search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிட்டகாங் டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் அபார வெற்றி
    X

    சிட்டகாங் டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் அபார வெற்றி

    சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தைஜுல் இஸ்லாமின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை, 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் அபார வெற்றி பெற்றது. #BANvWI #TaijulIslam
    சிட்டகாங்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மொமினுல் ஹக் சதமடித்து 120 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 324 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷானோன் கேப்ரியல், ஜோமெல் வாரிகன் ஆகியோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹெட்மயர் மற்றும் டவ்ரிச் ஆகியோர் அரை சதமடித்து வெளியேறினர். வங்காள தேசம் சார்பில் நயீம் ஹாசன் 5 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹாசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, வங்காள தேசம் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துல்லிய பந்து வீச்சில் சிக்கிய வங்காள தேசம் 125 ரன்களில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் தேவேந்திர பிஷு 4 விக்கெட்டும், ராஸ்டன் சேஸ் 3 விக்கெட்டும், ஜோமல் வாரிகன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் வங்காள தேசம் அணியினரின் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 64 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசம் அபார வெற்றி பெற்றது.

    அந்த அணியின் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளும், ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    வங்காள தேச அணியின் மொமினுல் ஹக்குக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி நவம்பர் 30ம் தேதி தொடங்கவுள்ளது. #BANvWI #TaijulIslam 
    Next Story
    ×