search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயங் அகர்வால் - ரோகித் சர்மா
    X
    மயங் அகர்வால் - ரோகித் சர்மா

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 300 ரன்கள் குவிப்பு: அகர்வால் முதல் சதம் - ரோகித் 150

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மயங் அகர்வால் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.

    ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களம் இறங்கினார். மயங்க் அகர்வால் இந்திய மண்ணில் தொடக்க வீரராக முதல் முறையாக ஆடினார்.

    இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 4-வது சதத்தை பதிவு செய்தார்.

    இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அப்போது ரோகித் சர்மா 115 ரன்னும், மயங்க் அகர்வால் 84 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ரோகித்சர்மாவும், அகர்வாலும் தொடர்ந்து ஆடினார்கள்.

    அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 204 பந்துகளை சந்தித்து 100 ரன்னை தொட்டார். இதில் 13 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

    28 வயதான மயங்க் அகர்வால் டெஸ்டில் தனது முதல் சதத்தை அடித்தார். 5-வது டெஸ்டில் அவர் முதல் செஞ்சூரியை பதிவு செய்தார். இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி டெஸ்டில் 77 ரன் எடுத்ததே அவரது அதிகபட்ச ரன்னாக இருந்தது.

    மறுமுனையில் இருந்த ரோகித் சர்மா தொடர்ந்து அபாரமாக விளையாடினார். இதனால் இந்திய அணியின் ரன் குவிப்பு அதிகமானது. 72.2 ஓவரில் இந்தியா 250 ரன்னை தொட்டது.

    ரோகித் சர்மா 222 பந்துகளை சந்தித்து 150 ரன்னை எடுத்தார். இதில் 18 பவுண்டர்களும், 5 சிக்சர்களும் அடங்கும்.

    இருவரது அபாரமான ஆட்டத்தால் இந்தியா ரன்களை குவித்தது. உணவு இடைவெளி வரை இந்திய அணி ஒரு  விக்கெட்டை இழந்து 324 ரன்களை எடுத்து உள்ளது. ரோகித் சர்மா 176 (244) 23 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் எடுத்து வெளியேறினார். மயங் அகர்வால் 131 ரன்களுடனும், புஜாரா 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
    Next Story
    ×