என் மலர்
விளையாட்டு
- கேரள அணி தரப்பில் சச்சின் பேபி 98 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 37 ரன்களுடன் விதர்பா அணி முன்னிலையில் உள்ளது.
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேரளா அணி தரப்பில் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நெடுமான்குழி பாசில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்சைத் தொடர்ந்த கேரளா அணியில் ரோஹன் குன்னுமால் ரன்கள் ஏதுமின்றியும், அக்ஷய் சந்த்ரன் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஹ்மத் இம்ரானும் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் அந்த அணி 2-நாள் ஆட்டநேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆதித்யா சர்வதே 66 ரன்களுடனும், கேப்டன் சச்சின் பேபி 7 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆதித்யா சர்வதே 10 பவுண்டரிகளுடன் 79 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய சல்மான் நிசார் 21 ரன்களையும், முகமது அசாருதீன் 34 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் சச்சின் பேபி 10 பவுண்டரிகளுடன் 98 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜலஜ் சக்சேனா 26 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் கேரளா அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களில் ஆல் அவுட்டானது.
விதர்பா அணி தரப்பில் தர்ஷன் நல்கண்டே, ஹர்ஷ் தூபே, பார்த் ரேகாடே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 37 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி நாளை 4-ம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்தார்.
- ஆஸ்திரேலிய தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 3 விக்கெட்டும் ஸ்பான்சர், ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ்- இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். குர்பாஸ் முதல் ஓவரிலேயே 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து சத்ரானுடன் செடிகுல்லா அடல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய சத்ரான் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹ்மத் ஷா 12, ஹஷ்மதுல்லா ஷாஹிதி 20 என வெளியேறினர்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செடிகுல்லா அடல் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவர்களை தொடர்ந்து நபி 1, நைப் 4 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனையடுத்து ரஷித் கான், ஓமர்சாய் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ரஷித் கான் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ஓமர்சாய் அரை சதம் கடந்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 3 விக்கெட்டும் ஸ்பான்சர், ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- கோலி தான் கிரிக்கெட்டின் உண்மையான கிங் என்றும் பாபர் அசாம் கிடையாது எனவும் சோயப் அக்தர், ஹபீஸ் கூறினர்.
- விராட் கோலியுடன் மேட்ச் வின்னர்களாக தோனி, ரோகித் சர்மா இருந்தார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
அந்தத் தோல்விக்கு நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. அதனால் விராட் கோலி தான் கிரிக்கெட்டின் உண்மையான கிங் ஆனால் பாபர் அசாம் ஃபிராடு என சோயப் அக்தர், ஹபீஸ் போன்ற நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் பாபர் அசாம் விராட் கோலி கிடையாது தான், அதற்காக இப்படி விமர்சிக்கும் அளவுக்கு பாபர் அசாம் மோசமானவர் கிடையாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 சதங்களை அடித்துள்ள பாபர் 26 அரை சதங்களுடன் 44.5 சராசரியை கொண்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 19 சதங்கள் 32 அரை சதங்கள் அடித்துள்ள அவர் 56.72 சராசரியைக் கொண்டுள்ளார். டி20-யில் 129 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் 41 சராசரியைக் கொண்டுள்ளார்.
இப்போது கடந்த 20 வருடங்களில் பாகிஸ்தானுக்காக விளையாடி பாபர் அசாமின் இந்தப் புள்ளி விவரங்களை முந்திய வீரர் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நீங்கள் கோலி அல்லது வில்லியம்சனாக இருக்க வேண்டியதில்லை. பாபர் விராட் கோலி கிடையாது. ஆனால் பாபர் நாம் கொண்டிருக்கும் சிறந்த பேட்ஸ்மேன். தற்போது ரன்கள் அடிக்க முடியவில்லையெனில் அவருக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். அவர் நன்றாக விளையாடும் போது நீங்கள் விரும்பவில்லை என்றாலும் உலகுடன் சேர்ந்து பாராட்ட வேண்டும்.
விராட் கோலி கூட அவ்வப்போது ஃபார்மை இழக்கிறார். ஆனாலும் முக்கியமான போட்டிகளில் 50 ரன்களை அடித்து விடுகிறார். விராட் கோலி தன்னுடன் யாரைக் கொண்டிருந்தார்? ரோகித் சர்மா, எம்எஸ் தோனி. அந்த வகையில் விராட் கோலியுடன் மேட்ச் வின்னர் இருந்தார்கள். ஆனால் பாபர் அசாமுடன் பாகிஸ்தான் அணியில் யார் இருக்கிறார்கள்? அதாவது பாபர் அசாமுக்கு ஆதரவு கொடுக்கும் அளவுக்கு பாகிஸ்தான் அணியில் நல்ல வீரர்கள் இல்லை.
என்று சல்மான் கூறினார்.
- 9 ஆண்டுகளாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
- கடந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் 9 சீசன் முடிவடைந்த நிலையில் 10-வது சீசன் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் மற்றும் 2 முறை சாம்பியனான லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதுகிறது.
இந்த தொடர் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் மார்ச் 23-ல் தொடங்கி மே 25 வரை நடக்கிறது. கிட்டத்தட்ட இரு தொடர்களும் ஒரு நேரத்தில் மோதிகொள்ளும் வகையில் போட்டியின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு தொடை பகுதில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் வருகிற 2-ந் தேதி விளையாடவுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேச மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.
மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதிலிருந்து எந்த இரு இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் வருகிற 2-ந் தேதி விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்திருப்பதாகவும், இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு தொடை பகுதில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அணியின் பயிற்சி அமர்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை. இதனால் காயத்தால் அவதிப்பட்டு ரோகித் சர்மா முழு உடற்தகுதியை எட்டாத நிலையில், நியூசிலாந்து போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அரையிறுதி போட்டியில் விளையாட வைக்க பிசிசிஐ திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மாவுக்கு பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அல்லது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும். அதேசமயம் சுப்மன் கில்லுடன் இணைந்து கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரே பிட்ச்சில் எல்லா போட்டிகளையும் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமான சூழல்தான்.
- இதைப் புரிந்துகொள்ள, ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. பி பிரிவில் இங்கிலாந்து அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. மற்ற 3 அணிகளான ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்காக போராடி வருகின்றனர்.
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பிற அணிகள் வெவ்வேறு மைதானங்களில் விளையாடி வரும் நிலையில், இந்திய அணி தனது போட்டிகள் அனைத்தையும் துபாயில் மட்டுமே விளையாடுகிறது.
இதனால் இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலர் குற்றம் சாட்டி வந்தனர். இந்திய அணி மட்டுமே ஒரே இடத்தில் இருந்து விளையாடி வருகின்றனர். மற்ற அணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று விளையாடி வருகின்றனர். இதனால் இந்திய அணிக்கு நிறைய சாதகமான விஷயங்கள் உள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா வீரரான ராஸி வாண்டர் டுசன் இதே குற்றச்சாட்டை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரே ஹோட்டலில் தங்கி, ஒரே இடத்தில் பயிற்சி எடுத்து, ஒரே மைதானத்தில், ஒரே பிட்ச்சில் எல்லா போட்டிகளையும் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமான சூழல்தான். இதைப் புரிந்துகொள்ள, ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
என ராஸி வாண்டர் டுசன் கூறினார்.
- சென்னையில் முதல் மாநில அளவிலான டென்பின் பவுலிங் போட்டி நடைபெற்றது.
- விஷ்ணு, தன்னை எதிர்த்து விளையாடிய ஆனந்த் பாபுவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள 'லெட்ஸ் பவுல்' டென்பின் பவுலிங் விளையாட்டு மையத்தில் நடைபெற்று வந்தது.
டாப் 3 அடிப்படையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஷபீர் தன்கோட் - விஷ்ணு எம் மோதினர். இதில், முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றியுடன் இருவரும் சமநிலையில் இருந்தனர். மூன்றாவது போட்டியில் ஷபீர் தன்கோட், தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஷ்ணுவை 5 பின்கள் என்ற குறுகிய வித்தியாசத்தில் (180-175) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றார்.
6 விளையாட்டுகளின் பிளாக்கில் அதிகபட்ச சராசரி (201.1) பெற்ற மஹிபால் சிங் மற்றும் 225-க்கு மேல் என்ற அதிகபட்ச ஸ்கோர்கள் (2) பெற்ற ஷபீர் தன்கோட் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
- ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
- பி பிரிவில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்து இங்கிலாந்து அணி வெளியேறியது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற் றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் தொடரில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேற்றப்பட்டன. பி பிரிவில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்து இங்கிலாந்து அணி வெளியேறியது.
இந்நிலையில், இந்த தொடரின் 10-வது லீக் ஆட்டம் லாகூரில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது போல் ஹஸ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாயில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டது.
இந்த நிலையில், இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மார்ச் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய அணி கடந்த புதன் கிழமை பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக நேற்றைய தினம் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
ஓய்வு நாளில் வீரர்கள் ஓட்டல் அறையில் இருப்பது, வெளியில் செல்வது என பொழுதை கழிக்கலாம். எனினும், இந்திய வீரர் சுப்மன் கில மட்டும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற வீரர்கள் ஓய்வு எடுத்த நிலையில், சுப்மன் கில் மட்டும் தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது. சுப்மன் கில் பயிற்சி செய்ய அணியின் பயிற்சியாளர் குழுவில் சிலர் அவருக்கு உதவியதாக தெரிகிறது.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய வீரர் சுப்மன் கில் வங்காளதேசம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 101 ரன்களை குவித்தார். அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 46 ரன்களை சேர்த்தார். வலுவான நிலையில் காணப்படும் சுப்மன் கில் தனது ஃபார்மை அடுத்தடுத்த போட்டிகளிலும் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றி விட்டன.
- இங்கிலாந்து அணி தனது 2 போட்டிகளிலும் தோல்வியுற்றது.
எட்டு அணிகள் பங்கேற்றுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டன. வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றி விட்டன.
பி பிரிவில் இங்கிலாந்து அணி மட்டும் வெளியேறி உள்ளது. இந்த பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே அரைஇறுதி சுற்றுக்கான போட்டி நிலவுகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
கராச்சியில் நாளை நடக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பி பிரிவில் உள்ள அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு போட்டி எஞ்சி உள்ளன. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகளை பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தனது 2 போட்டிகளிலும் தோல்வியுற்றது.
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா தோற்கடித்தால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும். அத்துடன் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஒருவேளை ஆஸ்திரேலியா தோற்றால், நாளைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும் மழையால் இன்றைய போட்டி கைவிடப்பட்டால் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும்.
ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகள் பெறும். அப்படி நடக்கும்பட்சத்தில் 3 புள்ளிகளுடன் இருக்கும் தென் ஆப்பிரிக்கா நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா அணியின் ரன்-ரேட் ஆப்கானிஸ்தானை விட நல்ல நிலையில் இருப்பதால் பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது.
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்குள் நுழையும். அப்படி நடக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி முடிவுக்காக ஆஸ்திரேலியா காத்திருக்க வேண்டும்.
நாளைய போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் தென் ஆப்பி ரிக்காவுக்கு சவால் காத்து இருக்கிறது.
- வெவ்வேறு பகுதிகளில் முன்னேற்றங்களை பெற வேண்டும்.
- சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம்.
சாம்பின்ஸ் டிராபி 2025 தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தழுவியது. வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சொந்த மண்ணில் நடந்த போட்டி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாததால் பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் அணியின் தோல்விக்கு அதை காரணமாக சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நாட்டு ரசிகர்கள் முன் சிறப்பாக செயல்பட விரும்பினோம். எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன. ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சைம் அயூப், ஃபகர் ஜமான் ஆகியோர் காயத்தால் விலகியது பாதிப்பை ஏற்படுத்தியது."
"ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட சைம் அயூப் காயமடைந்ததால் விலகினார். இது அணியின் சமநிலையை பாதித்தது. ஆனால் தோல்விக்கு அதை காரணமாக சொல்ல விரும்பவில்லை."
"நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் முன்னேற்றங்களை பெற வேண்டும். கடந்த சில போட்டிகளில் நாங்கள் தவறுகளை செய்துள்ளோம். அதிலிருந்து கற்றுக்கொண்டு அதை சரிசெய்வோம் என்று நம்புகிறோம். நாங்கள் அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறோம். அங்கு சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இன்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மாட்டியோ பெரெட்டேனி உடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் 7-6 (7-5), 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.






