என் மலர்
விளையாட்டு
கராச்சியில் நடைபெற்று வரும் 3-வது நாள் கிரிக்கெட் போட்டியில் குணதிலகாவின் சதத்தால் பாகிஸ்தானுக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. குணதிலகா, பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும் குணதிலகா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 134 பந்தில் 133 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் பனுகா 36 ரன்களும், ஷனகா 24 பந்தில் 43 ரன்களும் அடிக்க இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
பெர்னாண்டோ நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் திரிமானே களம் இறங்கினார். இவர் குணதிலகா உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும் குணதிலகா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 134 பந்தில் 133 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் பனுகா 36 ரன்களும், ஷனகா 24 பந்தில் 43 ரன்களும் அடிக்க இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
இரட்டை ஆதாயம் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கபில் தேவ்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி ஒருவர் கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளில் இருக்கக்கூடாது.
சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமனம் செய்த கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியினர் இரட்டை ஆதாய பதவிகளில் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அதுகுறித்து பதில் அளிக்கும்படி மூன்று பேருக்கும் கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாந்தா ரங்கசாமி, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் இயக்குனர் பதவி இரண்டையும் நேற்று ராஜினாமா செய்து அதற்குரிய கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மூன்று பேர் கொண்ட தற்காலிக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (சிஏசி) தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கிரிக்கெட் ஆலோசனைக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமே செய்யப்பட்ட நியமனம் என்பதால் அந்தக் குழு கலைக்கப்படுகிறது என நிர்வாகக் குழுவிலிருந்து (COA) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் மோதல் கதைகளை தவிர்த்து இருக்கலாம் என்று கிரிக்கெட் வட்டாரம் கூறியுள்ளது.

இந்திய கிரிகெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும் வீரருக்கு இருக்க வேண்டிய திறமை குறித்து விவரித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்படினத்தில் இன்று தொடங்கியது. தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
ரோகித் சர்மாவை நாங்கள் சேவாக்கை போன்று பார்க்கிறோம் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், தொடக்க பேட்ஸ்மேனுக்கு என்னென்ன வேண்டும் என்பதை சச்சின் தெண்டுல்கர் விவரித்துள்ளார்.
பாரம்பரிய கிரிக்கெட் போட்டியான டெஸ்டில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும் வீரர்கள் குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘தொடக்க வீரராக களம் இறங்கி சாதிப்பது முற்றிலும் மனநிலையை (Mindset) பொறுத்தது. யாராவது தொடக்க வீரராக களம் இறங்கி விளையாட விரும்பினால், அப்புறம் அவருக்கு மாறுபட்ட வகையிலான மனநிலை இருக்க வேண்டியது அவசியம்.
சேவாக் தொடக்க பேட்ஸ்மேனாக வெற்றி கண்டதற்கு, அவருக்கு வெவ்வெறு மனநிலை இருந்தது. ஒருநாள் போட்டி அல்லது டெஸ்ட் போட்டியில் அப்படிபட்ட மனநிலையில்தான் விளையாடினார். இயல்பாகவே அவரது ஆட்டத்தில் ஆக்ரோசம் இருந்தது.
ஏராளமான வீரர்கள் தொடக்க இடத்தில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினார்கள். ஆனால், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை சிலருக்குதான் கிடைத்தது. அந்த திறன் சேவாக்கிடம் இருந்தது. தொடக்க வீரர் இடம் அவருக்கு சரியாக பொருந்தியது. ரோகித் சர்மா எப்படி விளையாடுகிறார் என்பதை அறிய சற்று காத்திருக்க வேண்டும்.
சேவாக் முதன்முறையாக இங்கிலாந்து தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும்போது சதம் அடித்தார். அது அவரை வெற்றியாளராக கொண்டு வந்தது, என்றாலும் சில நேரங்களில் அவர் கடுமையான சோதனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. ஆகவே, இது நம்பர் மட்டுமல்ல. முக்கியமான விஷயம் என்னவென்றால், ரன் போர்டில் நீங்கள் என்ன கொண்டு வருகிறீர்கள் என்பதுதான்.
எந்வொரு இடத்தில் களம் இறங்கினாலும் அவர்களுடைய பாதுகாப்பு தேவை. வீரர்களுக்கு ஏற்றம் இறக்கம் இருக்கும். ஆனால், நிர்வாகம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று தெரிந்தால், அவர்கள் மாறுபட்ட விஷயங்களை சிந்திப்பார்கள்’’ என்றார்.

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான ஆண்டி பிளவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என செய்திகள் உலா வருகின்றன.
ஐபிஎல் டி20 லீக்கின் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் நடக்கிறது. அதற்கு முன் வீரர்களை மாற்றுவது, பயிற்சியாளர்களை மாற்றுவது போன்ற பணியில் 8 அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2019 சீசனில் 7-வது இடத்தை பிடித்தது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக பேடி அப்டன் பணியாற்றினார். அவரால் ராஜஸ்தான் அணியை பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் தலைமை பயிற்சியாளரை மாற்ற அந்த அணி முடிவு செய்துள்ளது.
புது பயிற்சியாளராக யாரை நியமிக்கலாம் என அணி நிர்வாகம் யோசித்து வரும் நிலையில், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆண்டி பிளவர் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆண்டி பிளவர் இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராகவும், தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவர் தலைமை பயிற்சியாளராக இருந்தபோதுதான், இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நம்பர் ஒன் வீரராக நோவக் ஜோகோவிச் ஜப்பானைச் சேர்ந்த கோ சொயேடாவை எதிர்கொண்டார்.
இதில் ஜோகோவிச் 6-3, 7-5 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸில் தோள்பட்டை காயத்தால் வெளியேறிய ஜோகோவிச், காயம் குறித்து மிகப்பெரிய அளவில் பயப்பட தேவையில்லை என்றார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று வருடத்திற்குப் பிறகு உமர் அக்மல் இடம் பிடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. அதன்பின் வருகிற 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உமர் அக்மல், அகமது ஷேசாத் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
உமர் அக்மல் கடைசியாக 2016-ம் ஆண்டு டி20 அணியில் விளையாடினார். அதன்பின் தற்போது மூன்று வருடங்கள் கழித்து அணியில் இடம் பிடித்துள்ளார். தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார். மேலும் வீரர்கள் நன்னடத்தையை மீறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
அகமது ஷேசாத் கடந்து ஆண்டு ஜூன் மாதம் கடைசியாக அணியில் இடம் பிடித்திருந்தார். ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் சிக்கிய அவருக்கு 16 மாதங்கள் இடம் கிடைக்கவில்லை. தற்போது அணியில் இடம் பிடித்துள்ளார். தொடக்க பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கிய முதல்நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்ஆப்பிரிக்காவின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களால் இருவரையும் அவுட்டாக்க முடியவில்லை. ரோகித் சர்மா 84 பந்தில் அரைசதம் அடித்தார்.

ரோகித் சர்மா 154 பந்தில் சதம் அடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அத்துடன் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளை முடிந்த பின்பும், மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவு பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். ரோகித் சர்மா 115 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்தியா மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. மயாங்க் அகர்வால் 114 பந்தில் அரைசதம் அடித்தார்.

ரோகித் சர்மா 154 பந்தில் சதம் அடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அத்துடன் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளை முடிந்த பின்பும், மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவு பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். ரோகித் சர்மா 115 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
உலக தடகள போட்டியில் அமெரிக்கா ஒரே நாளில் 200 மீட்டர் ஓட்டம் உள்பட மூன்று பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளது.
17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹா வில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு நடந்தது. இதில் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 19.83 வினாடியில் கடந்தார்.
கனடாவை சேர்ந்த ஆந்த்ரே டி கிராஸ் 19.95 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், ஈக்வடார் வீரர் அரிக்ஸ் குயின்னஸ் 19.98 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த ஆடம் ஜெமிலி 4-வது இடத்தையே பிடித்தார்.
ஆண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதில் அமெரிக்க வீரர் சாம் கெனட்ரிக்ஸ் தங்கம் வென்றார்.
சுவீடனை சேர்ந்த டுபிளைன்டஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். இருவரும் 5.97 மீட்டர் உயரம் தாண்டினர். குறைந்த வாய்ப்பில் பெற்றதன் மூலம் கென்டிரிக்ஸ் முதல் இடத்தை பிடித்தார். இருவரும் 6.02 மீட்டர் உயரம் தாண்ட முயன்ற முயற்சி தோல்வியில் முடிந்தது. போலந்தை சேர்ந்த லிசக் 5.87 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் பெற்றார்.
800 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் டோனவின் பிரேசியா தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 42.34 வினாடியில் கடந்தார். அமெல்துகா (போஸ்னியா) 1 நிமிடம் 43.47 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், பெர்குசன் (கென்யா) 1 நிமிடம் 43.82 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
ஒரேநாளில் அமெரிக்கா 3 தங்கம் வென்று முத்திரை பதித்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னுராய் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். நேற்று இரவு நடந்த இந்தப்போட்டியில் அவர் 61.12 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடத்தை பிடித்தார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த செக்சேட் லீ பார்பர் 66.56 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். சீனாவை சேர்ந்த ஷிங்லியூ 65.88 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடத்தையும், மற்றொரு சீன வீராங்கனை ஹிகி லியு 65.49 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும் பெற்றனர்.
ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் அவினாஸ் சாப்ளே தகுதி பெற்றார்.
5-வது நாள் போட்டி முடிவில் அமெரிக்கா 7 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 16 பதக்கத்துடன் முதல் இடத்தில் உள்ளது.
சீனா 2 தங்கம், உள்பட 8 பதக்கத்துடன் இரண்டாவது இடத்திலும், ஜமைக்கா 2 தங்கம் உள்பட 4 பதக்கத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கியதால், அவர் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இதேபோல் மறுமுனையில் ஆடிய மயங்க் அகர்வாலும் பொறுப்புடன் விளையாடி சதத்தை நெருங்கினார்.
மதிய நிலவரப்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 190 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, பந்துகளை பறக்கவிட்டார். 84 பந்துகளில் அரை சதம் கடந்த ரோகித், தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

தேனீர் இடைவேளைக்குப் பிறகு சதம் அடித்து அசத்தினார் ரோகித். 154 பந்துகளில் 10 பவண்டரி, 4 சிக்சருடன் இந்த இலக்கை அவர் எட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்ததால் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதேபோல் மறுமுனையில் ஆடிய மயங்க் அகர்வாலும் பொறுப்புடன் விளையாடி சதத்தை நெருங்கினார்.
மதிய நிலவரப்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 190 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியைப் பொருத்தவரை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறக்கப்படாத அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் நீக்கப்பட்டு விருத்திமான் சகா சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, கோலி, ரகானே, ஹனுமா விகாரி, சகா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.
தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ராம், டீன் எல்கர், தியூனிஸ் டி புரூயின், டு பிளசிஸ், டெம்பா பவுமா, குயின்டன் டி காக், வெரோன் பிலாண்டர், செனரன் முத்துசாமி, கேஷவ் மகராஜ், ரபாடா, டேன் பீட்.

தென் ஆப்பிடிக்க அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் செனரன் முத்துசாமி அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இடதுகை பந்துவீச்சாளரான இவர், 69 முதல் தர போட்டிகளில் விளையாடி, 129 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 7 சதம் அடித்துள்ளார்.

இந்திய அணி: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, கோலி, ரகானே, ஹனுமா விகாரி, சகா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.
தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ராம், டீன் எல்கர், தியூனிஸ் டி புரூயின், டு பிளசிஸ், டெம்பா பவுமா, குயின்டன் டி காக், வெரோன் பிலாண்டர், செனரன் முத்துசாமி, கேஷவ் மகராஜ், ரபாடா, டேன் பீட்.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான தமிழக கபடி அணிகள் தேர்வு சென்னையில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
சென்னை:
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமியருக்கான தமிழக கபடி அணிகள் தேர்வு சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதில் சிறுவர்களுக்கான தேர்வு வருகிற 5-ந் தேதியும், சிறுமிகளுக்கான தேர்வு வருகிற 6-ந் தேதியும் காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பிரிவில் பங்கேற்பவர்கள் 1-1-2003 அன்றோ அதற்கு பின்போ பிறந்து இருக்க வேண்டும். உடல் எடை 56 கிலோவுக்கு கீழ் இருக்க வேண்டும். 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் பிரிவில் பங்கேற்பவர்கள் 1-1-1999 அன்றோ அதற்கு பின்போ பிறந்து இருக்க வேண்டும்.
சிறுவர்கள் 75 கிலோவுக்கு கீழும், சிறுமிகள் 70 கிலோவுக்கு கீழும் இருக்க வேண்டும். இந்த தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் தேவையான வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச்செயலாளர் ஏ.ஷபியுல்லா தெரிவித்துள்ளார்.

உலக தடகள போட்டியில் பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ரஷிய வீராங்கனை மரியா லசிட்ஸ்கேனி ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தோகா:
17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ஹோல்ம் 47.42 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை மீண்டும் தனதாக்கினார். அவர் கடந்த 2017-ம் ஆண்டு உலக போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். அமெரிக்க வீரர் ராய் பெஞ்சமின் 47.66 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், கத்தார் வீரர் அப்டெர்ராக்மேன் சம்பா 48.03 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எத்தியோப்பியா வீரர் முக்தார் எட்ரிஸ் 12 நிமிடம் 58.85 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தொடர்ச்சியாக 2-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு எத்தியோப்பியா வீரர் செலிமோன் பார்கா 12 நிமிடம் 59.70 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், கனடா வீரர் முகமது அகமது 13 நிமிடம் 01.11 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
வட்டு எறிதலில் சுவீடன் வீரர் டேனியல் ஸ்டா 67.59 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். ஜமைக்கா வீரர் பெட்ரிக் டாசெஸ் 66.94 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், ஆஸ்திரியா வீரர் லூகாஸ் வெய்ஷாய்டின்ஜெர் 66.82 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.
பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ரஷியாவை சேர்ந்த மரியா லசிட்ஸ்கேனி, உக்ரைன் வீராங்கனை யரோஸ்லாவா மஹூசிக் ஆகியோர் தலா 2.04 மீட்டர் உயரம் தாண்டினார்கள். ஆனால் ரஷிய வீராங்கனை மரியா தனது முதல் முயற்சியிலேயே அந்த இலக்கை தாண்டியதால் அவர் தங்கப்பதக்கத்தை தனதாக்கினர். இதன் மூலம் உலக போட்டியில் தொடர்ச்சியாக 3 முறை (2015, 2017, 2019) தங்கம் வென்ற முதல் உயரம் தாண்டுதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக ரஷிய தடகள சம்மேளனத்தை, சர்வதேச தடகள சம்மேளனம் தடை செய்யப்பட்டு இருப்பதால் 26 வயதான மரியா லசிட்ஸ்கேனி இந்த போட்டியில் பொதுவான வீராங்கனைகள் பட்டியலில் பங்கேற்றார். யுரோஸ்வாலா மஹூசிக் தனது 3-வது முயற்சியில் அந்த உயரத்தை எட்டியதால் வெள்ளிப்பதக்கம் வென்றார். அமெரிக்க வீராங்கனை வஸ்தி குன்னிங்ஹாம் 2 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் பெற்றார்.
800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உகாண்டா வீராங்கனை ஹலிமாக் நகாயி 1 நிமிடம் 58.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றார். அமெரிக்க வீராங்கனைகள் ராவ்னி ரோஜர்ஸ் (1:58.18 வினாடி) வெள்ளிப்பதக்கமும், அஜீ வில்சன் (1:58.84 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.