என் மலர்
விளையாட்டு
- 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது.
- தீபாவளி விடுமுறையையும் அணி நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இதனால் இந்திய அணி மீது விமர்சனம் எழுந்தது. முன்னாள் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ரோகித் சர்மா தவறுகளை சுட்டிகாட்டினர்.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன், இந்திய அணி நிர்வாகம் வீரர்கள் எந்த விதமான தளர்வுகளையும் அளிக்கும் மனநிலையில் இல்லை. எனவே, வீரர்களின் தீபாவளி விடுமுறையையும் அணி நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியது.
அதன்படி இந்திய அணி வீரர்கள் எதிர்வரும் அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் பயிற்சியில் ஈடுபடும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக வீரர்கள் அனைவரும் நாளைய தினம் மும்பை வரவேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் இருந்து உத்திரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பயிற்சியில் எந்தவொரு வீரருக்கு விடுப்போ அல்லது ஓய்வோ கிடையாது என்பதையும் பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.
- ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்துள்ளார்.
உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கால்பந்து ஆட்டத்தில் சிறந்த வீரராக வலம் வரும் இவரை நேரில் பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த வகையில் சீன ரசிகர் ஒருவர் ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரொனால்டோ, கடந்த பிப்ரவரி மாதம் சீனா செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணம் எதிர்பாராதவிதமாக ரத்து செய்யப்பட்டது. அவரை பார்க்க ஆவலாக இருந்த சீன ரசிகர் காங் இதனால் மிகவும் வருத்தமடைந்தார். இதனையடுத்து அவரை நேரில் பார்க்க சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டார்.
அதன்படி சீனாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சைக்கிளில் வந்து ரொனால்டோவை சந்தித்துள்ளார். இந்த பயணத்தை கடந்த மார்ச் 18-ந் தேதி சீனாவில் தொடங்கிய அவர் 7 நாடுகளை கடந்து அக்டோபர் 20-ந் தேதி சவுதி அரேபியாவை வந்தடைந்தார். கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.
இறுதியாக ரொனால்டோவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் ரொனால்டோ ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியையும் காங் பரிசாக பெற்றுக் கொண்டார்.
- மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் கூறினார்.
- இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் வினிசியஸ் கூறினார்.
பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் 77-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் இளம் வீரர் லமின் யமால் ஒரு கோல் அடித்தார். கோல் அடித்த உற்சாகத்தில் அதனை கொண்டாடும் விதமாக ஜெர்சியில் இருக்கும் அவரது பெயரை சுட்டிக் காட்டி கொண்டாடினார். உடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவர் மீது இனவெறி முழக்கங்களை எழுப்பினர். 17-வது வயதான வீரருக்கு எதிராக ரசிகர்கள் இனவெறி முழுக்கம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பார்சிலோனா அணி வீரர் லமின் யமால் மீது இனவெறி முழக்கங்கள் எழுப்பிய மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
- மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நவம்பர் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது.
- இந்திய அணி தனது முதல் போட்டியில் மலேசியாவை எதிர் கொள்கிறது.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நவம்பர் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகள் பீகாரில் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜ்கிர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக சலிமா டெட் நியமிக்கப்பட்டுள்ளார். நவ்நீத் கவுர் துணை கேப்டனாக செயல்படுவார்.
கடந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனா, ஜப்பான், கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். இந்திய அணி தனது முதல் போட்டியில் மலேசியாவை எதிர் கொள்கிறது. இந்த போட்டி நவம்பர் 11-ந் தேதி நடக்கிறது.
18 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:-
கோல்கீப்பர்கள்: சவிதா, பிச்சு தேவி கரிபம்.
டிபெண்டர்கள்: உதிதா, ஜோதி, வைஷ்ணவி விட்டல் பால்கே, சுசீலா சானு புக்ரம்பம், இஷிகா சவுத்ரி.
மிட் பீல்டர்கள்: நேஹா, சலிமா டெடே, ஷர்மிளா தேவி, மனிஷா சவுகான், சுனெலிடா டோப்போ, லால்ரெம்சியாமி.
முன்கள வீரர்கள்: நவ்நீத் கவுர், ப்ரீத்தி துபே, சங்கீதா குமாரி, தீபிகா, பியூட்டி டங்டங்.
- ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.
- 2-வது இடத்துக்கு மந்தனா- ஹர்மன்பிரீத் கவுர் இடையே போட்டி நிலவுகிறது.
நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இந்தியா 183 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்டர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இரண்டு இடங்கள் முறையே ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா 87 போட்டியில் விளையாடி 3590 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார். கவுர் 115 போட்டிகளில் விளையாடி 3589 ரன்கள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 1 ரன்னில் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மிதாலி ராஜ் 7805 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
- டி20 தொடரில் யார் கேப்டன் என்பது குறிப்பிடப்படவில்லை.
- வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் இந்த டி20 அணியில் இடம் பெறவில்லை.
பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் யார் கேப்டன் என்பது குறிப்பிடப்படவில்லை.
இந்த டி20 அணியில் மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா ஆகியோர் மட்டுமே சீனியர் வீரர்களாக உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் இந்த டி20 அணியில் இடம் பெறவில்லை. ஒருநாள் தொடரில் பேட் கம்மின்ஸ் கேப்டனாக உள்ளார்.
ஆஸ்திரேலியா டி20 அணி:-
சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனோலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
ஆஸ்திரேலிய ஒருநாள் அணி:-
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கானொலி, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
- டெஸ்ட் அணி அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. கம்பீர் அணியுடன் செல்ல இருக்கிறார்.
- அந்த நேரத்தில் டி20 தொடர் நடத்தப்படுவதால் லட்சுமண் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் உள்ளார். தேசிய அகாடமியின் தலைமை ஆலோசகராக வி.வி.எஸ். லஷ்மண் உள்ளார். இந்திய அணி நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான டி20 இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணிக்கு தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனென்றால், இந்திய டி20 கிரிக்கெட் அணி தென்ஆப்பரிக்காவில் நவம்பர் 8, 10, 13 மற்றும் 15-ந்தேதிகளில் விளையாடுகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி 10-11-ந்தேதிகளில் புறப்படுகிறது.
கவுதம் கம்பீர் இந்திய டெஸ்ட் அணியுடன் ஆஸ்திரேலியா புறப்பட வேண்டியிருப்பதால், டி20 அணியுடன் செல்ல முடியாது. இதனால் லட்சுமண் நியமிக்கப்பட்டள்ளார்.
லஷ்மண் உடன் சாய்ராஜ் பகதுலே, ஹிஷ்கேஷ் கனித்கர், சுபாதீப் கோஷ் போன்ற கோச்சிங் ஸ்டாஃப்களும் செல்ல இருக்கிறார்கள்.
- தங்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.
- -3 என கிர்கிஸ்தான் வீரர் அப்திமாலிக் கரசோவ்-ஐ வீழ்த்தி தங்கம் வென்றார்.
23 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் அல்பேனியா நாட்டின் டிரனாவில் நடைபெற்றது.
இதில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சிராக் சிக்காரா 4-3 என கிர்கிஸ்தான் வீரர் அப்திமாலிக் கரசோவ்-ஐ வீழ்த்தி தங்கம் வென்றார்.
இதன்மூலம் 23 வயதிற்கு உட்பட்டோருக்கு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில் தங்கம் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற அமான் ஷெராவத், 2022-ம் ஆண்டு 23 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
கடந்த வருடம் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீதிகா ஹூடா தங்கம் வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைப் படைத்தார். 2018-ல் ரவிக்குமார் தஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- கடந்த மே மாதம் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார்.
- இவரது தலைமையில் பாகிஸ்தான டி20 உலகக் கோப்பையில் தகுதி சுற்றோடு வெளியேறியது.
பாகிஸ்தான் ஒயிட்பால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த கேரி கிரிஸ்டன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம்தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக நீடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஒவ்வொரு ஸ்டாஃப் ஆக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கி வருகிறது. கேரி கிரிஸ்டன் மட்டும்தான் நீடித்து வந்தார். இந்த நிலையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே செல்லும் நிலையில் கேரி கிர்ஸ்டன் அணியுடன் செல்லமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளார.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கிர்ஸ்டன் டேவிட் ரெய்ட்-ஐ ஹை பெர்மார்மன்ஸ் கோச்சாக நியமிக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.
டேவிட் ரெய்ட்-க்குப் பதிலாக மற்றொரு ஆலோசனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வழங்கியுள்ளது. அதை கேரி கிர்ஸ்டன் ஏற்க மறுத்துவிட்டார். இதனால்தால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக உள்ள ஜேசன் கில்லெஸ்பி அல்லது தேசிய அணியின் தேர்வாளராக உள்ள அக்யூப் ஜாவித் ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா தொடர் தொடங்க இருக்கும் நிலையில் முகமது ரிஸ்வானை கேப்டனாக பாகிஸ்தான் அணி நியமித்துள்ளது.
- ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார்.
- ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார்.
காத்மண்டு:
நேபாளத்தில் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடைபெறுகிறது.
காத்மண்டுவில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார். இறுதியில், போட்டி 1-1 என சமனில் இருந்தது.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நேபாளம் 4-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியது.
- முதலில் பேட் செய்த இலங்கை 133 ரன்கள் எடுத்தது.
- ஆப்கானிஸ்தான் 18.1 ஓவரில் 134 ரன்கள் எடுத்து வென்றது.
அல் அமேரத்:
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணியும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. வங்காளதேசம் ஏ, ஹாங்காங், யு.ஏ.இ., ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணியும், இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று அல் அமேரத்தில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. சஹன் ஆராசிகே 64 ரன்கள் எடுத்தார்.
அடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதுடன், எமர்ஜிங் ஆசிய கோப்பையையும் வென்று அசத்தியது.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்தது.
- இதில் ரஷிய வீரர் கரன் கச்சனாவ் தோல்வி அடைந்தார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது.
பிரிட்டனின் ஜாக் டிராபர், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
இதில் ஜாக் டிராபர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை வென்றார்.






