என் மலர்tooltip icon

    விளையாட்டு

    11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான சரிதாதேவி, நடாலியாவிடம் 0-5 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார்.
    உலன் உடே:

    11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 60 கிலோ உடல் எடைப்பிரிவில் நேரடியாக கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் அடியெடுத்து வைத்த முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் சரிதாதேவி, ரஷியாவின் நடாலியா ஷட்ரினாவுடன் மோதினார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சரிதாதேவி 0-5 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார். இதே போல் உலக போட்டியில் முதல்முறையாக களம் கண்ட இந்தியாவின் நந்தினி (81 கிலோ எடைப்பிரிவு), ஜெர்மனியின் அரினா நிகோலெட்டாவிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் 0-5 என்ற கணக்கில் வீழ்ந்தார்.

    ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ஜப்பான் நாட்டு வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோக்கியோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜான் மில்மானை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். ஜப்பான் ஓபனில் அறிமுகம் ஆன முதலாவது ஆண்டிலேயே பிரமாதப்படுத்தியுள்ள ஜோகோவிச்சுக்கு ரூ.2¾ கோடி பரிசுத்தொகையும், 500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. மொத்தத்தில் இது அவரது 76-வது சர்வதேச பட்டமாகும்.

    ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்


    இதே போல் பீஜிங்கில் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்டியும் (ஆஸ்திரேலியா), 4-ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகாவும் (ஜப்பான்) பலப்பரீட்சையில் இறங்கினர். 1 மணி 50 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் ஒசாகா 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். இது அவரது 5-வது சர்வதேச பட்டமாகும். வாகை சூடிய அவர் ரூ.10 கோடி பரிசுத்தொகையையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் பெற்றார். இதன் ஆண்கள் பிரிவில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) போராடி வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.
    விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஷமி, ஜடேஜா ஆகியோரின் அபார பந்துவீச்சினால் தென் ஆப்பிரிக்காவை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
     
    அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் எல்கர் 160 ரன்களும் டி காக் 111 ரன்களும் கேப்டன் டுபிலிசிஸ் 55 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, அகர்வால் களமிறங்கினர். 

    முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் 7 ரன்னில் அவுட்டானார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடினார். அரை சதமடித்த புஜாரா 81 ரன்னில் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா 40 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய விராட் கோலியும், அஜிங்கியா ரகானேவும் விக்கெட் விழாமல் நின்றனர்.

    இறுதியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. விராட் கோலி 31 ரன்னுடனும், ரகானே 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து, 395 ரன்களை இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.

    4 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா

    இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அஷ்வின் மற்றும் ஜடேஜா விரைவில் விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து இறங்கிய முன்னணி வீரர்களை மொகமது ஷமியும், ஜடேஜாவும் விரைவில் அவுட்டாக்கினர். ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதனால் நிலைகுலைந்த தென் ஆப்பிரிக்கா அணி 70 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.

    கடைசி கட்டத்தில் முத்துசாமியும், டேன் பீட்டும் இணைந்து நிதானமாக ஆடினர். பீட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார். அப்போது தென் ஆப்பிரிக்கா 161 ரன்கள் எடுத்திருந்தது. இருவரும் இணைந்து 91 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்தியா சார்பில் மொகமது ஷமி 5 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.. ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி விரைவாக 350 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த அஷ்வினுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் களமிறங்கியது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 176 ரன்னும், மயங்க் அகர்வால் 215 ரன்னும் அடித்து அசத்தினர்.
     
    தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா டீன் எல்கர், டி காக், டு பிளசிஸின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஷ்வின் 7 விக்கெட் எடுத்தார்.

    71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    நேற்றைய 4ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், முதல் டெஸ்டின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி 19 ரன்கள் எடுத்திருந்தபோது டி புருன் அஷ்வின் பந்தில் அவுட்டானார்.

    இந்த விக்கெட் மூலம் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலு, இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

    சுமார் ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம்பெற்ற இந்திய வீச்சாளர் அஸ்வின் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பெய்ஜிங்கில் நடக்கும் சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்றைய அரையிறுதியில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கியை வீழ்த்திய ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா இறுதிப் போட்டியில் நுழைந்தார்.
    பெய்ஜிங்: 

    சீன ஓபன் டென்னிஸ் போட்டி பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகாவும், நடப்பு சாம்பியனான டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியும் மோதினர்.

    இதில், நவாமி ஒசாகா 6-4, 6-2 என்ற நேர்செட்டில் வோஸ்னியாக்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாக, நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டியை எதிர்கொள்கிறார்.
    லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    லாகூர்:

    இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை
    தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகாவும் அவிஷ்கா பெர்னாண்டோவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 
    அவிஷ்கா 33 ரன்னிலும், அடுத்து இறங்கிய பானுகா ராஜபக்ச 32 ரன்னிலும் அவுட்டாகினர். சிறப்பாக ஆடிய குணதிலகா அரை சதமடித்து அசத்தினார். அவர் 57 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது.

    பாகிஸ்தான் சார்பில் மொகமது ஹஸ்னா 3 விக்கெட் வீழ்த்தினார் தொடர்ந்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான்
    களமிறங்கியது.

    இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி நிலை குலைந்தது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    பாகிஸ்தான் அணியில் அதிகமாக இப்திகான் அகமது 25 ரன்னும், சர்ப்ராஸ் அகமது 24 ரன்னும் எடுத்தனர். இறுதியில், பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில் 101 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை அணி சார்பில் நுவான் பிரதீப், இசுரு உதானா தலா 3 விக்கெட்டும், வஹிந்து ஹசங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள்  கொண்ட தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.
    புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை வீழ்த்திய யுபி யோதா அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் யுபி யோதா அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் யுபி யோதா அணி சிறப்பாக ஆடியது.  தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை குவித்தன. 

    ஆட்டத்தின் முதல் பாதியில் யுபி யோதா அணி 22- 12 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் யுபி யோதா பொறுப்புடன் ஆடினர்.  

    இறுதியில், 50-33 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது யுபி யோதா அணி. இந்த வெற்றி மூலம் யுபி யோதா பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    19-வது ஆட்டத்தில் ஆடிய யுபி யோதா அணி பெற்ற 11-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    மற்றொரு போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்சை 39-33 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது பாட்னா பைரேட்ஸ் அணி.
    விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 395 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்திய அணி.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
     
    அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் எல்கர் 160 ரன்களும் டி காக் 111 ரன்களும் கேப்டன் டுபிலிசிஸ் 55 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, அகர்வால் களமிறங்கினர். 

    முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் 7 ரன்னில் அவுட்டானார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடினார்.

    அடித்து ஆடும் விராட் கோலி

    இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். அரை சதமடித்த புஜாரா 81 ரன்னில் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா 40 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய விராட் கோலியும், அஜிங்கியா ரகானேவும் விக்கெட் விழாமல் நின்றனர்.

    இறுதியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. விராட் கோலி 31 ரன்னுடனும், ரகானே 27 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, 395 ரன்களை இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.
    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இரு இன்னிங்சிலும் சதமடித்து ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 176 ரன்னும், மயங்க் அகர்வால் 215 ரன்னும் அடித்து அசத்தினர்.
     
    அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்காடீன் எல்கர், டி காக், டு பிளசிஸின் பொறுப்பான ஆட்டத்தால் 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, அகர்வால் களமிறங்கினர். அகர்வால் விரைவில் வெளியேறினார்.

    அரை சதமடித்த புஜாரா 81 ரன்னில் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்சிலும் சதமடித்து சாதனை செய்துள்ள ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
    தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிராக 4-வது நாள் ஆட்டத்தில் மதிய இடைவேளை வரை இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் எல்கர் 160 ரன்களும் டி காக் 111 ரன்களும் கேப்டன் டுபிலிசிஸ் 55 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட் எடுத்தார்.

    இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, அகர்வால் களமிறங்கினர். பொறுமையுடன் ஆடிய மயங்க் அகர்வால் 31 பந்துகளில் 7 ரன் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடினார்.

    ரோகித் சர்மா அவரது பேட்டிங் ஸ்டைலில் அவ்வப்போது சிக்சர்களை பறக்கவிடுகிறார். அவர் 33 பந்துகளில் 25 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 1 பவுண்டரியும் 2 சிக்சர்களும் அடங்கும். புஜாரா 20 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    மதிய இடைவேளை வரை இந்திய அணி 106 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது.
    அஸ்வின் 21-வது முறையாக சொந்த மண்ணில் 5 விக்கெட்டை கைப்பற்றி உள்ள நிலையில் கும்ப்ளேயை விரைவில் அவர் நெருங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விசாகப்பட்டினம்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வினின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

    சென்னையைச் சேர்ந்த அவர் 41 ஓவர் வீசி 128 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அவர் 27-வது முறையாக டெஸ்டில் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 முறை அஸ்வின் 5 விக்கெட்டை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்பு ஹர்பஜன் சிங், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 4 முறை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

    முரளிதரன் (இலங்கை) 11 முறையும், வார்னே (ஆஸ்திரேலியா) 7 தடவையும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர். அஸ்வின் 3-வது நிலையில் உள்ளார்.

    அஸ்வின் 21-வது முறையாக சொந்த மண்ணில் 5 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார். உள்ளூரில் அதிக முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 4-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    முரளிதரன் 45 முறையும், ஹெராத் 26 முறையும், கும்ப்ளே 25 முறையும் 5 விக்கெட்டுக்கு மேல் சொந்த மண்ணில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் அஸ்வின் உள்ளார். கும்ப்ளேயை விரைவில் அவர் நெருங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் எல்கர் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். டெஸ்ட் போட்டியில் அவரது 200-வது விக்கெட் ஆகும். இந்த விக்கெட்டை எடுத்த 10-வது இந்திய பவுலர் ஆவார்.

    டெஸ்ட்டில் 200 விக்கெட்டை அதிக வேகத்தில் கைப்பற்றிய இடது கை வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்தார். அவர் 44 டெஸ்ட்டில் இந்த முத்திரை பதித்தார். இதற்கு முன்பு இலங்கை இடது கை பந்து வீச்சாளர் ஹெராத் 47 டெஸ்டில் 200 விக்கெட்டை எடுத்துள்ளார். அதை ஜடேஜா முறியடித்தார்.

    மற்ற இடது கை பந்து வீச்சாளர்களில் மிச்சேல் ஜான்சன் (ஆஸ்திரேலியா) 49 டெஸ்டிலும், ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) 50 டெஸ்டிலும் 200 விக்கெட்டை தொட்டு இருந்தனர்.
    ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வைபவ் கெலாட் 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தொழில் அதிபர் ராம்பிரகாஷ் சவுத்ரி 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதேபோல் நேற்று நடந்த மும்பை கிரிக்கெட் சங்க தேர்தலில் டாக்டர் விஜய் பட்டீல் தலைவராகவும், சஞ்சய் நாயக் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற அனைத்து பதவிகளுக்கும் அவரது அணியை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றனர்.

    ரோஜர் பின்னி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×