என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து அணிக்கு சச்சின் பாராட்டு
- இந்தியாவிற்கு வருகை தரும் எந்தவொரு அணிக்கும், இங்கு டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஒரு கனவாகும்.
- அதனை தற்சமயம் நியூசிலாந்து அணி செய்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றுள்ள நியூசிலாந்து அணிக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவிற்கு வருகை தரும் எந்தவொரு அணிக்கும், இங்கு டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஒரு கனவாகும். அதனை தற்சமயம் நியூசிலனது அணி செய்துள்ளது. ஒரு அணியாக குழு முயற்சிகளால் மட்டுமே இத்தகைய முடிவுகளை அடைய முடியும். மேலும் இப்போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் சான்ட்னருக்கு எனது பாராட்டுகள். இந்த அபார சாதனைக்காக நியூசிலாந்து அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.






