search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravichandran Aswin"

    • இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

    டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து ரவிசந்திரன் அஷ்வின் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 500 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்தியர் என்றும், உலக அளவில் இரண்டாவது அதிவேகமாக 500 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. தற்பொழுது அவருக்கு உலகம் முழுக்க இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தன்னுடைய சாதனை குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் " இது ஒரு மிக நீண்ட பயணம். இந்த சாதனையை நான் என் தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். நான் விளையாடுவதை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு மாரடைப்பு வந்திருக்கலாம். அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருக்கலாம். அவர் எனக்கு எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் எல்லாமும் ஆக இருந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

    • இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
    • 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

    அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் சிகரங்களை எட்டிப்பிடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    ×