாத்:

    12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

    • டோனி 2025 ஐ.பி.எல். தொடரில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
    • சி.எஸ்.கே. அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

    சென்னை:

    ஐ.பி.எல். மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற இருக்கிறது.

    மெகா ஏலத்துக்காக முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான விதிமுறைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக தங்களது அணியில் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.

    இதன் காரணமாக 31 -ந் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும். அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை தயார்படுத்தி வருகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் யார்-யார்? தக்க வைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. ஓய்வு முடிவை அறிவிக்க தயாராகியுள்ள டோனி 2025 ஐ.பி.எல். தொடரில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். அவர் ஆடுவது குறித்து எந்த தகவல் அளிக்காத நிலையில் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் டோனியை சந்தித்து பேச சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    இதற்கிடையே சி.எஸ்.கே. அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், பதிரானா ஆகிய வரிசைகளில் 3 வீரர்களை தக்க வைக்க முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், டோனியை உள்ளூர் வீரராக தக்க வைத்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம், டோனி 2025 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

    சி.எஸ்.கே. தலைமை நிர்வாகி அதிகாரி கே.எஸ். விஸ்வநாதனும் இதை உறுதி செய்தார். அவர் கூறும் போது 'டோனி விளையாட தயாராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

    இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் மணிகா பத்ரா - பெர்னாடெட் உடன் மோதினர்.
    • இதில் மணிகா பத்ரா வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மான்ட்பெல்லிர்:

    உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் போட்டி பிரான்சில் உள்ள மான்ட்பெல்லிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 11-9, 6-11, 13-11, 11-9 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்சை (ருமேனியா) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் மணிகா பத்ரா, சீனாவின் கியான் தியானியை எதிர்கொள்கிறார்.

    இந்த வெற்றியின் மூலம் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பத்ரா பெற்றார்.

    முன்னதாக நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 11-6, 7-11, 1-11, 11-8, 8-11 என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீராங்கனையான அட்ரியானா டியாசிடம் (பியூர்டோரிகோ) பணிந்தார்.

    • இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அபாரமாக வென்றது.
    • இதனால் நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் கண்டது.

    துபாய்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி என 62.82 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.

    இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (50.00 சதவீதம்) ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதினார். இதில் முசெட்டி 2-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார். இதில் கரன் கச்சனாவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் கரன் கச்சனாவ், பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதுகிறார்.

    ×