என் மலர்
விளையாட்டு
- அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ஒரு விளம்பர படத்தில் தோனி நடித்துள்ளார்.
- அந்த படத்தில் ரன்பீர் கபூரின் கெட்டப்பை தோனி அப்படியே பிரதிபலித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக 10 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ஒரு விளம்பர படத்தில் தோனி நடித்துள்ளார்.
மோட்டாரட் என்ற நிறுவனத்தின் விளம்பர படத்தில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய அனிமல் படத்தின் ஒரு காட்சியை உருவாக்கியுள்ளார். அந்த படத்தில் ரன்பீர் கபூரின் கெட்டப்பை தோனி அப்படியே பிரதிபலித்துள்ளார். ரன்பீர் அந்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் ரண்விஜய் சிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
எம்.எஸ். தோனி ஒரு காரிலிருந்து வெளியே வந்து தனது நண்பர்களுடன் ஒரு கேங்க்ஸ்டர் பாணியில் சாலையைக் கடக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரன்பீர் கபூர் அனிமல் திரைப்படத்தில் செய்ததைப் போலவே தோனி செய்துள்ளார்.
ஆனால், தோனியின் வீடியோவில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அவர் எலக்ட்ரிக் சைக்கிளுடன் சாலையைக் கடக்கிறார். இந்த வீடியோவில் வாங்கா மற்றும் தோனி இடையே உரையாடலும் நடந்தது. மேலும், இயக்குனர் தோனியின் நடிப்பைப் பாராட்டினார். மேலும், அவரது ஸ்டைல் அனைவருக்கும் பிடிக்கும் என்று இயக்குநர் கூறினார். இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
- ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது.
- ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ அணி உபி முதல் மந்திரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
லக்னோ:
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அணி வீரர்கள் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் லக்னோ அணி வீரர்கள் கையெழுத்திட்ட மினி பேட்டை யோகி ஆதித்யநாத்திற்கு பரிசாக லக்னோ அணி உரிமையாளரும் கேப்டன் ரிஷப் பண்டும் இணைந்து வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
- பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது
- அப்ரிடி முதல் ஓவரை டிம் சீஃபர்ட் வைத்து மெய்டனாக வீசினார்.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி தனது 2-வது ஓவரையும் அணியின் 3-வது ஓவரையும் வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் 4 சிக்சர்களை பறக்க விட்டார். மொத்தமாக அந்த ஓவரில் 26 ரன்கள் எடுக்கப்பட்டது.
முதல் ஓவரை டிம் சீஃபர்ட்டை வைத்து தான் அப்ரிடி மெய்டன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.
- இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
பாசெல்:
மொத்தம் ரூ.2¼ கோடி பரிசுத் தொகைக்கான சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்திய வீரர் லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் முதல் சுற்றில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி- மலேசியா வீரர் சோழன் காயன் உடன் மோதினார். இதில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- சிறிய காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னால் விளையாட முடியாது.
- மற்ற ரசிசகர்கள் போல் அணிக்கு ஆதரவு அளிப்பதுடன், அணியை உற்சாகப்படுத்துவேன்- மெஸ்சி
உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அர்ஜென்டினா அடுத்த இரண்டு போட்டிகளில் உருகுவே, பிரேசில் அணிகளை சந்திக்க இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி விளையாட இருந்தார்.
இந்த நிலையில் "உருகுவே, பிரேசில் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டியில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. உண்மையிலேயே இரண்டு போட்டிகளிலும் விளையாட விரும்பினேன். சிறிய காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னால் விளையாட முடியாது. மற்ற ரசிசகர்கள் போல் அணிக்கு ஆதரவு அளிப்பதுடன், அணியை உற்சாகப்படுத்துவேன்" என மெஸ்சி தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா வருகிற 22-ந்தேதி உருகுவே அணியையும், 26-ந்தேதி பிரேசில் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்கும்.
- ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் சாம்சன் காயம் அடைந்தார்.
- விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சஞ்சு சாம்சன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.
இந்த தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் உள்ளார். இவர் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு இங்கிலாந்து- இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதியது. அப்போது ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் சாம்சன் காயம் அடைந்தார்.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் முழு உடற்தகுதியை எட்டிய நிலையில் இன்று அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். சாம்சன் முழு உடற்தகுதியை மீட்டெடுத்திருந்தாலும், உடனடியாக விக்கெட் கீப்பிங் பயிற்சியை மேற்கொள்வாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அவர் உடற்தகுதியுடன் இல்லை என்றால், துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
- முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
- மும்பை அணி முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்னும் சில தினங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் பயிற்சியை துவங்கியுள்ளன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியின் போது அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா மைதானத்தில் ஷா பூ த்ரீ விளையாடினர்.
பயிற்சின் போது மூவரும் ஒன்றுகூடிய நிலையில், தீவிரமாக ஆலோசனை செய்து பிறகு சா பூ த்ரீ விளையாடினர். உள்ளூர் கிரிக்கெட் மற்றும் இதர விளையாட்டுகளின் போது யார் முதலில் தொடங்குவது என்பதை முடிவு செய்ய சா பூ த்ரீ போடுவது வழக்கம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி வீரர்களும் இதை விளையாடியது கவனம் பெற்றுள்ளது.
பலரும் இந்த வீடியோவில் கமென்ட் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர். விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வருகிற 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
- மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
- இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. கேப்டன் சல்மான் ஆஹா 28 பந்துகளில் 46 ரன்களை எடுத்தார். ஜேக்கப் டபி, பென் சீயர்ஸ், நீசம், சோதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் ஷெய்பர்ட் 22 பந்துகளில் 45 ரன்கள், ஆலன் 16 பந்தில் 38 ரன்களை அடித்தனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
- புதிய கேப்டனுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடங்கும் முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய கேப்டன், ரஜத் பட்டிதாருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சிறப்பு கோரிக்கை விடுத்தார். மேலும், ரசிகர்களும் புதிய கேப்டனுக்கு தங்களது அன்பை வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து பேசிய விராட் கோலி, "இவர் (ரஜத் பட்டிதார்) உங்களை நீண்ட காலம் வழிநடத்துவார். அவருக்கு அன்பை கொடுங்கள், அவர் மிகத் திறமையானவர். அவர் பிரான்சைஸ்-க்கு நன்மை செய்து. ஐ.பி.எல். தொடரில் அணியை முன்னோக்கி அழைத்து செல்வார். நல்ல தலைவராக உருவெடுப்பதற்கு அவரிடம் எல்லா திறமையும் உள்ளது," என்று தெரிவித்தார்.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாப் டூ பிளெசிஸ்-க்கு மாற்றாக ஆர்.சி.பி.-யின் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதார் 2021-ம் ஆண்டு முதல் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார்.
- புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
- மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் போட்டோஷூட் நடைபெறும்.
18-வது சீசனுக்காக ஐ.பி.எல். போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
போட்டி தொடங்குவதற்கு 2 தினங்களுக்கு முன்பு 10 அணிகளின் கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆலோசனை நடத்துகிறது.
இதற்காக 10 அணிகளின் கேப்டன்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. வருகிற 22-ந்தேதி மும்பையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதே போன்று 10 அணிகளின் உரிமையாளர்களின் மேலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.
இந்த கூட்டத்திற்கு பிறகு 10 அணிகளின் கேப்டன்களுடன் போட்டோஷூட் நடத்தப்படும். மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் இந்த போட்டோஷூட் நடைபெறும்.
இந்த சீசனில் 5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரகானே (கொல்கத்தா), ரஜத் படிதார் (பெங்களூரு), ரிஷப்பண்ட் (லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப்) அக்ஷர் படேல் (டெல்லி), ஆகியோர் அந்த அணிகளின் புதிய கேப்டன்கள் ஆவார்கள்.
ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை), கம்மின்ஸ் (ஐதராபாத்) சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான்), ஹர்திக் பாண்ட்யா (மும்பை), சுப் மன்கில் (குஜராத்) ஆகியோர் அந்தந்த அணிகளின் கேப்டன்களாக நீடிக்கிறார்கள்.
- ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது.
- நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடியது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தன.
இதையடுத்து இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி டுனெடினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
அதன் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஜார்ஜியா பிம்மர் 46 ரன்களுடனும், இஸ்ஸி ஷார்ப் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழை நீண்ட நேரமாகியும் நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
- இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
- இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் '804' என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் அவருக்குச் சுமார் 1.4 மில்லியன் அபராதம் விதித்திருக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, அமீர் ஜமால் 804 என்ற நம்பர் எழுதியிருந்த தொப்பியை அணிந்திருந்தார். இந்த 804 என்ற எண்ணானது, சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானுக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானின் கைதி நம்பரைக் குறிக்கிறது.
இதனால், கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவந்து இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்கள் மீது இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தாமதமாக வந்ததற்காக சைம் அயூப், சல்மான் அலி அகா, அப்துல்லா ஷஃபிக் உட்படப் பல பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, தாமதமாக வந்ததற்காக சுபியான் முகீம், அப்பாஸ் அஃப்ரிடி, உஸ்மான் கான் ஆகியோருக்குத் தலா 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.






