என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இரு அணிகளுமே 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
    • இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், வங்காளதேசம் வெளியேற்றப்பட்டன.

    பி பிரிவில் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து வெளியேறியது 2-வது அணியாக தகுதி பெறுவதற்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் (தலா 3 புள்ளிகள்) உள்ளன.

    இதில் தென் ஆப்பிரிக்காவுக்கே அதிகமான வாய்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்திடம் தோற்றாலும் பாதிப்பு இருக்காது. ஏனென்றால் அந்த அணி நிகர ரன் ரேட்டில் 2.140 ஆக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் ரன் ரேட்-0.990 ஆகும்.

    இந்தப் போட்டி தொடரின் கடைசி லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்தையும், 2- வது போட்டியில் பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. துபாயில் மட்டுமே விளையாடும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார். தொடைநார் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட மாட்டார். அணியின் துணை கேப்டனான சுப்மன்கில் கேப்டனாக பணியாற்றுவார். ரோகித்சர்மா இடத்தில் ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும். சுப்மன்கில்லும், கே.எல். ராகுலும் தொடக்க வரிசையில் ஆடுவார்கள்.

    இதேபோல வேகப்பந்து வீரர் முகமது ஷமியும் முழு உடல்தகுதியுடன் இல்லை. அவரது இடத்தில் அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார்.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரும் பந்து வீச்சில் ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் 60 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2-வது பேட்டிங் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.

    அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் டாம் லாதம், ரச்சின் ரவீந்தர், வில் யங், பிலிப்ஸ் ஆகியோரும் பந்து வீச்சில் பிரேஸ்செல், வில்லியம் ரூர்கே, கேப்டன் சான்ட்னெர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுகிறது. 119-வது போட்டியாகும். இதுவரை நடந்த 118 ஆட்டங்களில் இந்தியா 60-ல் நியூசிலாந்தில் 50-ல் வெற்றி பெற்றார். ஒரு போட்டி டை ஆனது. 7 ஆட்டம் முடிவு இல்லை.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்னை முதன் முதலில் எடுத்தது அற்புதமான உணர்வாகும்.
    • கவாஸ்கர் இல்லாத இந்தியாவை வீழ்த்த விரும்பவில்லை என்று இம்ரான் கூறினார்.

    புதுடெல்லி:

    டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் 10 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தவர் சுனில் கவாஸ்கர். 1987-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த டெஸ்டில் அவர் இந்த மைல்கல்லை தொட்டார்.

    கவாஸ்கருக்கு பிறகு 14 வீரர்கள் 10 ஆயிரம் ரன்னை எடுத்தார்கள். டெண்டுல்கர் (15,921 ரன்), ரிக்கி பாண்டிங் (13,378), காலிஸ் (13,289), ராகுல் டிராவிட் (13,288), ஜோரூட் (12,972), குக் (12,472), சங்ககரா (12,400), லாரா (11,953), சந்தர்பால் (11,867), ஜெய வர்த்தனே (11,814), ஆலன் பார்டர் (11,174), ஸ்டீவ் வாக் (10,271) யூனுஸ்கான் (10,099) ஆகியோர் 10 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்த வீரர்கள் ஆவார்கள்.

    கவாஸ்கர் 1971 முதல் 1987 வரையிலான காலக் கட்டத்தில் விளையாடி 10,122 ரன் (125 டெஸ்ட்)எடுத்தார். டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் அவர் 14-வது இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் 10 ஆயிரம் ரன் சாதனையை தான் எடுப்பதற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் தான் காரணம் என்று தற்போது டெலிவிசன் வர்ணனையாளராக இருக்கும் கவாஸ்கர் தெரிவித்து இருந்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்னை முதன் முதலில் எடுத்தது அற்புதமான உணர்வாகும். கிரிக்கெட்டை தொடங்கியபோது இதை சாதிப்பேன் என்று நினைக்கவில்லை. நான் இந்த மைல்கல்லை தொட முடிந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் இம்ரான்கான் தான்.

    பாகிஸ்தான் இங்கு வருவதற்கு முன்பாக இங்கிலாந்தில் நானும், இம்ரான்கானும் உணவு விடுதிக்குச் சென்றோம். அப்போது , இந்தத் தொடர்தான் எனக்கு கடைசி தொடர், ஓய்வு அறிவிக்கப்போகிறேன் என்றேன். இதை சொல்லும் போது 1986-ம் ஆண்டாகும். ஆனால், இம்ரான் இதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

    பாகிஸ்தான் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது. இந்தியாவை இந்திய மண்ணில் நீங்கள் களத்தில் இருக்கும்போது வீழ்த்த வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதாவது கவாஸ்கர் இல்லாத இந்தியாவை வீழ்த்த விரும்பவில்லை என்று இம்ரான் கூறினார்.

    இம்ரான் சொன்னது போலவே அறிவிப்பு வந்தது. அப்படி அறிவிப்பு வராமல் நான் அந்தத் தொடரில் ஓய்வு பெற்று இருந்தால் நான் 9200-300 ரன்களில் தான் முடிந்திருப்பேன். அதனால்தான் 10 ஆயிரம் ரன்கள் மைல் கல்லை எட்ட முடிந்தது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.

    • இங்கிலாந்தை வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
    • இங்கிலாந்து அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி

    விட்டனர். பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி அதிகாரப்பூர்வமாக முன்னேறி விட்டது. 2-வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா அணி முன்னேற அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.

    'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். 3 புள்ளியுடன் உள்ள தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் சிக்கலின்றி அரைஇறுதிக்கு முன்னேறும். சறுக்கினாலும் மோசமாக தோற்கக்கூடாது. ரன்ரேட் குறையாமல் இருந்தால் போதும்.

    ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தது 300 ரன்கள் எடுத்தால், தென் ஆப்பிரிக்காவை குறைந்தது 207 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இரண்டாவது பேட்டிங் செய்தால், 11.1 ஓவர்களுக்குள் 300+ இலக்கை துரத்த வேண்டும். இந்த அதியசம் நடந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளது.

    ஆனால் இங்கிலாந்தை வீழ்த்தி 5 புள்ளியுடன் தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பதில் தீவிரம் காட்டும். ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. கேப்டனாக ஜோஸ் பட்லரின் கடைசி ஆட்டம் இது என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிப்பார். 

    • இதுநாள் வரைக்கும் ஒவ்வொரு சீசனுக்கும் ரொம்ப வெறியாக பயிற்சி செய்துள்ளேன்.
    • சென்னை அணி தனது முதல் லீக்கில் மும்பை இந்தியன்சை வருகிற 23-ந் தேதி சந்திக்கிறது.

    சென்னை:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9¾ கோடிக்கு சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினை வாங்கியது. 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்சுக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் பிறகு புனே சூப்பர் ெஜயன்ட்ஸ், டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு தாவினார்.

    10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சொந்த ஊர் அணியில் ஐக்கியமாகியுள்ள 38 வயதான அஸ்வின் தற்போது சக வீரர்களுடன் இணைந்து சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் அளித்த பேட்டியில் 'உண்மையில் இது வித்தியாசமான உணர்வாக இருக்கிறது.

    நான் இங்கிருந்து வெளியேறி பல ஆண்டுகள் ஆகி விட்டது அல்லவா? மீண்டும் அதே அணிக்கு திரும்பி வந்துள்ளேன். ஆனால் வீரர்கள் எல்லாம் அதே வீரர்கள் தான். இதுநாள் வரைக்கும் ஒவ்வொரு சீசனுக்கும் ரொம்ப வெறியாக பயிற்சி செய்துள்ளேன். ஆனால் இப்போது திடீரென இங்கு (சென்னை) வந்த உடனே மிகவும் சீனியர் வீரராக உணர்கிறேன். ஓ.கே. இதுவும் நல்ல உணர்வு தான். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்' என்றார்.

    சென்னை அணி தனது முதல் லீக்கில் மும்பை இந்தியன்சை வருகிற 23-ந் தேதி சந்திக்கிறது.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-பிரிட்டனின் ஜேமி முர்ரே உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 6-2 என கைப்பற்றியது. 2வது செட்டை 6-4 என யூகி பாம்ப்ரி ஜோடி இழந்தது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 10-7 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    • பிரக்ஞானந்தா செக் குடியரசு வீரர் டாய் வென்னை வீழ்த்தினார்.
    • பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.

    பிராக்:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, செக் குடியரசு வீரர் டாய் வென்னைச் சந்தித்தார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். முதல் இரு ஆட்டங்களில் பிரக்ஞானந்தா டிரா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    பெர்லின்:

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடி மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் கிரீஸ் வீரர் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ஹேலிசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெலிக்ஸ் ஆகர், சிட்சிபாஸ் உடன் மோதுகிறார்.

    • முதலில் ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து பேட் செய்த டெல்லி அணி 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. ஹேலி மேத்யூஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் தலா 22 ரன்கள் எடுத்தனர். நட் சீவர் பிரண்ட் 18, அமெலியா கெர் 17 ரன் எடுத்தனர்.

    டெல்லி அணி சார்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் இருவரும்

    அதிரடியாக ஆடினர்.

    முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாலி வர்மா 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜெமிமாவுடன் மேக் லேனிங் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். மேக் லேனிங் அரை சதம் கடந்து அசத்தினார்.

    இறுதியில், டெல்லி அணி 14.3 ஓவரில் 124 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

    • இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
    • இதன்மூலம் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    லாகூர்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. செடிகுல்லா அடல் 85 ரன்னிலும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 67 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் துவார்ஷியஸ் 3 விக்கெட்டும், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 274 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது. தொடக்கமே ஆப்கானிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கால் 2 கேட்ச்சுகளை தவறவிட்டனர். மேத்யூஸ் ஷாட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் அரை சதம் எடுத்தார். அப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    • மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது.
    • டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பெங்களூரு:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா- ஹேலி மேத்யூஸ் ஆகியோர் களமிறங்கினர். யாஸ்திகா பாட்டியா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மேத்யூஸ் 22 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி நாட் ஸ்கைவர்-பிரண்ட் 18, ஹர்மன்ப்ரீத் கவுர் 22, அமெலியா கெர் 17, சஜீவன் சஜனா 5, கமலினி 1, சமஸ்கிருத குப்தா 3 என வெளியேறினார்.

    இறுதியில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிதான் அவர் கேப்டனாக செயல்படும் கடைசி போட்டியாகும்.
    • இங்கிலாந்தின் அடுத்த கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    லண்டன்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் - பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

    அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடைந்த தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள் + டி20) செயல்பட்டு வந்த பட்லர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிதான் அவர் கேப்டன் பதவி வகிக்கும் கடைசி போட்டி என கூறப்படுகிறது. கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகியதை அடுத்து இங்கிலாந்தின் அடுத்த கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    ×