search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது அமிர்"

    பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி தொடங்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    10 அணிகளும் கடந்த மாதம் 24-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட முதல்கட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தான் அணியில் அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



    உலகக்கோப்பைக்கான அணியில் வருகின்ற 23-ந்தேதிக்குள் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததால் முகமது அமிருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அபிட் அலி, ஜுனைத் கான், பர்ஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சர்பராஸ் அகமது, 2. பகர் ஜமான், 3. இமாம்-உல்-ஹக், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. முகமது ஹபீஸ், 7. ஆசிப் அலி, 8. சதாப் கான், 9. இமாத் வாசிம், 10. ஹரிஸ் சோஹைல், 11. ஹசன் அலி, 12. ஷஹீன் அப்ரிடி, 13. முகமது அமிர், 14. வஹாப் ரியாஸ், 15. முகமது ஹஸ்னைன்.
    உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடமில்லை. விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    இன்று இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் பாகிஸ்தான் அணி 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.



    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது விமர்சனத்திற்கு உள்ளாகி விளையாடாமல் இருந்து சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சர்பிராஸ் அகமது, 2. பகர் சமான், 3. இமாம்-உல்-ஹக் 4. பாபர் ஆசம், 5. சதாப் கான், 6. சோயிப் மாலிக், 7. பஹீம் அஷ்ரப், 8. ஷஹீன் அப்ரிடி, 9. ஹசன் அலி, 10. அபித் அலி, 11. முகமது ஹபீஸ், 12. இமாத் வாசிம், 13. ஜுனைத் கான், 14. முகமது ஹசைனைன், 15. ஹரிஸ் சோஹைல்.
    செஞ்சூரியனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 27 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று செஞ்சூரியனில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பாபர் ஆசம் (23), பகர் சமான் (17) ஓரளவு ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களும், கேப்டன் சோயிப் மாலிக் 18 ரன்களும் சேர்த்தனர்.

    சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 8 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்கள் விளாச, பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்ரிக்ஸ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஹென்ரிக்ஸ் (5), மலன் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டஸ்சன் 35 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.


    டஸ்சன்

    அதன்பின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 29 பந்தில் 55 ரன்கள் விளாசினாலும், தென்ஆப்பிரிக்காவால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் பாகிஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 3 விக்கெட்டும் சதாப் கான், பஹீம் அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் இருந்து 5 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.#SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நாளை தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இடம்பிடித்துள்ளார்.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்ததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான செஞ்சூரியன் மற்றும் கேப் டவுன் டெஸ்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் அமிருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஆசாத் ஷபிக், அசார் அலி, ஹாரிஸ் சோஹைல், முகமதுத அப்பாஸ், யாசிர் ஷா ஆகியோர் நீக்கப்பட்டு முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஹுசைன் தலாத், உஸ்மான் ஷின்வாரி மற்றும் இமாத் வாசிம் ஆகியோரின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 181 ரன்னில் சுருண்டது. பாபர் ஆசம் மட்டும் தாக்குப்பிடித்து 71 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் சேர்த்திருந்தது. பவுமா 38 ரன்களுடனும், ஸ்டெயின் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.



    ஸ்டெயின் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த பவுமா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த டி காக், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா முன்னணி வகிக்க போராடினார். அவர் 45 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 223 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர், ஷாஹீன் ஷா அப்ரிடி தலா நான்கு விக்கெட்டுக்களும், ஹசன் அலி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். 42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    தென்ஆப்ரிக்காவில் பயமின்றி தங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார்.. #SAvPAK
    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.

    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இரண்டில் (1998 மற்றும் 2007) மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 9 தோல்விகளையும், ஒரு டிராவையும் சந்தித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா தொடர் எளிதாக இருக்காது என்பதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் பயமின்றி விளையாட வேண்டும் என்று சக வீரர்களை அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘பவுன்ஸ், சீமிங் அதிக அளவில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும். எந்தவொரு வீரரும் பயனமின்றி, பெரிய இதயத்தோடு வெற்றிக்காக விளையாட வேண்டும்.



    ஷபிக் மற்றும் அசார் அலியிடம் இருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஸ்கோர் தேவை. அவர்கள் அதிக ஸ்கோர் அடிக்கக்கூடியவர்கள். ஆகவே, நாங்கள் அதிக ரன்கள் குவித்துவிட்டால், சிறந்த பந்து வீச்சை குழுவை கொண்ட நாங்கள் போட்டியில் வெற்றி பெறுவோம்.

    முகமது அமிர் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. அவர் டெஸ்ட் போட்டியில் முக்கியமான விக்கெட்டுக்களை எங்களுக்கு பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் அமிருக்கு இடமில்லை. ஹபீஸ்க்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாக முகமது அமிர் சிறப்பாக பந்து வீசவில்லை. குறிப்பாக ஆசிய கோப்பை தொடரில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் நீக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. பகர் சமான், 2. முகமது ஹபீஸ், 3. இமாம் உல் ஹக், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. ஆசிப் அலி, 7. ஹரிஸ் சோஹைல், 8. சர்பிராஸ் அஹமது, 9. சதாப் கான், 10. இமாத் வாசிம், 11. பஹீம் அஷ்ரப், 12. ஹசன் அலி, 13. ஜூனைத் கான், 14. ஷஹீன் அப்ரிடி, 15. உஸ்மான் கான்.
    பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது அமிர், தற்போது உள்ளூர் போட்டிக்கு திரும்பியுள்ளார். #MohammadAmir
    பாகிஸ்தான் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். கடந்த 2015-ம் ஆண்டு ஐந்தாண்டு தடைமுடிந்து மீண்டும் அணியில் இணைந்தார். அதில் இருந்து பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து விளையாடி வந்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அபாரமாக பந்து வீசினார்.

    2015-க்குப் பிறகு 73 போட்டிகளில் விளையாடியுள்ளார். 56 டெஸ்ட் விக்கெட்டுக்களும், 33 ஒருநாள் விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 29 டி20 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். தற்போது அவரது பந்து வீச்சில் தொய்வு ஏற்பட்டது.



    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். கடைசி ஐந்து ஒருநாள் போட்டியில் விக்கெட்டுக்கள் ஏதும் வீழ்த்தவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    சர்வதேச போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே சுய் சவுதர்ன் கியாஸ் கார்பரேசன் (SSGC) அணிக்காக விளைாடினார். தற்போது இந்த அணிக்காக விளையாட இருக்கிறார்.
    ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் சேர்க்கப்பட்டுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், சதாப் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. #AsiaCup2018 #MohammadAmir
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. ‘ஏ’ பிரிவில் இந்தியா முதல் இடத்தையும், பாகிஸ்தான் 2-வது இடத்தையும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தையும், வங்காள தேசம் 2-வது இடத்தையும் பிடித்தன.

    இன்று சூப்பர் 4 சுற்று தொடங்கின. முதல் நாளில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அபு தாபியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.



    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. யாரும் எதிர்பார்க்காத வகையில் முகமது அமிர் அணியில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி அறிமுகமாகியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் சதாப் கானுக்குப் பதிலாக நவாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பஹீம் அஷ்ரஃபிற்குப் பதிலாக ஹாரிஸ் சோஹைல் சேர்க்கப்பட்டுள்ளார்.
    தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மித்திற்கு பந்து வீசுவதுதான் கடினமானது என்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் தெரிவித்துள்ளார். #MohammadAmir
    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு தண்டனை காலம் முடிவடைந்து மீண்டும் அணிக்கு திரும்பும்போது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவரை மனதார வரவேற்றார். முகமது ஆமிர் பல இடங்களில் விராட் கோலியின் பேட்டிங் திறமையை பாராட்டியுள்ளார். அதேபோல் விராட் கோலியும் ஆமிர் பந்து வீச்சை பாராட்டியுள்ளார். தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்டீவ் ஸமித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோரை விட விராட் கோலி சிறந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் ஈஎஸ்பின்கிரிக்இன்போ-விற்கு ரேபிட்-பையர் பேட்டியளித்தார். அப்போது தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்து வீசுவதுதான் கடினமானது என்று தெரிவித்துள்ளார்.



    அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு முகமது ஆமிர் அளித்த பதில்களும்,

    கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற போட்டியில் விளையாடும் வீரர்களில் உங்களுக்கு பிடித்தவர் யார்?

    செர்ஜியோ அக்யூரோ

    கிரிக்கெட்டைத் தவிர மற்ற போட்டியில் சாம்பியன் டிராபியை வெல்ல நினைத்தால், அந்த விளையாட்டு?

    கால்பந்து

    உங்கள் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்பட்டால், யாரை உங்கள் கேரக்டரில் நடிக்க வைப்பீர்கள்?

    ஷாகித் கபூர்

    ஒரு சாதனையை நீங்கள் விரும்புகீர்கள் என்றால்?

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் மூன்று ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்

    நீங்கள் எப்படி நேரத்தை செலவழிக்க விரும்புவீர்கள்?

    ஹோட்டலில் படம் பார்த்து

    எந்த கிரிக்கெட் வீரரின் ஹேர்ஸ்டைல் பிடிக்கும்?

    என்னுடைய ஹேர்ஸ்டைல் எனக்கு பிடிக்கும். அதன்பின் ஷாகித் அப்ரிடி ஹேர்ஸ்டைல்

    நீங்கள் ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசியிருக்கனும் என்றால், அது யார்?

    பிரையன் லாரா. ஏனென்றால் அவரது காலக்கட்டத்தில் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம்.

    நீங்கள் மீண்டும் பிறந்தீர்கள் என்றால், யாராக ஆசைப்படுவீர்கள்?

    முகமது ஆமிர்

    நீங்கள் சமீபத்தில் பார்த்த பாலிவுட் படம்?

    பத்மாவத்

    உங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் மைதானம்?

    இங்கிலாந்து ஓவல். அதில் எராளமான நினைவுகள் உள்ளன.

    கிரிக்கெட்டில் ஒரு விதிமுறையை மாற்ற விரும்பினால்?

    நோ-பாலில் ப்ரீ ஹிட்

    நீங்கள் உங்களுடன் விளையாடும் சக வீரர் ஒருவருடன் குறும்பு செய்ய விரும்பினால்?

    அது லென்டில் சிம்மன்ஸ். கராச்சி அணியில் விளையாடும்போது மிகவும் வேடிக்கையாக நடந்து கொள்வார்.
    ×