என் மலர்
விளையாட்டு
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டீன் எல்கர், டி காக் சதத்தால் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 27 ரன்னுடனும், பவுமா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மறுமுனையில் டு பிளிசிஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். டீன் எல்கர் - டு பிளிசிஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது.
அடுத்து டீன் எல்கர் உடன் டி காக் ஜோடி சேர்ந்தார். டி காக் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டீன் எல்கர் 175 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் டி காக் 79 பந்தில் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடியை பிரிக்கட் இந்திய பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயன்றும் பலனில்லை. ஒரு கட்டத்தில் இந்திய ஸ்கோரை தென்ஆப்பிரிக்கா எட்டுவிடும் என்ற நிலை இருந்தது.
அந்த நிலையில்தான் 160 ரன்கள் எடுத்திருந்த டீன் எல்கரை ஜடேஜா வீழ்த்தினார். அதன்பின்தான் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. டீன் எல்கர் - டி காக் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது.

9-வது விக்கெட்டுக்கு முத்துசாமி உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் சேர்த்துள்ளது. இன்றைய ஒரே நாளில் 5 விக்கெட்டுக்களை இழந்து 346 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தற்போது 117 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை விரைவாக தென்ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி, பேட்டிங்கில் அதிரடி காட்டினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 18 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து டீன் எல்கர் உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக டீன் எல்கர் ஜடேஜா, அஸ்வின் ஆகிய இரண்டு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களையும் அட்டகாசமாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார்.

மறுமுனையில் டு பிளிசிஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். டீன் எல்கர் - டு பிளிசிஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது.
அடுத்து டீன் எல்கர் உடன் டி காக் ஜோடி சேர்ந்தார். டி காக் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டீன் எல்கர் 175 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் டி காக் 79 பந்தில் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடியை பிரிக்கட் இந்திய பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயன்றும் பலனில்லை. ஒரு கட்டத்தில் இந்திய ஸ்கோரை தென்ஆப்பிரிக்கா எட்டுவிடும் என்ற நிலை இருந்தது.
அந்த நிலையில்தான் 160 ரன்கள் எடுத்திருந்த டீன் எல்கரை ஜடேஜா வீழ்த்தினார். அதன்பின்தான் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. டீன் எல்கர் - டி காக் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது.
டி காக் 149 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 111 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிலாண்டரை ரன்ஏதும் எடுக்காமல் வெளியயேற்ற, அஸ்வின் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

9-வது விக்கெட்டுக்கு முத்துசாமி உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் சேர்த்துள்ளது. இன்றைய ஒரே நாளில் 5 விக்கெட்டுக்களை இழந்து 346 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தற்போது 117 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை விரைவாக தென்ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி, பேட்டிங்கில் அதிரடி காட்டினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று விசாரணை கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடந்தது. இதில் சில முதல் தர கிரிக்கெட் வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகப்படும் நபர்கள் அணுகியதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு புகார் தெரிவித்து இருந்தது. இந்த சர்ச்சை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நியமித்த 3 பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை கமிட்டி தனது அறிக்கையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் தாக்கல் செய்து இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘டி.என்.பி.எல். சர்ச்சை குறித்து விசாரணை கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை நாங்கள் முழுமையாக படித்து பார்த்தோம். அதில் நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவுக்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். அந்த கமிட்டி டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நேர்மையான முறையில் நடைபெற்று வருவதை நிலைநிறுத்தவும், நம்பகத்தன்மையை காக்கவும் சில பரிந்துரைகளை செய்து இருக்கிறது. அதனை நாங்கள் பின்பற்றுவோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணத்தின் போது கிரிக்கெட் வீரர்களுடன் மனைவியை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நிருபர்களிடம் கூறியதாவது:-
நமது கிரிக்கெட் அணி உள்பட பல விளையாட்டு அணியினர் வெளிநாடு செல்லும் போது அவர்களுடன் அவர்களது மனைவியையோ அல்லது காதலியையோ அழைத்து செல்ல அனுமதிப்பதில்லை. இதை நான் பல தடவை பார்த்து இருக்கிறேன். இவர்களை உடன் அழைத்து சென்றால் வீரர்களின் கவனம் சிதறி விடும் என்று காரணம் சொல்வார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? பெண்கள் தான் ஆண்களின் கவனத்தை அதிகமாக சிதறச் செய்கிறார்களா? பெண்களை வீரர்களின் ஊக்கம், பலமாக கருதாமல், ஏன் ஆழ்ந்த பிரச்சினையாக பார்க்கிறீர்கள். வாழ்க்கை துணை உடன் இருக்கும் சமயத்தில், விளையாடி விட்டு தனது அறைக்கு திரும்பும் அந்த வீரர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை பாருங்கள். அவர்கள் அளிக்கும் ஆதரவு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். விராட் கோலி சரியாக ஆடாத போது, அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை விமர்சித்தது முட்டாள்தனமானது.
இவ்வாறு சானியா கூறினார்.
மேலும் சானியா கூறுகையில், ‘நான் சிறுவயதில் டென்னிஸ் விளையாடிய போது எனது உற்றார், உறவினர்கள் எல்லாம், நீ வெயிலில் தொடர்ந்து விளையாடினால், உடல் கறுத்து போய் விடும். அதன் பிறகு ஒருவரும் உன்னை திருமணம் செய்ய முன்வரமாட்டார்கள். அதனால் டென்னிசை விட்டு விடு என்று சொன்னார்கள். ஆனால் இதை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. இது மாதிரி பேசுவதை நிறுத்தி விட்டு விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டும் பெண்களை சிறுவயதில் இருந்தே ஊக்கப்படுத்த வேண்டும்’ என்றார்.

புரோ கபடி லீக் தொடரில் அரியானாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது புனேரி பால்டன் அணி.
பஞ்ச்குலா :
7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அரியானாவின் பஞ்ச்குலாவில் இன்று இரவு நடந்த 119-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை குவித்தன. ஆனாலும் முதல் பாதி முடிவில் புனேரி பால்டன் அணி முன்னிலை வகித்தது/
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்பதால் மிகவும் போராடி புள்ளிகளை குவித்தது.
ஆனால் ஆட்டத்தின் கடைசியில் 53-50 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
21-வது ஆட்டத்தில் ஆடிய புனேரி பால்டன் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 19-வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் நாங்கள் மோசமாக பந்து வீசவில்லை. ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் சிறப்பாக பேட்டிங் செய்தனர் என மகாராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 502 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா பிலாண்டர், ரபாடா, மகாராஜ், பியெட், முத்துசாமி ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடியும் இந்தியாவின் ரன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. பந்து வீச்சாளர்களின் திறமை மீது விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 55 ஓவர்களில் 189 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய மகாராஜ், நாங்கள் மோசமாக பந்து வீசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நாங்கள் மோசமாக பந்து வீசினோம் என்று நான் கூறமாட்டேன். என்னுடைய தனிப்பட்ட கணிப்பு என்னவெனில், யாராவது ஒரு பேட்ஸ்மேன் களம் இறங்கி, பந்து வீச்சாளரின் பந்தை துவம்சம் செய்தால், அவர் வீசிய பந்து மோசமானதல்ல. பந்தை ஆடுகளத்தில் சிறந்த முறையில் ஹிட் செய்தால், அதன்பின் கதை வேறுமானதாக இருக்கும்.
பியெட்டிற்கு அதிர்ஷ்டம் இல்லை. மயங்க் அகர்வால் சூப்பராக விளயாடினார். அதேபோல் ரோகித் சர்மாவும் சிறப்பான ஆடினார். பந்து வீச்சாளர்கள் அவர்களால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்தார்கள். இது இந்தியாவின் நாளாக அமைந்துள்ளது. நாங்கள் மோசமாக பந்து வீசியதாக நான் பார்க்கவில்லை. முத்துசாமி பேட்டிங் ஆல்-ரவுண்டர். கடினமான கண்டிசனில் அவரது பங்களிப்பு சிறப்பானதே’’ என்றார்.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்களாக ரமேஷ் பவார் மற்றும் கனித்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ளது. அகாடமியின் தலைவராக சமீபத்தில் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். தற்போது கனித்கர் பேட்டிங் பயிற்சியாளராகவும், ரமேஷ் பவார் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ராகுல் டிராவிட்டுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்தியா ஏ, 19 வயதிற்கு உட்பட்டோர் இந்தி அணி, U-23 போன்ற அணிகளுடன் பயணிக்க வேண்டும்.
கனித்கர் ஏற்கனவே ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ரமேஷ் பவார் இந்திய பெண்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

பெண்களிடம் நீங்கள் விளையாடினால் யாரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள் எனக் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சானியா மிர்சா கூறியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உலகளவில் பிரபலமாக திகழ்ந்தார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
குழந்தை பெற்ற பிறகு இன்னும் டென்னிஸ் போட்டிக்கு திரும்பவில்லை. அடுத்த வருடம் டென்னிஸ் போட்டியில் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.
இவர் சிறுமியாக இருக்கும்போது, வெளிப்புற (outdoor) விளையாட்டில் கலந்து கொண்டு விளையாடினால் வெயில் காரணமாக உடல் கருத்து விடும், யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என கூறினார்கள் என்ற சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
சானியா மிர்சா இதுகுறித்து கூறுகையில் ‘‘பெற்றோர்கள், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள், அத்தை மற்றும் மாமா போன்றோர், பெண்களிடம் நீங்கள் விளையாடினால் வெயிலில் கருத்து விடுவீர்கள், யாரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள் என்று கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எனக்கு 8 வயதாக இருக்கும்போது என்னை யாரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள் என்று எல்லோரும் நினைத்தனர். ஏனென்றால், நான் விளையாடினால் கருப்பாகி விடுவேன் என தடுத்தனர். ஆனால், சிறுமியாக இருக்கிறேன். எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்குள்ளே நினைத்துக் கொண்டேன்.
பெண் அழகாக இருக்க வேண்டும் என்ற கலாச்சாரம் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. அதை நியாயப்படுத்தவும் பார்க்கிறார்கள். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த கலாச்சாரம் மாற வேண்டும்’’ என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாட கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாராக இருந்தேன் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக தொடக்க வீரராக களம் இறங்கினார்.
முதல் இன்னிங்சிலேயே அபாரமாக விளையாடி 176 ரன்கள் குவித்தார். கிரிக்கெட் விமர்சகர்கள் கடந்த சில மாதங்களாகவே ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், நான் இரண்டு வருடங்களாக தயாராக இருந்தேன் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்குவது வித்தியாசமானது. உங்களது மனதை அதற்கு ஏற்றபடி பழக்கப்படுத்த வேண்டும். மற்ற அனைத்தையும் விட இதுதான் முக்கியமானது. அதே நேரம் பேட்டிங்கில் சில டெக்னிக் அம்சங்களையும் கவனிக்க வேண்டும்.
ஆனால், புதுப்பந்தை எதிர்கொண்டு, ஆட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வது மளதளவில் மிக சவாலானது
நான் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டேன். இன்னிங்சை எப்படி அணுக வேண்டும் என்பதில் நான் கொஞ்சம் கூட குழப்பம் அடையவில்லை’’ என்றார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போது, நான் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவேன் என்று சொல்லப்பட்டது. தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க நான் இரண்டு வருடங்களாக தயாராக இருந்தேன். ஒரு கட்டத்தில் நான் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவேன் என்பதை அறிந்திருந்தேன். ஆகவே, நான் தயாராக இருந்தேன்.

டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்குவது வித்தியாசமானது. உங்களது மனதை அதற்கு ஏற்றபடி பழக்கப்படுத்த வேண்டும். மற்ற அனைத்தையும் விட இதுதான் முக்கியமானது. அதே நேரம் பேட்டிங்கில் சில டெக்னிக் அம்சங்களையும் கவனிக்க வேண்டும்.
ஆனால், புதுப்பந்தை எதிர்கொண்டு, ஆட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வது மளதளவில் மிக சவாலானது
நான் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டேன். இன்னிங்சை எப்படி அணுக வேண்டும் என்பதில் நான் கொஞ்சம் கூட குழப்பம் அடையவில்லை’’ என்றார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது.
விசாகப்பட்டினம்:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எல்கர், மார்க் கிராம் களமிறங்கினர். மார்க்கிராம் 5 எடுத்திருந்த போது அஸ்வின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த டி ப்ரூயின் 4 ரன்னிலும் டேனி 0 ரன்னிலும் வெளியேறினர்.
நிதானமாக விளையாடி எல்கர் 27 ரன்னிலும் பவுமா 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ்க்கு கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
அதேபோல் ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்டில் 135 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருதை பென் ஸ்டோக்ஸ்க்கு வழங்கி கவுரவித்துள்ளது.
கோடைக்கால ஒருநாள் கிரிக்கெட் வீரராக கிறிஸ் வோக்ஸும், டெஸ்ட் வீரராக ஸ்டூவர்ட் பிராட்டும், கவுன்ட் சாம்பியன்ஷிப் வீரராக ஹர்மரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் ஆஸ்திரேலியாவின் சால்ஸ்பர்க் அணிக்கெதிரான முதல் பாதி நேர ஆட்டத்தில் 3-0 முன்னிலைப் பெற்றபின், த்ரில் வெற்றி பெற்றது லிவர்பூல்.
யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று பல்வேறு ஆட்டங்கள் நடைபெற்றன. நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் லிவர்பூல் - ரெட் புல் சால்ஸ்பர்க் (ஆஸ்திரியா) அணிகள் மோதின. இந்த ஆட்டம் லிவர்பூல் அணிக்கு சொந்தமான அன்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது.
2017-ல் இருந்து லிவர்பூல் அன்பீல்டு மைதானத்தில் தோல்வியடந்தது கிடையாது. இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் களம் இறங்கியது. சொந்த ரசிகர்களுக்கு மத்தியில் லிவர்பூல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் சாடியோ மானேவும், 25-வது நிமிடத்தில் ஆண்ட்ரூ ராபர்ட்சனும், 36-வது நிமிடத்தில் முகமது சாலாவும் கோல் அடித்தனர். ஆட்டத்தின் 36-வது நிமிடம் வரை லிவர்பூல் 3-0 என முன்னிலை பெற்றிருந்தது.

2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் 56-வது மற்றும் 60-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து ஸ்கோரை 3-3 என சமன் செய்தது ரெட் புல்.
இதனால் லிவர் பூல் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் முகமது சாலா 69-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் லிவர்பூல் 4-3 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. தப்பி பிழைத்தது போல் லிவர்பூல் 4-3 என த்ரில் வெற்றி பெற்றது.

அதன்பின் ரெட் புல் அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 39-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹீ-சான் கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் லிவர்பூல் 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் 56-வது மற்றும் 60-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து ஸ்கோரை 3-3 என சமன் செய்தது ரெட் புல்.
இதனால் லிவர் பூல் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் முகமது சாலா 69-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் லிவர்பூல் 4-3 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. தப்பி பிழைத்தது போல் லிவர்பூல் 4-3 என த்ரில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 502 ரன்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களம் இறங்கினார். மயங்க் அகர்வால் இந்திய மண்ணில் தொடக்க வீரராக முதல் முறையாக ஆடினார்.
இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 4-வது சதத்தை பதிவு செய்தார்.
இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ரோகித்சர்மாவும், அகர்வாலும் தொடர்ந்து ஆடினார்கள்.
ரோகித் சர்மா 176 (244) 23 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா 6 ரன்னிலும் கேப்டன் விராட் கோலி 20 ரன்னிலும் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் டெஸ்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து ஆடி வந்த இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ரகானே 15 ரன்னில் வெளியேற சிறப்பாக ஆடி வந்த மயங்க் அகர்வால் 215 ரன்னில் அவுட் ஆனார். இதில் 23 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.
இதனையடுத்து களமிறங்கிய விகாரி 10 ரன்னிலும் சகா 21 ரன்னிலும் வெளியேறினர். இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் விராட் கோலி டிக்ளேர் அறிவித்தார். ஜடேஜா 30 ரன்னிலும் அஸ்வின் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ் 3 விக்கெட்டுகளும் பிலாண்டர், முத்துசாமி, எல்கர், டேனி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.