என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வைபவ் கெலாட் 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தொழில் அதிபர் ராம்பிரகாஷ் சவுத்ரி 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதேபோல் நேற்று நடந்த மும்பை கிரிக்கெட் சங்க தேர்தலில் டாக்டர் விஜய் பட்டீல் தலைவராகவும், சஞ்சய் நாயக் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற அனைத்து பதவிகளுக்கும் அவரது அணியை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றனர்.

    ரோஜர் பின்னி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 27 ரன்னுடனும், பவுமா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 18 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து டீன் எல்கர் உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டு பிளிசிஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். எல்கர் மற்றும் டி காக்கின் சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.

    எல்கர் 160 ரன்னிலும் டி காக் 111 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த பிலாண்டர் ரன்ஏதும் எடுக்காமலும் வெளியேறினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் சேர்த்தது.

    இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 431 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முத்துசாமி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியா தற்போது 71 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 2 விக்கெட்டும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    புரோ கபடி லீக் தொடரில் அரியானாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
    சண்டிகர்:

    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அரியானாவின் பஞ்ச்குலாவில் இன்று இரவு நடந்த 120-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை குவித்தன. இரு அணிகளும் போராடி புள்ளிகளை குவித்தன. 

    இறுதியில், 41-34 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பிளே ஆப் சுற்றை தக்கவைத்துக் கொண்டது.

    21-வது ஆட்டத்தில் ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. 21-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும்.

    பஞ்ச்குலாவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்சை 52-32 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது அரியானா ஸ்டீலர்ஸ் அணி.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய இடது கை பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஜடேஜா முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். 2-வது விக்கெட்டாக டீன் எல்கரை வீழ்த்தியபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 200-வது விக்கெட்டை பதிவு செய்தார்.

    ஜடேஜாவுக்கு இது 44-வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இடது கை பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அஸ்வின் 37 டெஸ்டில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
    விசாகப்பட்டினம் டெஸ்டில் 160 ரன்கள் குவித்த தென்ஆப்பிரிக்க வீரர் தொடக்க வீரர் டீன் எல்கர், இந்தியாவில் விளையாடுவது மிகக் கடினம் என்று தெரிவித்துள்ளார்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா விரைவாக மூன்று விக்கெட்டுக்களை இழந்த போதிலும், தொடக்க வீரர் டீன் எல்கர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 160 ரன்கள் குவித்தார்.

    இவரது ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா மிகப்பெரிய ரன் இடைவெளியை தவிர்த்தது. சிறப்பாக விளையாடிய  டீன் எல்கர், இந்திய மண்ணில் விளையாடுவது மிகக் கடினம் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டீன் எல்கர் கூறுகையில் ‘‘மீண்டும் அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளித்தது மிகவும் சிறப்பான ஒன்று. இந்தியாவில் விளையாடுவது மிகக் கடினம். நான் கடந்த முறை இங்கு வந்தபோது, எனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்தது. இந்த நான்கு வருடத்தில் நான் சிறந்த கிரிக்கெட்டராக வளர்ந்துள்ளேன். கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடியது உதவியாக இருந்தது.

    கடந்த முறை கடைபிடித்ததை இந்த முறை கடைபிடிக்க முடியாது. ஏனென்றால் ஆடுகளத்தின் தன்மை அப்படிபட்டது. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். அதன்பின் சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடலாம்.

    கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடியது உதவிகரமாக இருந்தது. இந்தியா செல்லும்போது அதிக அளவில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். பந்தை தூக்கி அடித்தது, எனது பலத்தை நான் உணர்ந்துள்ளேன். என்னுடைய அந்த பலம், சரியாக கைக்கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும்’’ என்றார்.
    ஜெய்ப்பூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு.
    விஜய் ஹசாரே டிராபியில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் இக்பால் 67 ரன்களும், 5-வது வீரராக களம் இறங்கிய ஷுபம் பண்டிர் 66 ரன்களும், அடுத்து வந்த அப்துல் சமாத் 50 ரன்களும் அடிக்க ஜம்மு-காஷ்மீர் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் சேர்த்தது.

    தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர், டி நடராஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணியின் அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முகுந்த் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து முரளி விஜய் உடன் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.

    முரளி விஜய் 131 பந்தில் 117 ரன்கள் சேர்த்தார். பாபா அபரஜித் ஆட்டமிழக்காமல் 107 பந்தில் 86 ரன்கள் சேர்க்க தமிழ்நாடு 48 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 239 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை ருசித்துள்ளது.
    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டினால் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் 100 பந்து கிரிக்கெட்டில் விளையாட கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
    ஐந்து நாட்களாக நடத்தப்பட்டு வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்க்கும் ரசிர்கள் ஆர்வம் வெகுவாக குறைந்ததுள்ளது. இதனால் ஒருநாள் ஆட்டத்தை தொடர்ந்து டி20 கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.

    இந்த போட்டியில் மேலும் சுவாரஸ்யம் கூட்ட இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விரும்பியது. இதனால் 100 பந்து கிரிக்கெட் லீக் என்ற தொடரை அறிமுகம் படுத்த இருக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு வீரர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படும் என தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் கிறிஸ் கெய்ல், ரஷித் கான், டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், பாபர் அசாம் உள்பட 165 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். வருகிற 20-ந்தேதி விண்ணப்பம் தெரிவித்திருந்து வீரர்கள் அடங்கிய முழுப்பட்டியல் வெளியிடப்படும்.
    பெர்பார்மென்ஸைவிட மற்ற பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடுவதுதான் அஸ்வினை அடிக்கடி நீக்குவதற்கு காரணம் என கவாஸ்கர் அணி நிர்வாகம் மீது சாடியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின். முன்னணி சுழற்பந்து வீச்சாளரான இவர் அடிக்கடி அணியில் இருந்து நீக்கப்படுகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் அஸ்வினுக்குப் பதில் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் அஸ்வினுக்கு பெர்பார்மென்ஸைவிட மற்ற பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடுவதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. அணி நிர்வாகம் அவரை நடத்தும் முறை குறித்து சுனில் கவாஸ்கர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘தன்னுடன் உள்ள சக வீரர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக அவர் உணர்கிறார். சக வீரர்கள் அவருக்கு நம்பிக்கை அளிக்காதபோது, அவரை அணியில் இருந்த ஓரங்கட்டும்போது, அவர் கொஞ்சம் கடினமாக முயற்சி செய்கிறார்.

    மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவதுதான், அவருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன். இதை வைத்துதான் அவரை ஓரங்கட்டுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது, அஸ்வினை நாதன் லயன் உடன் ஒப்பிடுகிறார்கள். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதை செய்கிறார். ஆனால், நாதன் லயன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுகிறார்.

    அதேபோல் இங்கிலாந்தில், மொயின் அலி 6 விக்கெட்டிற்கு மேல் எடுக்கும்போது, அஸ்வினால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை என்று கூறினார்கள். இது நடக்கத்தான் செய்யும்.

    350 விக்கெட்டை நெருங்கும் தன்னை, பெர்பார்மென்ஸை காட்டிலும், இந்த ஒப்பிடு சம்பவம் மூலம்தான் ஓரங்கட்டியுள்ளனர் என்று நீக்கியதற்கான காரணத்தை தானாகவே அறிந்திருப்பார். 350 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஒரு பந்து வீச்சாளரை அஸ்வின் போன்று வெளியில் வைக்க முடியாது’’ என்றார்.
    பும்ரா தனித்துவமான திறமைப் படைத்தவர், அவர் இனிமேல் புகழ்பெற்ற வீரராக வளர மட்டும்தான் வேண்டும் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. தற்போது முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள லேசான எழும்பு முறிவு காயத்தால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இடம் பெறவில்லை. இவருடன் இணைந்து விளையாடியவர் லோகேஷ் ராகுல். இவருக்கு தென்ஆப்பிரிக்கா தொடரில் இடம் கிடைக்கவில்லை.

    விஜய் ஹசாரே டிராபியில் விளையாடி வரும் கேஎல் ராகுல், பும்ராவின் திறமையை வெகுவாக பாராட்டியுள்ளார். பும்ரா குறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘பும்ரா தனித்துவமான திறமை பெற்றவர். இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்பே, அவருடன் விளையாடும் வாய்பு எனக்கு கிடைத்தது.

    ஜூனியர் லெவல் அணியில் விளையாடியுள்ளோம். கிரிக்கெட்டைப் பற்றி மிகவும் பேரார்வம் கொண்டவர். அவருடன் யாரும் மோதிக் கொள்ள விரும்பமாட்டார்கள். ஏனெனில், அதிபயங்கரமாக பந்து வீசி அச்சுறுத்துவார். ஒருவருக்கொருவர் எதிரெதிராக விளையாடும்போது, போட்டிக்கு வெளியில் கூட அவர் போட்டியாளராக விளங்கினார்.

    அவரை போன்ற வீரர்கள் நாட்டிற்காக விளையாடும்போது கருணை காட்ட மாட்டார்கள். அவர் எப்போதும் போட்டியாளர்தான். அவர் தற்போது நாட்டிற்காக அந்த வகையில் விளையாடி வருவது சிறப்பாக விஷயம். அவர் இன்னும் சிறந்த வீரராக வளர மட்டுமே வேண்டும்’’ என்றார்.
    ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா ஆகியோர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளனர்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பும்ரா பந்து வீச்சில் அசத்தி வருகிறார்.

    ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தரவரிசையில் இருவரும் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளனர். பேட்டிங்கில் இந்திய துணைக்கேப்டன் ரோகித் சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய முகமது அமிர் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
    கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ரோஜர் பின்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கு முன் பிசிசிஐ-யின் கீழ் இயங்கும் அனைத்து கிரிக்கெட் சங்கங்களும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரோஜர் பின்னியை எதிர்த்து எம்.எம். ஹரிஷ் என்பவர் போட்டியிட்டார். அவரை ரோஜர் பின்னி 832 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    ரோஜர் பின்னர் 2007 முதல் 2012 வரை துணைத் தலைவராக இருந்துள்ளார். 2021-2022 வரை தலைவராக இருப்பார். துணைத் தலைவராக ஜே. அபிராம், பொருளாளராக வினய் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டீன் எல்கர், டி காக் சதத்தால் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் சேர்த்துள்ளது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 27 ரன்னுடனும், பவுமா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 18 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து டீன் எல்கர் உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக டீன் எல்கர் ஜடேஜா, அஸ்வின் ஆகிய இரண்டு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களையும் அட்டகாசமாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார்.

    டீன் எல்கர்

    மறுமுனையில் டு பிளிசிஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். டீன் எல்கர் - டு பிளிசிஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து டீன் எல்கர் உடன் டி காக் ஜோடி சேர்ந்தார். டி காக் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டீன் எல்கர் 175 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் டி காக் 79 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்த ஜோடியை பிரிக்கட் இந்திய பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயன்றும் பலனில்லை. ஒரு கட்டத்தில் இந்திய ஸ்கோரை தென்ஆப்பிரிக்கா எட்டுவிடும் என்ற நிலை இருந்தது.

    அந்த நிலையில்தான் 160 ரன்கள் எடுத்திருந்த டீன் எல்கரை ஜடேஜா வீழ்த்தினார். அதன்பின்தான் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. டீன் எல்கர் - டி காக் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது.

    டி காக் 149 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 111 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிலாண்டரை ரன்ஏதும் எடுக்காமல் வெளியயேற்ற, அஸ்வின் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    சதம் அடித்த டி காக்

    9-வது விக்கெட்டுக்கு முத்துசாமி உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் சேர்த்துள்ளது. இன்றைய ஒரே நாளில் 5 விக்கெட்டுக்களை இழந்து 346 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா தற்போது 117 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை விரைவாக தென்ஆப்பிரிக்காவின் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி, பேட்டிங்கில் அதிரடி காட்டினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    ×