search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் டெஸ்ட்"

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 321 ரன்களை எடுத்துள்ளது. #ENGvSL
    கொழும்பு:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி 20 போட்டி மற்றும்  3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்து நடந்த ஒரே ஒரு டி 20 போட்டியிலும் இங்கிலாந்து வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கல்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
    ரோரி பர்ன்ஸ், கேடன் ஜெனிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

    ரோரி பர்ன்ஸ் 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய மொயின் அலி முதல் பந்திலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெனிங்ஸ் 46 ரன்களில் அவுட்டானார்.



    கேப்டன் ஜோ ரூட் 35 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 38 ரன்னிலும் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு சாம் கர்ரன் ஒத்துழைப்பு கொடுத்தார். சாம் கர்ரன் 48 ரன்களில் அவுட்டானார். அடில் ரஷித் 35 ரன்னில் வெளியேறினார்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 91 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. பென் போக்ஸ் 87 ரன்களுடனும், ஜேக் லீக் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெராரா 4 விக்கெட்டும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் எடுத்தனர். #ENGvSL
    ×