search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின்
    X
    அஸ்வின்

    உள்ளூரில் 21-வது முறையாக 5 விக்கெட் - கும்ப்ளேயை நெருங்கும் அஸ்வின்

    அஸ்வின் 21-வது முறையாக சொந்த மண்ணில் 5 விக்கெட்டை கைப்பற்றி உள்ள நிலையில் கும்ப்ளேயை விரைவில் அவர் நெருங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விசாகப்பட்டினம்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வினின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

    சென்னையைச் சேர்ந்த அவர் 41 ஓவர் வீசி 128 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அவர் 27-வது முறையாக டெஸ்டில் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 முறை அஸ்வின் 5 விக்கெட்டை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்பு ஹர்பஜன் சிங், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 4 முறை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

    முரளிதரன் (இலங்கை) 11 முறையும், வார்னே (ஆஸ்திரேலியா) 7 தடவையும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர். அஸ்வின் 3-வது நிலையில் உள்ளார்.

    அஸ்வின் 21-வது முறையாக சொந்த மண்ணில் 5 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார். உள்ளூரில் அதிக முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 4-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    முரளிதரன் 45 முறையும், ஹெராத் 26 முறையும், கும்ப்ளே 25 முறையும் 5 விக்கெட்டுக்கு மேல் சொந்த மண்ணில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் அஸ்வின் உள்ளார். கும்ப்ளேயை விரைவில் அவர் நெருங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் எல்கர் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். டெஸ்ட் போட்டியில் அவரது 200-வது விக்கெட் ஆகும். இந்த விக்கெட்டை எடுத்த 10-வது இந்திய பவுலர் ஆவார்.

    டெஸ்ட்டில் 200 விக்கெட்டை அதிக வேகத்தில் கைப்பற்றிய இடது கை வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்தார். அவர் 44 டெஸ்ட்டில் இந்த முத்திரை பதித்தார். இதற்கு முன்பு இலங்கை இடது கை பந்து வீச்சாளர் ஹெராத் 47 டெஸ்டில் 200 விக்கெட்டை எடுத்துள்ளார். அதை ஜடேஜா முறியடித்தார்.

    மற்ற இடது கை பந்து வீச்சாளர்களில் மிச்சேல் ஜான்சன் (ஆஸ்திரேலியா) 49 டெஸ்டிலும், ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) 50 டெஸ்டிலும் 200 விக்கெட்டை தொட்டு இருந்தனர்.
    Next Story
    ×