search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவிச்சந்திரன் அஷ்வின்"

    • இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

    டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து ரவிசந்திரன் அஷ்வின் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 500 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்தியர் என்றும், உலக அளவில் இரண்டாவது அதிவேகமாக 500 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. தற்பொழுது அவருக்கு உலகம் முழுக்க இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தன்னுடைய சாதனை குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் " இது ஒரு மிக நீண்ட பயணம். இந்த சாதனையை நான் என் தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். நான் விளையாடுவதை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு மாரடைப்பு வந்திருக்கலாம். அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருக்கலாம். அவர் எனக்கு எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் எல்லாமும் ஆக இருந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

    • ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும்.

    ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 9-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 499 விக்கெட்டுகளோடு இருந்த அஷ்வின், இங்கிலாந்து அணியின் ஓப்பனரான சக் க்ராலியை தனது 500வது விக்கெட்டாக வீழ்த்தியிருக்கிறார்.

    ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் போட்டிக்கு பிறகு அஷ்வினிடம் பேசிய, கும்ப்ளே, "ஆஷ்! வாழ்த்துகள். உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும். அதற்குக் குறைவாக விக்கெட்டுகளோடு உங்கள் கிரிக்கெட் பயணத்தை முடிக்க வேண்டும் என்று கூட நீங்கள் நினைக்க கூடாது" என்று பெருமிதமாக அவர் தெரிவித்தார்.

    அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரராக உள்ளார். கும்ளேவுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடத்தில உள்ளார்.

    உலக அளவில் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த போது 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவ்வேளையில் தற்போது அஸ்வின் தனது 98-வது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    அதேபோன்று குறைந்த பந்துகளை வீசி 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அஷ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத் 25528 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியிருந்த வேளையில் அஸ்வின் 25,714 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார்.
    • பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது.

    அஷ்வினை சைன்டிஸ்ட் என்று சேவாக் சமீபத்தில் பாராட்டியிருந்த நிலையில், அஷ்வினுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் அஷ்வின், இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

    2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுடன் 54 ரன்களை எடுத்தார். குறிப்பாக 2-வது இன்னிங்சில் ஷ்ரேயாஸ் உடன் இணைந்து அஷ்வின் அமைத்த பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வெற்றிக்கு 145 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதன்பின்னர் இணைந்த அஷ்வின் - ஷ்ரேயாஸ் இணை 71 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது.

    2-வது டெஸ்டில் பேட்டிங், பவுலிங் என அனைத்து டிபார்ட்மென்ட்டிலும் அஷ்வின் ஜொலித்தார். இதனை பாராட்டியிருந்த முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சேவாக் அஷ்வின் ஒரு சைன்டிஸ்ட் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அஷ்வினை பாராட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-


     



    அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர்களில் அஷ்வினும் ஒருவர் என்று கருதுகிறேன்.

    வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் அவர் எடுத்த 42 ரன்களை சதத்துடன் நாம் ஒப்பிட வேண்டும். இந்திய அணியின் லெஜெண்ட் வீரர் அனில் கும்ப்ளேவைப் போன்றவர் அஷ்வின். இந்திய அணியின் நெருக்கடியான நேரங்களில் மிகவும் கூலாக அஷ்வின் பலமுறை செயல்பட்டார்.

    பந்து வீச்சில் மட்டுமின்றி, சில ஆட்டங்களில் சிறப்பான பேட்டிங் மூலம் அணியை அவர் வெற்றி பெற வைத்திருக்கிறார்.

    வங்கதேச அணியின் மோமினுல் ஹக் மிகச்சிறந்த ஆட்டக்காரர். துரதிருஷ்டவசமாக அஷ்வின் கொடுத்த கேட்ச்சை அவர் பிடிக்க தவறி விட்டார். இதற்கானபேரிழப்பை வங்கதேச அணி எதிர்கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×