search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிஷ் பாண்டே"

    ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மயாங்க் அகர்வால், கருண் நாயர் ஏமாற்றம் அளிக்க மணிஷ் பாண்டே, கோபால், ஷரத் ஆட்டத்தில் கர்நாடகா 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற கார்நாடகா பேட்டிங் தேர்வு செய்தது.

    சவுராஷ்டிராவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்க வீரர்கள் சமர்த் (0), மயாங்க் அகர்வால் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த சித்தார்த் 12 ரன்னிலும், கருண் நாயர் 9 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    இதனால் கர்நாடகா 30 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் மணிஷ் பாண்டே உடன் ஷ்ரேயாஸ் கோபால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கர்நாடகாவை சரிவில் இருந்து மீட்டது.

    அணியின் ஸ்கோர் 136 ரன்னாக இருக்கும்போது மணிஷ் பாண்டே 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் கோபால் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    விக்கெட் கீப்பர் ஷரத் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கர்நாடகா முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. ஷரத் 74 ரன்களுடனும், மோர் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    சவுராஷ்டிரா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட் நான்கு விக்கெட்டுக்களும், சுழற்பந்து வீச்சாளர் கம்லேஷ் மக்வானா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் நடைபெற்ற 3-வது காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கார்நாடக அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பிஷ்னோய் 79 ரன்களும், கேப்டன் லாம்ரோர் 50 ரன்களும் அடித்தனர். கர்நாடக அணி சார்பில் மிதுன், கவுதம் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சில் விளையாடியது. ராஜஸ்தானின் துள்ளியமான பந்து வீச்சில் கர்நாடக பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினார்கள். ஆனால் 9-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் வினய் குமார் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் அடிக்க கர்நாடகா 263 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 39 ரன்கள் பின்தங்கிய நிலையில் ராஜஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. 2-வது இன்னிங்சிலும் ராஜஸ்தான் அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை. லாம்ரோர் 42 ரன்களும், பிஸ்ட் 44 ரன்களும் அடிக்க 222 ரன்னில் சுருண்டது.

    இதனால் ராஜஸ்தான் அணி 183 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கர்நாடகா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 18 ரன்னுடனும், ரோனித் மோர் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மோர் மேலும் 3 ரன்கள் எடுத்து 8 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் கேப்டன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இருவரும் அரைசதம் அடிக்க கர்நாடக அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் விஜய் சங்கரின் அபார ஆட்டத்தால் இந்தியா ஏ அணி அசத்தல் வெற்றி பெற்றது. #NZAvINDA
    இந்தியா ‘ஏ’ அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்த நிலையில் இன்று மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. ரூதர்போர்டு (70), செய்பெர்ட் (59), நீஷம் (79 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது.

    309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி 2-வது பேட்டிங் செய்தது. மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அகர்வால் 24 ரன்களிலும், ஷுப்மான் கில் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 54 பந்தில் 54 ரன்களும், மணிஷ் பாண்டே 36 பந்தில் 42 ரன்களும் சேர்த்தனர். விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 43 பந்தில் 47 ரன்கள் அடிக்க, ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் 80 பந்தில் 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ‘ஏ’ அணி 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஒருநாள் போட்டி டிசம்பர் 9-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 11-ந்தேதியும் நடக்கிறது.
    வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சால் கடும் நெருக்கடி கொடுத்தபோதிலும், தப்பிப்பிழைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. #INDvWI #dineshkarthik #krunalpandya
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    தவான் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இரண்டு விக்கெட்டுக்களையும் தாமஸ் வீழ்த்தினார். 16 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா தொடக்க பேட்ஸ்மேன்களை இழந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் தாமஸ், கீமோ பால், பிராத்வைட் பவுன்சர் பந்தால் கடும் நெருக்கடி கொடுத்தார்கள். வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் ரிஷப் பந்த் 1 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 16 ரன்னிலும் வெளியேறினார்கள். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் பிராத்வைட் வீழ்த்தினார்.

    இந்தியா 7.3 ஓவரில் 45 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 75 பந்தில் 65 ரன்கள் என்ற நெருக்கடி ஏற்பட்ட நிலையில் 5-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.

    12-வது ஓவரை பொல்லார்டு வீசினார். இந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார் தினேஷ் கார்த்திக். இதனால் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. கடைசி 8 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது.  இந்தியாவின் ஸ்கோர் 83 ரன்னாக இருக்கும் போது மணிஷ் பாண்டே 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 6-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக்வுடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்து இருவரும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 17.5 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 110 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திக் 31 ரன்னுடனும், குர்ணால் பாண்டியா 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். #INDvWI #dineshkarthik #krunalpandya 
    இந்திய அணியில் ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே உள்பட ஐந்து வீரர்கள் ஆப்கானிஸ்தான் போட்டியோடு வெளியேறினார்கள். #AsiaCup2018
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    ‘சூப்பர் 4’ சுற்றில் வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஐந்து மாற்றங்களை செய்தது.




    ரோகித் சர்மா, மணிஷ் பாண்டே, சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல், கலீல் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். இதில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கிய அரைசதம் அடித்தார். பரபரப்பான ஆட்டத்தில் போட்டி ‘டை’ ஆனது.

    இன்று நடைபெற்றும் வரும் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஐந்து பேரும் நீக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர்.

    இந்த தொடரில் இந்தியா இறுதிப் போட்டியோடு 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. கலீல் அகமது மட்டுமே ஹாங் காங் அணிக்கெதிராக இடம்பிடித்தார். மற்றவர்கள் ஒரு போட்டியோடு திருப்தியடைந்தனர்.
    புவனேஸ்வர் குமார் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் பாகிஸ்தானை 162 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா #INDvPAK #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா, பும்ரா சேர்க்கப்பட்டனர்.

    பாகிஸ்தான் அணியின் இமாம்-உல்-ஹக் பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரில் பாகிஸ்தான் இரண்டு ரன்கள் எடுத்தது. 2-வது ஓவரை பும்ரா வீசினார். பகர் சமான் இந்த ஓவரை சந்தித்தார். இந்த ஓவரில் பகர் சமான் ரன்ஏதும் அடிக்கவில்லை. இதனால் மெய்டன் ஓவராக அமைந்தது.

    3-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை முன்னால் வந்து அடிக்க முயன்றார் இமாம்-உல்-ஹக். பந்து பேட்டின் முனையில் உரசி டோனியிடம் தஞ்சம் புகுந்தது. இதனால் பாகிஸ்தான் இரண்டு ரன்களுக்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 2-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் களம் இறங்கினார். இந்த அடுத்த ஐந்து பந்துகளையும் தடுத்து ஆடினார். இதனால் புவனேஸ்வர் குமார் மெய்டனுடன் விக்கெட் வீழ்த்தினார்.

    5-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பகர் சமான் சாஹலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 3 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.



    3-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் உடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். 6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் சோயிப் மாலிக் ஒரு பவுண்டரி அடித்தார். 7-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஒவரில் பாபர் ஆசம் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 9-வது மற்றும் 20-வது ஓவரில் பாகிஸ்தான் பவுண்டரி ஏதும் அடிக்கவில்லை.

    பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேரம் செல்ல செல்ல சோயிப் மாலிக், பாபர் ஆசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் பாகிஸ்தான் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. 22-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பாபர் ஆசம் க்ளீன் போல்டானார். பாபர் ஆசம் 67 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சருடன் 43 ரன்கள் சேர்த்தார். அப்போது பாகிஸ்தான் 85 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் பாகிஸ்தான் விக்கெட்டுக்கள் வரிசையாக சரிய ஆரம்பித்தது. சர்பிராஸ் அகமது 6 ரன்னிலும், சோயிப் மாலிக் 47 ரன்னிலும் (ரன்அவுட்), ஆசிப் அலி 9 ரன்னிலும், சதாப் கான் 8 ரன்னிலும் வெளியேறினார். மூன்று விக்கெட்டுக்களையும் கேதர் ஜாதவ் வீழ்த்தினார்.

    பாகிஸ்தான் 121 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது. 8-வது விக்கெட்டுக்கு பஹீம் அஷ்ரப் உடன் முகமது அமிர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. 38.4 ஓவரில் பாகிஸ்தான் 150 ரன்னைக் கடந்தது.



    பஹீம் அஷ்ரப் 21 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பஹீம் - முகமது அமிர் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஹசன் அலி 1 ரன் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக உஸ்மான் கான் களம் இறங்கினார். இவர் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுக்க பாகிஸ்தான் 43.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 162 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார், கேதர் ஜாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களும், பும்ரா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்ய இருக்கிறது.
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான 4-வது மற்றும் 6-வது இடத்தை பறிக்க மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தீராத பசியில் உள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியா இன்னும் உலகக் கோப்பைக்கான அணியை கண்டறியவில்லை. குறிப்பாக 4, 5 மற்றும் 6-வது இடத்திற்கு சரியான நபரை அடையாளம் காணவில்லை. ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரெய்னா, லோகேஷ் ராகுல், கருண் நாயர், அம்பதி ராயுடு ஆகியோர் இருந்த போதிலும் உறுதியாக இவர்தான் இந்த இடத்தில் விளையாடுவார் என்று குறிப்பிட முடியவில்லை. விக்கெட் கீப்பர் எம்எஸ் டோனி மட்டும் இந்த வரிசையில் ஏதாவது ஒன்றில் விளையாடுவார்.

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, மணிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விளையாடுவது குறித்து நேற்று ரோகித் சர்மா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மிடில் ஆர்டரில் 4-வது மற்றும் 6-வது இடத்தை பறிக்க வீரர்கள் தீராத பசியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

    மேலும் இதுகுறித்து கூறுகையில் ‘‘4-வது மற்றும் 6-வது இடத்திற்கான வீரர்களை இன்னும் கண்டறியவில்லை. இதுகுறித்து நாம் எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், இந்த இடத்திற்கு விளையாட ஏராளமான வீரர்கள் உள்ளனர்.



    அந்த இடங்களுக்கு சரியான வீரர்களை கண்டறிவதற்கான அனைத்து வேலைகளிலும் நாங்கள் இறங்கியுள்ளோம். வீரர்கள் அந்த இடத்தில் களம் இறங்கி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்களது இடத்தை நிலையாக தக்கவைத்துக் கொள்ள விரும்புவார்கள்.

    இந்த தொடரில் 3, 4 மற்றும் 6-வது இடத்தை பறிக்க முயல்வார்கள். அனைத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் கண்களும் அந்த இடங்கள்தான் உள்ளது.

    அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்த அளவிற்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்க விரும்புகிறோம். ஒரு அணியான நாங்கள் இந்த திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் களம் இறங்கி, நிலையான இடத்த பிடிக்க வேண்டும் என வீரர்கள் தீராத பசியில் உள்ளனர் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஹாங் காங்கை எதிர்கொள்கிறது. #AsiaCup2018 #INDvHK
    இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை அணி வங்காள தேசத்திடம் 137 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. நேற்று நடந்த 2-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங் காங்கை வீழ்த்தியது.

    3-வது ‘லீக்’ ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இலங்கை அணிக்கு இருக்கிறது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்திடம் தோற்றதால் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் இலங்கை வீரர்கள் வெறறிக்காக போராடுவார்கள். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்து வெளயேற்றும் ஆர்வத்துடன் உள்ளது.

    ஆசிய கோப்பை போட்டியின் 4-வது ‘லீக்’ ஆட்டம் துபாயில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் மோதுகின்றன.



    கேப்டன் விராட் கோலிக்கு ஆசிய கோப்பையில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 3 ஒருநாள் தொடரை கைப்பற்றி இருக்கிறார். இதனால் இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற முடியும் என்ற நம்பிக்கையோடு உள்ளது.

    கத்துக் குட்டியான ஹாங் காங்கை இந்திய அணி எளிதில் வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி இடத்தில் இடம் பெற போவது யார்? என்ற ஆர்வத்துடன் எதிரநோக்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் அம்பதி ராயுடு கோலியின் இடமான 3-வது வரிசையில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
    ×