என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பும் நிலையில், அவர் இந்திய அணியின் ஒரு அங்கம் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் ரவிசந்திரன் அஸ்வின். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜடேஜா அணியில் இடம்பிடித்திருந்தார்.

    இதனால் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில் அஸ்வின் இந்திய அணியின் ஒரு அங்கம் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘அஸ்வின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவர் பந்து வீச்சில் மட்டும் சிறப்பாக செயல்படவில்லை. முக்கியமான கட்டத்தில் இந்திய அணிக்கு ரன்கள் அடித்துக் கொடுத்து முக்கிய பங்காற்றியுள்ளார்.  ஆகவே, அவர் இந்திய அணியின் ஒரு அங்கம் என்று நினைக்கிறேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

    கிரிக்கெட் வாழ்க்கையில் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்யும். அஸ்வின் நீண்டகாலமாக இந்திய அணியில் இடம் பிடித்து  சிறப்பான ஆட்டத்தை சீராக வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணி கலவையில் அவர் முக்கியமானவர்’’ என்றார்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரோகித்சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி தொடக்க வீரர்களாக முக்கிய சாதனைகளை படைத்துள்ளனர்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க ஜோடி 317 ரன் குவித்தது. ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் இணைந்து முதல் விக்கெட்டக்கு இந்த ரன்னை எடுத்தது. இதன் மூலம் இருவரும் புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் அடித்தது இதுவே முதல் முறையாகும். தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டிலேயே ரோகித் சர்மா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    சொந்த மண்ணில் தொடக்க வீரராக களமிறங்கி முதல் போட்டியிலேயே இருவரும் சதம் அடித்து அசத்தி உள்ளனர்.

    இது தவிர தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு ஷேவாக்-டிராவிட் ஜோடி சேப்பாக்கத்தில் 2008-ம் ஆண்டு 2-வது விக்கெட்டுக்கு 268 ரன் குவித்ததே சாதனையாகும். 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை ரோகித்சர்மா-அகர்வால் ஜோடி முறியடித்தன.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் எடுத்த டாப் 10 இந்திய ஜோடிகள் வருமாறு:-

    டாப் 10 இந்திய ஜோடிகள்

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், 300 ரன்களுக்கு மேல் சேர்த்த 3-வது இந்திய தொடக்க ஜோடி என்ற சாதனையை ரோஹித்-அகர்வால் ஜோடி வசமாக்கியுள்ளது.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களம் இறங்கினார். மயங்க் அகர்வால் இந்திய மண்ணில் தொடக்க வீரராக முதல் முறையாக ஆடினார். இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 4-வது சதத்தை பதிவு செய்தார்.

    இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்ட முடிவில், விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது. 

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ரோகித் சர்மாவும், அகர்வாலும் தொடர்ந்து ஆடினார்கள். அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 204 பந்துகளை சந்தித்து 100 ரன்னை தொட்டார். அணியின் ஸ்கோர் 317 ஆக இருக்கும் போது, ரோகித் சர்மா 176 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தொடக்க ஜோடி 300 ரன்களுக்கு மேல் எடுப்பது இது மூன்றாவது முறையாகும். 1956 ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வினோ மன்கட் மற்றும் பன்கஜ் ராய் தொடக்க ஜோடி 413 ரன்கள் குவித்தது. அதன் பின்பு, 50 வருடங்கள் கழித்து  2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வீரேந்திர சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் தொடக்க ஜோடி 410 ரன்கள் எடுத்தது. 

    13 ஆண்டுகள் கழித்து தற்போது ரோகித் - அகர்வால் தொடக்க ஜோடி 300 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளது. மயங்க் அகர்வால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக சதமடித்த 86-வது வீரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக தடகள போட்டியின் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹேலோவே முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.
    தோகா:

    17-வது உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது.

    ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது.

    இதில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹோலோவே முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். 22 வயதான அவர் பந்தய தூரத்தை 13.10 வினாடியில் கடந்தார். ஏற்கனவே 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி இருந்தனர்.

    செர்ஜி கபேன்கோவ் 13.15 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மார்ட்டினாட் 13.18 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீரர் பாவல் தங்கம் வென்றார். அவர் 80.50 மீட்டர் தூரம் எறிந்தார். குயின்டன் பிகாட் (பிரான்ஸ்) 78.19 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளியும், பென்ஸ் (அங்கேரி) 78.18 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும் பெற்றனர்.

    பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை டினா ஆசர்- சுமித் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 21.88 வினாடியில் கடந்தார். அவர் ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

    அமெரிக்காவை சேர்ந்த பிரிட்டேனி பிரவுன் 22.22 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், முஜின்கா (சுவிட்சர்லாந்து) 22.51 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர். 6-வது நாள் போட்டி முடிவில் 8 தங்கம், 8 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 18 பதக்கத்துடன் அமெரிக்கா முதல் இடத்தை இருக்கிறது.

    இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
    கராச்சி:

    பாகிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி அங்கு சென்றுள்ளது.

    மூன்று ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டம் மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் பாகிஸ்தான் 67 ரன்னில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன் குவித்தது. தொடக்க வீரர் குணதிலகா சதம் அடித்தார். அவர் 134 பந்தில் 133 ரன்னும் (16 பவுண்டரி, 1 சிக்சர்), ‌ஷனகா 24 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    முகமது அமீர் 3 விக்கெட்டும், உஸ்மான் ஹன்வாரி, வகாப் ரியாஸ், சதாப்கான், முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பகர்ஜமான் 76 ரன்னும், ஆபித் அலி 67 பந்தில் 74 ரன்னும் (10 பவுண்டரி), ஹாரிஸ் சோகையல் 56 ரன்னும் எடுத்தனர். பிரதிப் 2 விக்கெட்டும், டி.சில்வா, ஜெயசூர்யா தலா 1 விக்கெட் டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் ஆட்டம் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 5-ந்தேதி லாகூரில் நடக்கிறது.
    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மயங் அகர்வால் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.

    ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களம் இறங்கினார். மயங்க் அகர்வால் இந்திய மண்ணில் தொடக்க வீரராக முதல் முறையாக ஆடினார்.

    இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 4-வது சதத்தை பதிவு செய்தார்.

    இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அப்போது ரோகித் சர்மா 115 ரன்னும், மயங்க் அகர்வால் 84 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ரோகித்சர்மாவும், அகர்வாலும் தொடர்ந்து ஆடினார்கள்.

    அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 204 பந்துகளை சந்தித்து 100 ரன்னை தொட்டார். இதில் 13 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

    28 வயதான மயங்க் அகர்வால் டெஸ்டில் தனது முதல் சதத்தை அடித்தார். 5-வது டெஸ்டில் அவர் முதல் செஞ்சூரியை பதிவு செய்தார். இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி டெஸ்டில் 77 ரன் எடுத்ததே அவரது அதிகபட்ச ரன்னாக இருந்தது.

    மறுமுனையில் இருந்த ரோகித் சர்மா தொடர்ந்து அபாரமாக விளையாடினார். இதனால் இந்திய அணியின் ரன் குவிப்பு அதிகமானது. 72.2 ஓவரில் இந்தியா 250 ரன்னை தொட்டது.

    ரோகித் சர்மா 222 பந்துகளை சந்தித்து 150 ரன்னை எடுத்தார். இதில் 18 பவுண்டர்களும், 5 சிக்சர்களும் அடங்கும்.

    இருவரது அபாரமான ஆட்டத்தால் இந்தியா ரன்களை குவித்தது. உணவு இடைவெளி வரை இந்திய அணி ஒரு  விக்கெட்டை இழந்து 324 ரன்களை எடுத்து உள்ளது. ரோகித் சர்மா 176 (244) 23 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் எடுத்து வெளியேறினார். மயங் அகர்வால் 131 ரன்களுடனும், புஜாரா 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
    நான் தற்போது திருமணம் பற்றி சிந்திக்கவில்லை, ஒலிம்பிக்கில் நாட்டுக்காக தங்க பதக்கம் வெல்வதே என்னுடைய குறிக்கோள் என்று பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறினார்.
    மைசூரு :

    உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா கடந்த மாதம்(செப்டம்பர்) 29-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. தசரா விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இளைஞர் தசரா விழா, மைசூரு மகாராஜா கல்லூரியில் தொடங்கியது. இதில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொண்டு இளைஞர் தசரா விழாவை தொடங்கி வைத்தார். விழா முடிவில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கன்னடத்தில் பேசி அங்கிருந்தவர்களை வியக்க வைத்தார். பேட்டியின்போது பி.வி.சிந்து கூறியதாவது:-

    அனைவருக்கும் வணக்கம். தசரா விழாவில் நான் பங்கேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் மைசூருவுக்கு வருவது இதுதான் முதல் முறை. மைசூரு நகரம் மிகவும் தூய்மையான நகரம் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    ஆனால் நேரில் பார்க்கும்போது தான் தெரிகிறது மைசூரு எவ்வளவு அழகான நகரம் என்று. மைசூரு நகரை பார்க்க, பார்க்க ஆனந்தமாகவும், வியப்பாகவும் உள்ளது. மைசூருவில் தான் துர்கா மாதா குடிகொண்டிருக்கிறார். இங்குள்ள அனைவரும் என்னை அடையாளம் கண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சத்தியமாக நான் இதுவரை என்னுடைய திருமணம் பற்றி தற்போது சிந்திக்கவில்லை. ஏனெனில் ஒலிம்பிக்கில் நம் நாட்டுக்காக தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள்.

    பி.வி.சிந்து

    இந்திய அளவில் நடத்தப்படும் “கேலோ இந்தியா“ விளையாட்டு போட்டிகளின் மூலம் ஏராளமான திறமைகளுடன் கிராமப்புற மாணவ-மாணவிகள் சிறந்து விளங்குவது கண்டறியப்படுகிறது. அவ்வாறு கண்டறியப்படும் மாணவ- மாணவிகளுக்கு முறையான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் உலக அளவில் சாதிப்பார்கள். இதற்காகத்தான் “கேலோ இந்தியா“ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகளிடையே உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும். மாணவ-மாணவிகளை அவர்களுடைய பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்தான் தங்களுடைய குழந்தைகளை விளையாட்டு போட்டிகளில் சாதிக்க உற்சாகப்படுத்த வேண்டும். அப்போதுதான் கிராமப்புற மாணவ- மாணவிகளின் திறமைகள் வெளியே தெரியவரும்.

    இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.
    12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.
    பஞ்ச்குலா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு பஞ்ச்குலாவில் நடந்த 118-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 59-36 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது. பெங்களூரு நட்சத்திர வீரர் பவான் செராவத் 38 முறை ரைடுக்கு சென்று அதில் 39 புள்ளிகளை குவித்து வியப்பூட்டினார். ஒரு ஆட்டத்தில் அதிக புள்ளிகள் சேர்த்த வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இதற்கு முன்பு பாட்னா வீரர் பர்தீப் நார்வல் ஒரு ஆட்டத்தில் ரைடு மூலம் 34 புள்ளி எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை பவான் செராவத் தகர்த்தார்.

    11-வது வெற்றியை ருசித்த பெங்களூரு அணி இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 30-26 என்ற புள்ளி கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்சை தோற்கடித்து 11-வது வெற்றியுடன் பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. இதுவரை 5 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு உ.பி.யோத்தா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையே போட்டி நிலவுகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-புனேரி பால்டன் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    உலக தடகள போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னுராணி 8-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
    தோகா:

    17-வது உலக தடகள சாம்பியன்‌ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் 12 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர் 66.56 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சீன வீராங்கனைகள் லி ‌ஷியிங் (65.88 மீட்டர்), லூ ஹூய் ஹூய் (65.44 மீட்டர்) முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை பெற்றனர்.

    இந்திய வீராங்கனை அன்னு ராணி 61.12 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். தகுதி சுற்றில் 62.43 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த அன்னுராணி அதை கூட எட்ட முடியாமல் சொதப்பினார்.

    இது குறித்து அன்னுராணி கூறுகையில், ‘சில தொழில்நுட்ப தவறுகள் நடந்து விட்டது. அதை திருத்திக் கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவேன். நான் இன்னும் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறவில்லை. இது போன்ற தவறுகளை சரி செய்து ஒலிம்பிக் போட்டிக்குரிய தகுதி இலக்கான 64 மீட்டர் தூரத்தை அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.’ என்றார்.

    ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீரர் நோவா லைலெஸ் 19.83 வினாடியில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். கனடாவின் ஆந்த்ரே டி கிராஸ் (19.95 வினாடி) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    22 வயதான நோவா லைலெஸ் கூறுகையில், ‘எனது முதலாவது உலக சாம்பியன்‌ஷிப் போட்டியிலேயே தங்கம் வென்று சாதித்து இருக்கிறேன். என்னை புதிய உசேன் போல்ட் (ஜமைக்கா தடகள ஜாம்பவான்) என்று சொல்லாதீர்கள். நான் நானாவே இருந்து உங்களை மகிழ்விக்க விரும்புகிறேன்’ என்றார்.

    ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயத்தின் முதல் ரவுண்டில் இந்திய வீரர் அவினா‌‌ஷ் சபில் 8 நிமிடம் 25.23 வினாடிகளில் இலக்கை கடந்து தனது பிரிவில் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் அவர் இறுதி சுற்று வாய்ப்பை இழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அவர் ஓடும் போது சில வீரர்கள் அவரை மறிக்கும் வகையில் இடையூறு ஏற்படுத்தியதாகவும், இல்லாவிட்டால் அவர் இன்னும் வேகமாக இலக்கை கடந்திருப்பார் என்றும் இந்திய தடகள சம்மேளனம் போட்டி அமைப்பாளர்களிடம் முறையிட்டது. இதையடுத்து வீடியோ காட்சிகளை ஆராய்ந்த போட்டி அமைப்பாளர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவினாசை இறுதிப்போட்டி பட்டியலில் சேர்த்து அறிவித்தனர். இந்திய தடகள சம்மேளனத்தின் திட்ட கமி‌‌ஷன் சேர்மன் லலித் பனோட் கூறுகையில், ‘அவினா‌‌ஷ் விவகாரத்தில் அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளோம். அதனால் இப்போது அவினா‌‌ஷ் இதன் இறுதிப்போட்டியில் ஓட உள்ளார். தகுதி சுற்றில் அவர் பிடித்த நிலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அவர் 16-வது வீரராக இறுதி சுற்றில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்’ என்றார். 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் இறுதி சுற்று நாளை நடக்கிறது.
    விஜய் ஹசாரே டிராபியில் கேஎல் ராகுல் 81 ரன்னும், மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 142 ரன்களும் விளாச கர்நாடகா 79 ரன்னில் வெற்றி பெற்றது.
    விஜய் ஹசாரே டிராபியில் பெங்களூருவில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் கர்நாடகா - சத்தீஸ்கர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சத்தீஸ்கர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி கர்நாடக அணியின் கேஎல் ராகுல், படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். படிக்கல் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கருண் நாயர் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

    3-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் கேப்டன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேஎல் ராகுல் 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 118 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 142 ரன்கள் விளாச கர்நாடகா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது.

    பின்னர் 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சத்தீஸ்கர் அணி களம் இறங்கியது. அந்த அணி 44.4 ஓவரில் 206 ரன்களில் சுருண்டது. இதனால் கர்நாடகா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கேஎல் ராகுல் மோசமான ஆட்டத்தின் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது விஜய் ஹசாரே டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
    தனது ஜெர்சியை உடலில் பச்சைக் குத்திய ரசிகரை நேரில் அழைத்து கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விராட் கோலி.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. தேனீர் இடைவேளைக்குப் பிறகு முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.

    அப்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெறித்தனமாக ரசிகரை ஒருவரை சந்தித்தார். விராட் கோலி அவரை சந்திக்க காரணம், விராட் கோலி டெஸ்ட் போட்டியில் அணியும் ஜெர்சியை உடல் முழுவதும் பச்சைக் குத்தியிருந்ததுதான்.

    விராட் கோலி

    தனது மீது வெறித்தனமாக அன்பு வைத்திருக்கும் அந்த ரசிகரை நேரில் அழைத்து வாழ்த்தியதுடன், கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார் விராட் கோலி.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரின் 4-வது போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியை சந்தித்துள்ளது.
    இந்திய பெண்கள் ஹாக்கி அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட லீக் தொடரில் விளையாடி வருகிறது. முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. 3-வது போட்டி கோல்கள் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் 4-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்தது. இந்திய வீராங்கனை நேகா கோயல் அந்த ஒரு கோலை அடித்தார்.
    ×